Saturday, May 3, 2025
முகப்புஉலகம்அமெரிக்காடொனால்ட் டிரம்ப் : அதிபருக்கு போட்டியிடும் அமெரிக்க மைனர் - வீடியோ

டொனால்ட் டிரம்ப் : அதிபருக்கு போட்டியிடும் அமெரிக்க மைனர் – வீடியோ

-

ட்டோ சங்கர், விஜய் மல்லையா, ஈமு கோழி அதிபர், மகா பெரியவா ஜெயேந்திர சரஸ்வதி போன்ற ‘ஆளுமைகள்’ அனைவரையும் சேர்த்து செய்த கலவைதான் – டொனால்ட் டிரம்ப். குடியரசுக் கட்சியின் சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் டிரம்ப்.

டிரம்பின் வாய் ஒரு விசேடமான உறுப்பு. பொதுவாக மூளையில் உற்பத்தியாகும் சிந்தனைகளை வெளியிடும் உறுப்பாக அறியப்படும் வாய், டிரம்பிடம் வேறு வகையில் செயல்படுகின்றது. அவரது வாய் நாறத்தனத்தின் ஆழ அகலம் என்னவென்பதையும், மூளையின் தொடர்பின்றி அதற்கென்றே தனியாக கருத்துக்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளதா எனவும் நாசா விஞ்ஞானிகளாலேயே கண்டிபிடிப்பது சிரமம். நாற்பதாண்டு கால தொழில் நடவடிக்கைகள் அனைத்தையும் தனது வாயாலேயே அளந்துள்ளார் திருவாளர் டிரம்ப்.

எண்ணற்ற சந்தர்ப்பங்களில் பெண்களைக் குறித்து டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கள் அவரது தனிப்பட்ட மைனர் வாழ்க்கையிலிருந்து வருகின்றன. அமெரிக்க விஜய் மல்லையாவான டொனால்ட் டிரம்ப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருந்தாலும், அவருக்கு மனநிறைவை அளித்த தொழில்களாக சூதாட்ட விடுதிகளையும், அழகுப் போட்டிகளையுமே குறிப்பிடுகிறார். டிரம்பின் பழைய பேட்டி ஒன்றில், தனது கண்களுக்கு அழகு மட்டுமே திருத்தமாக தெரியும் எனவும், பெண்களின் மார்பகங்கள் தனக்கு எண்ணற்ற கற்பனைகளை தோற்றுவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்……

தங்கள் நாட்டின் அதிபர் பதவிக்கு பொருத்தமானவராக அமெரிக்க முதலாளி வர்க்கத்தால் டொனால்ட் டிரம்ப்பைப் போன்ற கழிசடையையே உற்பத்தி செய்ய முடியும் என்றால் உலக முதலாளித்துவத்தின் கோபுர கலசமாக அமெரிக்கா இருப்பது நியாயம்தானே?