Saturday, May 10, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்கம்பம் : ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை தாக்கும் போலீசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கம்பம் : ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை தாக்கும் போலீசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

-

கம்பத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீதான காவல்துறை தாக்குதலைக் கண்டித்தும் பீட்டாவை தடை செய்யக்கோரியும் மறியல், ஆர்ப்பாட்டம்!

ம்பத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மோடி, ஓபிஎஸ் அரசை எதிர்த்து தோழர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு தோழர்கள் ஊர்வலமாக  கிளம்பினார்கள். கம்பம் சிக்னல் அருகே சென்ற போது டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் ஊர்வலத்தை தடுக்க முயற்சித்த போது தோழர்கள் அப்படியே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். மறியல் செய்த தோழர்களை காவல்துறை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த முயற்சித்தது. தோழர்களின் விடாமுயற்சியால் காவல்துறை பின் வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியது. அதன் பின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்த்து. மீண்டும் வந்த டிஎஸ்பி காவல் துறை வாகனத்தில் ஏறும்படி கூறினார்கள். வாகனத்தில் ஏறமுடியாது நடந்துதான் வருவோம் என்ற போது நிலைமையை உணர்ந்த காவல்துறை மீண்டும்  ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து செல்லுங்கள் என்றது. மக்கள் அதிகாரத்தின் இந்த ஆர்ப்பாட்டம் கம்பம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
கம்பம்.