500, 1000 செல்லாது -அம்பானி அதானிகளுக்கு முன்பே தெரியும் பா.ஜ.க – எம்.எல்.ஏ ஒப்புதல் வாக்குமூலம் !
ராஜஸ்தானின் கோட்ட மாவட்டத்தின் லண்ட்புரா, தொகுதியின் பா.ஜ.க. MLA பவானி சிங் ரஜாவத் தன் வாயாலேயே அம்பானிக்கும், அதானிக்கும் மற்றும் பல முதலாளிகளுக்கும் 500, 1000 – நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி 8-ம் தேதி அறிவிக்கும் முன்னரே தெரியும் அவர்களுக்கு ஏற்கனவே சூசகமான தவல் சென்றுவிட்டது எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தற்போது வெளியாகியுள்ள ரூபாய் நோட்டுக்கள் மூன்றாம் தரமானவை மேலும் இவை கள்ள நோட்டுக்கள் போலவே இருக்கிறது. தற்போது பாருங்கள் பலபேர் இன்று ஏ.டி.எம் வாசல்களில் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர், முன் ஏற்பாடாக தேவையான நோட்டுக்களை அடித்துவிட்டல்லவா இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும் அதை விடுத்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது போல நள்ளிரவில் இருந்து அமலுக்குவரும் எனச் சொல்லுவது எப்படி சரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ-வானது தற்போது வெளியாகியுள்ளது.

இந்த செய்திகள் வெளியானதும் தவளை தன் வாயால் கெடும் என்பது போல தன் கட்சியைப் பற்றி தானே இப்படி உளறிக்கொட்டிவிட்டோமே என்பதால் தற்போது அந்த வீடியோவில் நான் சொன்னதாக வருவது பொய் என மறுப்பு தெரிவித்துள்ளார் பவானி சிங். சில பத்திரிக்கையாளர்கள் கோட்ட-வில் உள்ள எனது இல்லத்துக்கு வந்து தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ரூபாய் நொட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை பற்றி பேட்டி எடுக்க வந்தனர் அவர்கள் “off-record’ எனச் சொல்லி சில விசயங்களைப் பேசினர் ஆனால் அவர்கள் பத்திரிக்கை தர்மத்தை மீறி “off-record” விசயங்களை வெளியிட்டுள்ளனர். என தன்நிலை விளக்கமளித்துள்ளார்.
இப்படி கையும் களவுமாகப் பிடிபட்ட பின்னரும் கூட அது நான் இல்லை என்றும் பின்னர் அவரே “off-record” எனச் சொல்லி இப்படி செய்துவிட்டார்களே என அங்கலாய்க்கவும் செய்கிறார், பேருந்தில் பணத்தை திருடியவன் எங்க அம்மா சத்தியமா இது என் பணம்தாங்க என்று சொல்லுவது போல இவர்கள் வகைதொகை இலாமல் மாட்டிக் கொண்ட பிறகும் அப்பட்டமாகவும் பச்சையாகவும் புலுகக் கூடியவர்கள் தான். கோடிக்கணக்கனோர் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கும் விவாத்திலேயே நான் சொன்னேனா? என சொன்ன எச்.ராஜா இருக்கும் கட்சிதானே, மெத்தப் படித்த கட்சியின் தேசியச் செயலரே இப்படி உளறும் போது பாவம் இன்னமும் பிற்போக்காக பின்தங்கி மாநிலத்தின் MLA இப்படிச் சொல்லுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
இவராவது பரவாயில்லை பஞ்சாப் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சஞ்சீவ் கம்போஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் புது நோட்டை மோடிக்கு முன்னரே வெளியிட்டுவிட்டார். இனி இது போன்ற பல உளறுவாய்கள் மேலும் பல உண்மைகளை வெளிப்படுத்தலாம். கோடிக்கணக்கான மக்களை பிச்சைக்காரர்கள் போல் ஒரே இரவில் நடுவீதிக்கு இழுத்துப் போட்டுள்ளார் மோடி, ஆனால் பண முதலைகளுக்கும், கார்பரேட் முதலாளிகளுக்கும் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு மேடையில் முதலைக்கண்ணீர் வடிக்கிறார். இவர்கள் தங்களுக்கு தாங்களே குழி தோண்டி அதில் படுத்துக் கொள்ளவும் செய்துள்ளனர், நமது வேலை ஆளுக்கொருபிடி மண் போட வேண்டியதே.
#WATCH: BJP MLA from Rajasthan's Kota Bhawani Singh claims Ambani & Adani had prior knowledge of the #DeMonetisation of Rs 500 & 1,000 notes pic.twitter.com/L8FRp1NofD
— ANI (@ANI) November 17, 2016
மேலும் தகவலுக்கு :
- Adani, Ambani knew of cash scrap, says Rajasthan BJP MLA Bhawani Singh Rajawat
-
Adani, Ambani knew of demonetisation, says BJP MLA Bhawani Singh Rajawat in off-record conversation