privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காநெடுவாசல் ஹைட்ரோகார்பன் : வளர்ச்சியா அழிவா ?

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் : வளர்ச்சியா அழிவா ?

-

நெடுவாசல் வட்டாரத்தில் மத்திய அரசு அனுமதித்திருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மக்களுக்கு என்ன தெரியும் என்று எகத்தாளமாய் கேலி செய்கிறார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். குரங்குகள் கல்லால் இலங்கைக்கு பாலம் கட்டியதாகவும், அதற்கு நாசா புகைப்படம் இருப்பதாகவும் பேசியது மட்டுமல்ல, வழக்கு போட்டு உச்சநீதிமன்றத்தையும் அப்படி பேச வைத்த இந்த அடி முட்டாள்கள் அறிவியல் பற்றி பேசுவது மிகவும் எரிச்சலூட்டுகிறது.

தற்போது கல்வித்துறை நிபுணர்கள், அறிவியல் நிபுணர்கள், மத்திய அரசு அதிகாரிகள் என விதம் விதமாக பலரையும் இறக்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்தக் கேடும் இல்லை, மக்களுக்கு விளக்கமளித்தாலே போதும் என்று வகுப்பு எடுத்து வருகிறார்கள். இது சதி என்பதற்கு போபால் முதல் திருப்பூர் வரை ஏராளம் சான்றுகள் ரத்தமும் சதையுமாய் இருக்கின்றன. இருப்பினும் ஆளும் வர்க்கங்கள் இப்படி பிரச்சாரம் செய்யும் போது அதே அறிவியலை வாழ்வியலோடும், மக்களோடும் இணைத்து நாமும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அறிவியல் என்பது யாருடைய விருப்பு வெறுப்புக்கும் ஏற்ப திரியும் ஒன்றல்ல. அது இயற்கை குறித்து மனிதன் ஆய்வு நடத்தி கண்டறிந்து வரும் ஒரு துறை. இயற்கையின் விதிகளோடு ஆய்வு செய்து நிரூபிக்கப்படும் அல்லது வளர்க்கப்படும் உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. அதே நேரம் இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புக்கள் யாரால் எதற்காக பயன்படுத்த்தப்படுகின்றது என்பதற்கேற்ப இந்த உலகமும், மக்களும் அழிவையோ முன்னேற்றத்தையோ சந்திக்கிறார்கள். இன்றையே வாழ்வின் பல்வேறு வளர்ச்சியினை அறிவியல் சாதித்திருப்பது உண்மை போலவே முதலாளிகளின் இலாபவெறி அணுகுண்டு, புவி வெப்பமடைதல் உள்ளிட்டு பல அழிவுகளுக்கும் அறிவியலை பயன்படுத்துகிறார்கள்.

முதலாளித்துவ சுரண்டலுக்காக உலகமெங்கும் பல தொழிலாளிகள் சுரங்கங்களிலும், கட்டுமானப்பகுதிகளிலும், ஆலைகளிலும், தொற்று நோயாலும் சாகின்றனர். அறிவியல் உண்மை பேசும் பாஜக கட்சியினரோ இல்லை தூய அறிவியல் பேசும் ஆல்பர்ப்பஸ் அங்கிள்களோ எவரும் இந்த சாகும் பட்டியலில் இல்லை. அமெரிக்காவில் தேசபக்தி பேசும் குடியரசு – ஜனநாயகக் கட்சியின் காங்கிரசு உறுப்பினர்களின் பிள்ளைகளோ இல்லை இந்தியாவில் தேஷபக்தி பேசும் பாஜக – காங்கிரசு எம்பிக்களின் பிள்ளைகளோ போர்வீரர்களாக போரில் சாவதில்லை.

இங்கே இரண்டு வீடியோக்களை பாருங்கள். முதல் வீடியோவில் நெடுவாசலைச் சேர்ந்த சுரேஷ் என்பதவர் குவைத்தில் எண்ணெய் எரிவாயுத் துறையில் பணியாற்றுகிறார். ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் அவர் தொழில்நுட்ப ரீதியாக விளக்குகிறார். மக்கள் வாழாத இடங்களில் இத்திட்டங்களை கொண்டு வந்தால் அதை எதிர்க்க போவதில்லை என்று கூறும் அவர் நெடுவாசல் போன்ற விவசாயம் செழிப்பாக இருக்கும் இடங்களில் அத்திட்டங்கள் ஏற்படுத்தும் அழிவை விளக்குகிறார். இதை மத்திய அரசிற்கும் அதன் துறைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார். ஆகவே இவரை ஐ.எஸ் சதிகாரர் என்று ஆர்.எஸ்.எஸ் முத்திரை குத்த முடியாது.

இரண்டாவது வீடியோ இது குறித்து முழுமையான பார்வையையும், அனுபவத்தையும், அழிவையும் ஆதாரங்களுடன் தருகிறது.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஜோஷ் ஃபாக்ஸ் 1972-ல் தனது வீடு கட்டப்பட்டதையும் அங்கே தானும் தனது குடும்பத்தாரும் வாழ்ந்ததை விவரிக்கிறார். அதே ஆண்டில் அமெரிக்க அதிபர் நிக்சனால் “சுகாதாரமான குடிநீர் சட்டம்” முதன்முறையாக கொண்டு வரப்படுகிறது. அதாவது குடிநீர் என்பது மனிதனின் அடிப்படை குடியுரிமையாக ஏற்கப்படுகிறது. அந்தக் காலம்தான் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வின் ஆரம்பம் என்கிறார் ஜோஷ். 2009-ம் ஆண்டில் அவரது நிலம் ஒரு எண்ணெய் எரிவாயு நிறுவனத்திற்கு தேவைப்படுவதாக கடிதம் வருகிறது. ஒரு ஏக்கருக்கு 4750 டாலர் கிடைக்கும் என்றும் அந்தக் கடிதம் கூறுகிறது. அவரிடம் இருக்கும் 19.5 ஏக்கரை விற்றால் ஒரு இலட்சத்திற்கும் நெருக்கமான டாலர் கிடைக்கும். இது அவ்வளவு எளிமையானதா என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறார் ஜோஷ்.

அமெரிக்காவில் இருக்கும் இயற்கை எரிவாயு வளத்தை பயன்படுத்தினால் அந்நாடு எந்த நாட்டையும் எரிசக்திக்காக சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றகிறார் முன்னாள் துணை அதிபர் டிக் சென்னி. இதையேதான் வானதி சீனிவாசன் போன்ற தேஷ்பக்தர்களும் டிவி விவாதங்களில் கூறுகிறார்கள். 2005-ம் ஆண்டு துணை அதிபர் டிக் செர்னியால் தயாரிக்கப்பட்டு காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட எரிசக்தி முன்வரைவுச் சட்டம் பல்வேறு சுற்றுச்சூழல் சோதனைச் சட்டங்களிலிருந்து விலக்கு பெறுகிறது. எண்ணெய் எரிவாயுத் துறை எதற்கெல்லாம் விலக்கு பெறும்? பாதுகாக்கப்பட்ட குடிநீர் சட்டம், சுத்தமான காற்று சட்டம், சுத்தமான நீர் சட்டம், என பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் ஜனநாய முறைகளில் இருந்து எண்ணெய் எரிவாயுத் துறைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

ஜோஷ்ஃபாக்சின் ஆவணப்படம் – கேஸ் லாண்ட் GAS LAND

அதன் பிறகு அமெரிக்காவின் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய ஹாலிபர்ட்டன் தொழில்நுட்பத்தை வைத்து அமெரிக்கா எங்கும் துளைத்தெடுக்கிறார்கள். தற்போது 34 மாநிலங்களில் இந்த துளைகள் பரவி இருக்கின்றன. பூமியை குதறும் இந்த நுட்பத்திற்கு பெயர் “ஹைட்ராலிக் ஃபிராக்சரிங்”. இது நீரையும் சில வேதிப்பொருட்களையும் கலந்து சுமார் 8000 அடி வரை நிலத்தில் அனுப்பி குடைந்தெடுக்கிறது. இதை ஏதோ ஃபோர்வெல் போடும் பணியாக நினைக்க கூடாது. கிட்டத்தட்ட சிறு நிலநடுக்கங்கள் அல்லது வெடிப்பு கீறல்களை இந்த துளைப்பு பூமிக்குள் நடத்துகிறது. இந்தக் கலவையின் அதியுயர் அழுத்தம் எந்தப் பாறைகளையும், தடைகளையும் தகர்த்து தூளாக்கும்.

இந்தக் கலவையில் பயன்படுத்தப்படும் 500-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களில் பல நமக்கு தெரியாது, உச்சரிப்புக்கு கூட வாயில் வராது என்கிறார் ஜோஷ். தெரிந்த வேதிப்பொருட்களும் கூட பல சக்தியும் வீரியமும் அழிவும் வாய்ந்தவை. இதற்காக ஏராளமான நீரையும் பயன்படுத்துகிறார்கள் என்று அதன் அளவையும் மதிப்பிடுகிறார் ஜோஷ். அமெரிக்காவில் இருக்கும் கார்ப்பரேட்டுகளின் 4,50,000 எரிவாயு கிணறுகளை பதினெட்டால் பெருக்கி, அதை 127 மில்லியன் காலன்ஸால் பெருக்கினால் 40 டிரில்லியன் காலன்ஸ் நீர் 595 வேதிப்பொருட்களோடு சேர்ந்து………………..

ஜோஷ்ஃபாக்ஸ்

இது குறித்து அவர் அனைத்து நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு பேசுகிறார், யாரும் பதிலளிப்பதில்லை. ஆவணப்படத்தின் கடைசியில் இந்த படத்திற்காக நேர்காணலை மறுத்த நிறுவனங்கள் டைட்டிலாக வந்து போகின்றன. ஒருவேளை நாமும் அரசுத் துறைகளிடம் நமது நிபுணர்களை அனுப்பி நெடுவாசல் குறித்து கேள்வி எழுப்பினால் இதேதான் நிலைமை.

மேறகொண்டு முழு படத்தையும் நீங்களே பாருங்கள், வாய்ப்பிருப்பின் இந்தப் படம் குறித்து முழுமையாக எழுத முயல்கிறோம். இணையத்தில் எண்ணைய் எரிவாயு குறித்து ஏராளமான கட்டுரைகளும், வீடியோக்களும் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு அறிவாயுதத்தோடும் நெடுவாசல் போராட்டத்தை முன்னெடுப்போம். வேத காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று உளறும் பாஜக பண்டாரங்கள்தான் மக்கள் என்ன அறிவியலாளர்களா என்று திமிருடன் கேட்கிறது. அதற்கு உலகெங்கும் போராடிய மக்களும் அறிவியலாளர்களும் முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கு பாஜக மட்டுமல்ல அவர்களது ஆண்டையான அமெரிக்காவிடம் கூட பதிலில்லை.

இவ்வளவு அழிவுகளோடு எடுக்கப்படும் எரிபொருள் யாருக்கு பயன்படுகிறது? இன்னமும் மண்ணெண்ணைக்காக ரேசன் கடைகளில் இருக்கும் இந்திய மக்களுக்கா, இல்லை அமெரிக்காவின் ஏழைகளுக்கா? குடிநீர் பஞ்சம், தட்டுப்பாடு, வறட்சி ஆகியவை ஏதோ இயற்கை சார்ந்த துயரமாக பார்க்கப்படுவதால் இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம் தப்பிக்க நினைக்கிறது. ஆனால் உலக மக்களுக்கு எதிரி இயற்கையின் அழிவு அல்ல. இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்தான்.

நெடுவாசல் போராட்டத்தையும் இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும்.

  1. \\வேத காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று உளறும் பாஜக பண்டாரங்கள்தான் மக்கள் அறிவியலாளர்களா என்று கேட்கிறது. அதற்கு உலகெங்கும் போராடிய மக்களும் அறிவியலாளர்களும் முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கு பாஜகவோ அவர்களது ஆண்டையான அமெரிக்காவிடம் கூட பதிலில்லை.//

    உண்மை.இந்த முட்டாள்கள் எங்கு போனாலும் வந்து படுத்துகிறார்கள்.அண்மையில் நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் [பார்க்க.சுட்டி;

    http://www.hotstar.com/tv/neeya-naana/1584/dealing-with-food-adulteration/1000167390

    பேசிய RSS. மாமி ஒருவர் மாடு நஞ்சையே உண்டிருந்தாலும் அதன் கோமியத்தில் அந்த நஞ்சு வெளிப்படாது,கோமியம் நோய் தீர்க்கும் மருந்து என உளறினார்.அதனை கால்நடை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் ஆதாரங்களுடன் மறுத்தார்.அதற்க்கு அந்த மாமி சொன்னார்.

    ”நீங்க வெட்னரி டாக்டர் ங்கிறதுக்காக நீங்க சொல்றதை நான் ஏத்துக்க முடியாது”

    அரங்கமே சிரித்து விட்டது.இபபடிப்பட்ட முட்டாள்களுடன்தான் தமிழக மக்கள் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.

    • அகத்தியரின் சீடர் தேரையர் பற்றி உங்களுக்கு தெரியும்மா ? முடிந்தால் அவர்களின் மருத்துவ குறிப்புகளை படித்து பாருங்கள். நம் நாட்டை (ஹிந்துக்களை) பற்றி இளக்காரமாக பேசுவதை விட சொல்லும் விஷயத்தில் உண்மை இருக்கிறதா அதற்கு சாத்தியம் இருக்கிறதா என்று சிறிது சிந்தித்து பாருங்கள். Open brain surgery செய்ய முடிந்தவர்களால் plastic surgery செய்ய முடியாதா ? இதற்கு என்ன என்ன மூலிகை பயன்படுத்தப்பட்டது என்ற விளக்கங்களை அகத்தியர் கொடுத்து இருக்கிறார்.

      அந்த காலத்தில் மருத்துவத்துறையில் இந்தியா தான் உலகிலேயே முன்னோடியாக இருந்தது (உங்களை போன்ற சிகப்பு சட்டைகள் இந்த வரலாற்று உண்மையை கூட மறுப்பீர்கள்), உங்கள் சீனர்களும் இந்தியாவிற்கு வந்து தான் மருத்துவத்தை கற்று சென்றார்கள். இதற்கு எல்லாம் சமஸ்கிரத நூல்களிலும் (தமிழில் சித்தர் பாடல்களிலும்) விளக்கங்கள் உள்ளது, அந்த விளக்கங்களை படித்து விட்டு அதை அறிவியல் பூர்வமாக தவறு என்று நிரூபித்து காட்டுங்கள் பார்ப்போம்.

  2. //இவ்வளவு அழிவுகளோடு எடுக்கப்படும் எரிபொருள் யாருக்கு பயன்படுகிறது? இன்னமும் மண்ணெண்ணைக்காக ரேசன் கடைகளில் இருக்கும் இந்திய மக்களுக்கா, இல்லை அமெரிக்காவின் ஏழைகளுக்கா? //

    நெடுவாசல் மக்களும் இதைத்தான் கேட்கிறார்கள், எல்லா வளத்தையும் நாசாமாக்கிட்டு எங்களோட வாழ்வாதாரத்தை அழிக்க பாக்குறீங்கன்னு சொல்றாங்க. இயல்பா அவங்க இதை புரிஞ்சுகிறாங்க ஹைட்ரோ கார்பன் எடுக்கிறதால நம்மளோட வாழ்க்கை தரம் உயராது என்று.

  3. ஒன்று மட்டும் நிச்சயம் சொல்லலாம் ஏதோ ஒரு கூட்டம் திட்டமிட்டு தமிழக வளர்ச்சியை குலைக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்கிறது… இந்த மாதிரியான போராட்டங்களின் அடுத்த கட்டம் ஆயுதம் ஏந்துவது இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன், அதற்கு தான் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது அது இது என்று பல பொய் பிரச்சாரங்களை செய்கிறார்கள்.

    சரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு கங்கை திட்டத்தால் எத்தனை விவசாயிகள் அவர்களின் விலை நிலங்களை கொடுத்தார்கள் என்பதை யாருவுது யோசித்து பார்த்தோம்மா ?
    நாடு முழுவதும் ரயில் மற்றும் ரோடு போட்டார்கள் அது எல்லாம் என்ன ஆகாயத்திலா போட்டார்கள் விலை நிலங்கள் மற்றும் காடுகளை அழித்து தானே போட்டார்கள் அதை எல்லாம் வளர்ச்சி என்று தானே எல்லோரும் ஏற்று கொண்டார்கள்.

    தமிழகத்தில் எல்லோரும் கேட்கும் கங்கை காவேரி இணைப்பு திட்டத்தின் மூலம் எத்தனை விளை நிலங்கள் மற்றும் காடுகளை அழிக்க வேண்டியிருக்கும் அதனால் கங்கை காவேரி திட்டம் வேண்டாம் என்று சொல்வோம்மா ?

    இப்படியே எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்று தமிழகத்தின் வளர்ச்சியை முடக்கி கொண்டு இருந்தால் நாளை தமிழகம் இன்னொரு சோமாலியாவாக மாறிவிடும்.

    • Mr Manikandan,have you listened to the first video recording by Mr Suresh,an expert in oil exploration (a native of Neduvaasal)?If not,at least now,listen to his speech highlighting the dangers of hydro-carbon extraction at Neduvaasal before your blabbering and blind support to this project.Do not waste the time of Vinavu readers by your impertinent arguments.

  4. மத்திய அரசு கொண்டுவரும திட்டங்களால்தான் தமிழகம் சோமாலியாவாக மாறுகிறது. அதுசரி, பிரிட்டிஷ் காரர்கள் காடுகளை அழிக்கவும், இயற்கை வளங்களைச் சூறையாடவும், அவற்றை பிரிட்டனுக்குக் கொண்டு செல்வதற்கும்தான் முதன்முதலில் இரயில்வேக்களைப் போட்டார்கள் என்பதாவது தெரியுமா, தெரியாதா?

  5. உண்மையில் மத்திய அரசுக்குத் தமிழகத்தின்மீது அக்கறை இருந்தால் இந்தமாதிரி திட்டங்கள் கிடக்கட்டும், காவிரிநீர் உரிமை, மீனவர் படுகொலை-கொள்ளை, கேரளத்தின் பவானியாற்று நீர்க்கொள்ளை, ஆந்திரத்தின் பாலாற்றுநீர்க் கொள்ளை போன்றவற்றையெல்லாம் தடுக்கட்டுமே. தெலுங்கு கங்கைதிட்டத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், இப்போது வரும் நீரையெல்லாம் வழியில் திருடிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு மூத்திரம் போல்தான் தண்ணீர் வருகிறது. தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் பாஜகவின் இந்துக் கோட்பாடுகளுக்கு ஒத்துவருவதில்லை என்று அவர்கள் தமிழகத்தையே நாசப்படுத்திவிடத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் இல.கணேசனுடனும் மற்ற பாஜக தோழர்களும் சேர்ந்து தமிழகத்தை இந்தியாவுக்காக அழித்துவிடுங்கள். மற்ற மாநிலங்களில் தமிழர்கள் போய் பிச்சைக்காரர்களாக வேண்டும் என்ற நல்ல நோக்கம் உங்களுக்குத்தான் இருக்கிறது.

    • இந்த பிரச்சனைக்கும் ஹிந்து கோட்பாடுகளுக்கும் என்ன சம்பந்தம் ஏன் இல்லாத ஒரு விஷயத்தை எல்லாம் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள் ?

      தெலுங்கு கங்கை திட்டம் நல்லலெண்ணம் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது அதற்கு சாய்பாபா போன்றவர்கள் பெரும் பணம் செலவு செய்து இருக்கிறார்கள். ஆந்திர மக்கள் நினைத்து இருந்தால் எங்கள் நிலங்களை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம் என்று போராட்டம் நடத்தி இருக்கலாம், அப்படி செய்து இருந்தால் சென்னை மக்கள் பெரும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து இருப்பார்கள். இப்போது கூட புதிய மாநிலத்திற்கு முப்போகம் விளையும் அமராவதி பகுதியில் உள்ள இடங்களை எல்லாம் கொடுத்து இருக்கிறார்கள், வளர்ச்சிக்காக மக்கள் இம்மாதிரியான விஷயங்களை செய்கிறார்கள் அதனால் தமிழகத்தை விட ஆந்திர வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. நாம் எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்று சொல்லி அனைவரையும் விரட்டி கொண்டு இருக்கிறோம், விட்டால் தமிழக மக்களை கற்காலத்திற்கே அழைத்து கொண்டு போய்விடுவீர்கள்.

      சென்ற வருடம் நீதிமன்ற உத்தரவு படி கர்நாடக அரசு காவேரியில் நீர் திறந்து விட்டார்கள் அதற்கு கர்நாடகாவில் பெரும் கலவரம் வெடித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்… மேலும் சென்ற வருடம் காவேரி நீர் பிடிப்பு பகுதியில் 30 சதவீதம் மழை குறைவாக பெய்து இருக்கிறது, தற்போது பெங்களூரு போன்ற பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

      • The concerned villagers were forced by the CM to part with their fertile lands for construction of a grand capital city for AP.They have not volunteered to surrender their lands.Leave alone the farmers,what about the fate of the landless agricultural laborers in those villages?Our political leaders forget that they were democratically elected to rule the State.Once they become CMs,they act like emperors.AP CM wanted to record his name in history by constructing a capital city at enormous cost like Shajahan built Tajmahal.A committee headed by former IAS officer M.G.Devasahayam (who was involved in construction of Chandigarh as capital for Punjab/Haryana)had opined that the capital city in so many acres for AP is not at all necessary. CM of Telengana made several alterations in his secretariat building as per vasthu,built a lavish official residence for himself and going on donating costly gold jewels to Tirupathi and another temple at Govt cost to fulfill his prayers for creation of separate Telengana. Andhra villagers agreed for Telugu Ganga project.But,they steal water whenever the water is let out to TN by AP.

  6. அன்பு மணிகண்டனே மத்திய அரசு கொண்டுவருகிற ஒரு திட்டம் மக்களுக்கு பயனளிக்குமா அல்லது நிலத்தை அதன் வளத்தை உறிஞ்சி எவனுக்கோ தாரை வார்த்து இன்று அரசில் இருக்கும் அரசியல் வாதிகளின் குடும்பங்களை மட்டும் வளப்படுத்துமா?இதுதான் விவாதம்.சமீப காலங்களில் இந்த அரசு -அந்த அரசு என்றில்லை இதற்க்கு முன் ஆண்டவர்களும் மக்கள் நலனை விட நாட்டின் இறையான்மை கெளரவம் அனைத்தையும்விட பொருளாதாரம்…பொருளாதாரம்…என்று சொல்லித்தான் அனைத்தையும் பாழ்படுத்திக் கொண்டே வருகிறார்கள்.மக்களின் வாழ்வை அவர்கள் நலனை பாரம்பரியமான அவர்கள் வாழ்க்கை முறையை நிர்மூல படுத்திவிட்டு, என்ன நாசமா போகிற பொருளாதார வளர்ச்சி?நீர் வளத்தை நில வளத்தை வறண்டு சுண்ட வைத்துவிட்டு அந்த பொருளாதார வளர்ச்சியை வைத்து நாக்கு வழிக்கவா?இந்த கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டிய விவாதிக்க வேண்டிய ஒன்றை “என் பிஜேபி கொண்டு வந்த திட்டத்தை குறை சொல்வதா? என் மோடி என்ற தேவதூதன் செயல் படுத்தும் திட்டத்தை வசை பாடுவதா”என்ற எண்ணத்தில் இங்கு வந்து சிந்து பாடினால் மக்களின் கடும் வயிற்றெரிச்சலுக்குத்தான் ஆளாக வேண்டும்.இது பிஜேபிக்கு மட்டுமான எதிர்ப்பு அல்ல.காங்கிரஸ் காரனுக்கும் பங்குண்டு.அவனும் அமெரிக்கனுக்கு 123 போன்ற ஒப்பந்தங்களால் அடிமை பட்டயம் எழுதி கொடுத்தவந்தான் தான்.ரயில் போட்டதையும் ரோடு போட்டதையும் இதற்க்கு உதாராணமாய் எழுதுகிறீரே உம்மையெல்லாம் எப்படி வளர்த்து விட்டிருக்கிறார்கள்?நிலத்தையே மலடாக்கி நீர் வளத்தையே கபளீகரமாக்கும் ஒரு மாபெரும் ரசாயாண சுரங்க தோண்டலை ரோடு போட்டதற்க்கும் மரம் வெட்டியதற்க்கும் இணையாக்கும் உங்களின் சிந்தனை….எப்பா…பயமா இருக்கிறது உங்களின் தலைவர்களிடம் நாடு…எங்கே போகிறோமா..

  7. இந்த நெடுவாசல் திட்டம் உண்மையில் பயனளிக்கும் திட்டம்தானா அல்லது நம் நாட்டு அரசியலின் சாபக்கேடான பீதியூட்டலா என்பதை விவாதிக்கலாம்.ஏனெனில் இங்கே எல்லாம் அரசியல்.ஒருவன் கொண்டு வந்ததை இன்னொருவன் அதிகாரத்திற்க்கு வரும்பொழுது கட்டாயம் மாற்றியே தீரவேண்டும்.அது எவ்வளவு மக்கள் பயனளிக்கும் திட்டாமாக இருந்தாலும் அதை தொடர்வது கெளரவகுறைச்சல் என்ற அளவிற்க்கு புரையோடி புளுத்துப்போன அரசியலைத்தான் அனைவரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.அதிலும் தமிழ்நாட்டில் சொல்ல வேண்டியதே இல்லை..திமுக காரன் சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு வைத்தாலும் அதிமுக காரன் வந்து அந்த கல்லை பிடுங்கி போட்டுவிடுவான் அல்லது அவன் அதில் புது கல் ஒன்றை நட்டுவிட்டு போவான்.அந்த அளவிற்க்கு பைத்தியம் பிடித்து திரிகிற அரசியல் இங்கே நடக்கிறது.அந்த வகையில் இந்த திட்டமும் அரசியலானதா ?அவசியமானதா? விவாதிக்கலாம்.அதை விடுத்து சமூகவிரோத பயங்கரவாத ஆர் எஸ் ஆர் எஸ் இயக்கத்தின் மூளை வறண்ட சித்தாந்தத்தை மூக்கில் ஏற்றிக்கொண்டு இங்கு வந்து பிளாஸ்டிக் சர்ஜரி சமஸ்கிருதம் என்று உளறிக்கொண்டிருந்தால் அது விவாதமல்ல, வாந்தி.செரிக்காமல் குமட்டிக்கொண்டு வருவதை இங்கு வந்து கக்கக்கூடாது.உங்கள் பூணூல் கூட்டத்தின் மத்தியில் ஆளாளுக்கு வாந்தி எடுத்துக்கொண்டு “ஆகா நம் வாந்தி என்னா…மனம்”என்று புளங்காகிதம் அடைந்து கொள்ளுங்கள்.

    • காரைக்கால் நாகப்பட்டினம் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கிறார்களே அதனால் அந்த பகுதிகளில் விவசாயம் அழிந்தா போய்விட்டது ?

      நிலக்கரி மூலம் செயல்படும் மின் உற்பத்தி நிலையங்களால் பெரும் சுற்றுப்புற சூழல் கேடுகள் உள்ளது அதனால் அதை எல்லாம் மூட சொல்லி போராட்டம் நடத்துவீர்களா ?

      நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தால் பல பாதிப்புகள் அதனால் அதை மூட சொல்லி போராட்டம் நடத்துவீர்களா ?

      எதற்கு எடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று போனால் பாதிப்பு மக்களுக்கு தான், .

      • //நிலக்கரி மூலம் செயல்படும் மின் உற்பத்தி நிலையங்களால் பெரும் சுற்றுப்புற சூழல் கேடுகள் உள்ளது அதனால் அதை எல்லாம் மூட சொல்லி போராட்டம் நடத்துவீர்களா ?

        நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தால் பல பாதிப்புகள் அதனால் அதை மூட சொல்லி போராட்டம் நடத்துவீர்களா ?……….//

        நிச்சயமாக, இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்றால் கண்டிப்பாக அதனையும் எதிர்த்து நாங்கள் போராடுவோம். மின்சாரத்தை காட்டிலும் விவசாயம் தான் எங்களுக்கு முக்கியம். மின்சாரம் இல்லாமல், தொழில்நுட்பங்கள் இல்லாமல் மனிதனால் வாழ முடியும், ஆனால், உணவும், குடிக்க சுத்தமான நீரும், காற்றும் இல்லாமல் யாராலும் வாழ முடியாது. இன்னும் கூற போனால் தொழில்நுட்பம் தான் மனிதனுக்கு மிக பெரிய எதிரியே.மனிதனுக்கு மட்டுமல்லாமல், இந்த உலகையே இயக்கி கொண்டிருக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும், உயிர் சங்கிலி தொடருக்கும் அறிவியல் தொழில்நுட்பம் தான் மிக பெரிய எமனாக வந்து வாய்க்க போகிறது. எப்படி பிளாஸ்டிக் என்கிற ஒன்றை கண்டுபிடித்து உலகையே நாசமாக்கினோமோ. அதே போல் தொடர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் நாம் இந்த உலகின் ஆன்மாவை சாகடித்து கொண்டு வருகிறோம். தொழில்நுட்பம் என்கிற பெயரால் இயற்கைக்கு நாம் இழைக்கும் ஒவ்வொரு துரோகத்திற்கும், நிச்சயம் ஒரு நாள் இந்த இயற்க்கை நம்மை கடுமையாக பழி வாங்கியே தீரும்.

        மத மூடநம்பிக்கைகளில் இருந்து மட்டுமல்ல, அதை விட மிக மோசமானதும், ஆபத்தானதுமான உலகையே சீரழிக்கும் இது போன்ற ‘போலி’ அறிவியலில் இருந்தும் மனிதன் விடுபட வேண்டும், இயற்க்கை காப்பாற்ற பட வேண்டும்.

  8. மணிகண்டன் உங்களுடைய வேறு வேறு பதிவுகளில் ஒரு மேட்டுகுடித்தனம் தெரிவதை இங்குள்ள அனைவருமே அறிந்திருப்பார்கள்.”நான் காரில் கோயிலுக்கு போனேன் பிச்சைகாரர்களின் தொல்லை தாங்கவில்லை”என்ற பாணியில் அடிக்கடி பதிவுகள் இருப்பதை பார்க்கிறோம்.ஆக விவசாய பாதிப்பு விளைநிலங்களின் பாதிப்பு என்பதை பற்றியெல்லாம் என்ன தெரியும் உமக்கு?எனக்கும் தெரியாது.ஆனால் அவர்களின் வாழ்க்கை முறை உழைப்பின் முறை புரிந்து கொள்ள முடிகிறது.நமக்கும் அவர்களுக்கும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்க்கு வாழ்க்கை வேறுபாடு இருப்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.அவர்களோடு ஒப்பிட்டால் கணிணி தட்டி கருத்து சொல்லிகொண்டிருக்கும் நாம் வெறும் மேனாமினுக்கிகளே..கம்னியூஸ்ட்டுகளை பழி வாங்குகிறேன் என்ற நினைப்பிலும்,”எங்கள் மோடி மாமாவை”ஆதரிக்கிறேன் என்ற பெயரிலும் நம் வயிறு நிறைக்கும் விவசாயிகளின் கவலையை அவர்கள் பயத்தை, வெட்டியாய் போராடுகிறார்கள் என்று திருப்பினால், மணிகண்டன் ,அது பெரிய துரோகம்.தொழில் வளம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் நிலைப்புத்தன்மைக்கும் ஆதாரம்தான்.அது நம்மை சுயச்சார்பு உள்ளவர்களாக ஆக்குவதற்க்கா?அல்லது தான் செத்து எங்கிருந்து வந்தவனை இங்கிருந்து அள்ளிச்செல்ல செய்வதற்க்கா?ஒரு பெரிய தொழில் உற்பத்திக்கு சில தியாகங்களை செய்யலாம்.ஊரையே அழித்து ஒரு சுண்டைக்காயை உற்பத்தி செய்தால் தகுமா?இங்கே தொடர்ந்து அந்த கதைதான் நடந்து கொண்டிருப்பதாய் தெரிகிறது.அணு ஆற்றல் இல்லாத மின் உற்பத்திக்கான மாற்று வழிகள் ஏராளம் இருந்தும் அரசு கொஞ்சமும் அதில் அக்கறை செலுத்தவோ ஏன் பரிசீலிப்பதற்க்கோ கூட தயாரில்லை என்ற குரலும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.இன்னும் போதுமான மின் உற்பத்தி நம் நாட்டில் இல்ல்லை.இதோ கடுங்கோடை வ்றுத்தெடுக்க வருகிறது.கரண்ட்டும் இல்லாமலாக போகிறது.தொழில் வளர்ச்சி தொழில் வளர்ச்சி என்று கூவுவதில் மட்டும் குறையில்லை.எல்லா அதிகார வர்க்கமும் அரசு திட்டங்களும் சாமான்ய மக்களிடமிருந்தே அவர்களின் அஸ்திவாரத்தை பிடுங்குவதையே வளர்ச்சி வளர்ச்சி என்று சூரையாடினால் அவர்களை அச்சம் பீடிக்காதா?ஒரு பொறுப்புள்ள கட்சியின் பிரதிநிதி,” மாநில நலனுக்காக ஒரு மாவட்டம் ஒழிக்கப்பட்டால் பரவாயில்லை” என்ற ரீதியில் கருத்து சொல்கிறார் இவை அந்த மக்களை என்ன மன நிலைக்கு உள்ளாக்கும்?மணிகண்டன் இந்துத்துவ சாயத்தில் உங்களை முக்கி எடுத்திருக்கிறார்கள்.அதை கழுவி களைந்து வெளியே வாருங்கள்.இங்கே என்ன விவாதம் நடந்தாலும் மக்களின் பக்கத்தில் உங்கள் சிந்தனை இல்லை.இந்துத்துவத்தையும் இந்துத்துவர்களையும் புனித படுத்துவதில்தான் இருக்கிறது.இது சிந்தனை மழுங்கிய நிலை.இது உங்கள் ஆன்மாவை அழுகச்செய்துவிடும்

    • நான் விவரம் தெரியாமல் கருத்து சொல்லவில்லை, எங்கள் கிராமத்தில் விவசாய நிலம் சொந்தமாக இருக்கிறது அதனால் விவசாயிகள் பிரச்னை பற்றியும் தெரியாமல் நான் பேசவில்லை…

      இப்போது என் கவலையெல்லாம் சென்னை மெரினாவில் நடந்தது போல் இதுவும் வன்முறையில் முடிய கூடாது என்பதே யாரோ மக்களை போராட்டம் என்று சொல்லி தவறான பாதையில் அழைத்து செல்ல பார்க்கிறார்கள் என்று சந்தேகப்படுகிறேன்.

      இந்த மாதிரியான தொடர் போராட்டங்களின் அடுத்தகட்டம் வன்முறை அல்லது ஆயுத போராட்டமாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது, கடவுள் தான் தீயவர்களிடம் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும்.

      • ஆம்.. எல்லாம் வல்ல கடவுள் ‘மோடி’ எனும் கொடிய தீயவனிடமிருந்து இந்த தமிழ் மண்ணை காப்பாற்ற வேண்டும். கவலை வேண்டாம் மணிகண்டன், உங்களை போன்று எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் அவர் உங்களின் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்.

        • நீங்கள் பிரச்சனையின் தீவிரத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன், தமிழகத்தில் சில வருடங்களாக பிரிவினை தீவிரவாத பிரச்சாரங்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது ஆனால் தமிழக மக்களிடம் அதற்கு இதுவரையில் ஆதரவு இல்லை.

          இந்த மாதிரி எதற்கு எடுத்தாலும் போராட்டங்கள் என்று நடத்தப்படுவதற்கு பின்னணியில் சதி திட்டம் இருக்குமோ என்று சந்தேகப்படுகிறேன்.,, தீவிரவாதிகள் மக்களோடு கலந்து பொது சொத்துக்கும் காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தினால் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல்துறை நடவடிக்கை எடுக்கும் அதை வைத்து காவல்துறை அராஜகம் மனித உரிமை இல்லை அது இது என்று பிரச்சாரம் செய்வார்கள். அதன் மூலம் தீவிரவாதத்திற்கு மக்களிடம் ஆதரவை பெறலாம் என்பது தேசவிரோதிகளின் சதியாக இருக்கும்.

          நான் சந்தேகப்பட்ட மாதிரியே மெரினாவில் போராட்டம் வன்முறையில் முடிந்தது அதற்கு இந்த கூட்டங்கள் காவல்துறை மீது பழி போட்டடார்கள்.

          தமிழகம் வன்முறை கூடாரமாக மாற கூடாது என்பது என் விருப்பம்.

          • மணிகண்டன் இதைத்தான் கல்லுலிமங்கன் களின் கைங்கர்யம் என்பது.உம்மை எந்த நியாயம் கொண்டும் ஒரு அங்குலமும் நகர்த்தி வைக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்.உங்களின் முகங்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்குத்தான் மாறடிக்க வேண்டி இருக்கிறது.இது போக மனசாட்சி என்ற ஒன்று என்றேனும் உங்களை தட்டி எழுப்பிவிடாத என்ற நப்பாசையும் எனக்கு இருக்கிறது.பிரச்சினையின் தீவிரத்தை நாங்கள் பிரிந்து கொள்ளவில்லையா?யாருக்கு பிரச்சினை? போராடும் மக்களுக்கல்லவா பிரச்சினை.அதை ஆட்சியாளர்களில்லையா புரிந்து கொள்ளாமல் போராடும் மக்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கிறார்கள்.தமிழகத்தில் பிரிவினை தீவிரவாத பிரச்சாரங்கள் நடப்பதாக அதிதீவிர உளவுத்துறை நிபுணரைப்போல கண்டுபிடித்து கருத்து பகிர்கிறீரே..தமிழகம் தனிநாடு கோரிக்கை வைத்த மாநிலமாச்சே..இன்று அந்த கோசம் வெகுவாக குறைந்தல்லவா இருக்கிறது.எந்த கட்சிகள் “அடைந்தால் தனிநாடு இல்லையேல் சுடுகாடு”என்று போராடினவோ அந்த கட்சிகள் அனைத்தும் தேசிய கட்சிகளோடு கூட்டு சேர்ந்து முழு இந்தியாவையும் ஆண்டு முடித்திருக்கின்றன.ஆனாலும் தனிநாடு கோசம் அங்கங்கே மிக ஈனஸ்வரத்தில் கேட்டுக்கொண்டு இருப்பதும் உண்மை.இதுவும் புதிதல்ல.ஆரம்பகாலங்தொட்டு அவை ஒலித்தபடியேதான் இருக்கிறது.இதையெல்லாம் சொல்லி மக்களின் போராட்ட உணர்வை போராட்டத்திற்க்கு காரணமான அவர்களின் அச்சத்தை கொச்சைப் படுத்துகிறீர்களே இதுதானே ஆபத்து.பிரிவினை வாதத்திற்க்கு எண்ணை ஊற்றும் வேலையல்லவா இது.தேசப்பற்று என்பது சுதந்திர, குடியரசு தின கொண்டாட்டங்களும் தேசியகொடி ஏற்றல் ஜனகனமன பாடுவதும் போன்ற சம்பிரதாயங்கள் தானா? மற்றபடி மாநில நலனோ மாநில மக்களின் உணர்வோ கண்டுகொள்ளவே படாது என்றால் பிரிவினைவாதிகள் ஏன் ஊக்கம் பெற மாட்டார்கள்?பிரிவினைவாதிக்ளோடு மக்கள் ஏன் கைகோர்க்க மாட்டார்கள்?தீர்வு இந்த சிந்த்னையில்லவா இருக்கிறது.போராடும் மக்களெல்லாம் பிரிவினை வாதிகள் என்று முத்திரை குத்தினால் ஒட்டு மொத்த மாநிலமும் பிரிவினை வாத பகுதியாய மாறும்.பிறகு ஏது இந்தியா?மக்களின் பாரம்பர்யம் உணர்வு நம்பிக்கை இவைகளை புரிந்து அவர்களை ஏற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது ஒற்றுமை_ இணக்கம் ஒருமைப்பாடு.என்னைப்போல நீயும் இரு என்ற கட்டாயப்படுத்தலில் அல்ல.கட்டாயப்படுத்தல் கிளர்ந்தெளச்செய்யும்.அதில் அத்தனையும் பொடிப்பொடியாய் நொறுங்கிப் போகும்.உங்களின் சித்தாந்தம் என்னை தழுவ வேண்டுமா அது அறிவார்ந்த முறையில் விளக்கப்பட வேண்டும்.மிரட்டலால் ஆயுதத்தால் சித்தாந்தம் பரவாது.அது நல்லவையாக இருந்தாலுமே தூக்கி எறியத்தான் படும் நினைவில் கொள்க.

        • சமுதாயம் பெட்ரோலுக்கு அடிமையாக இருக்கும் போது தலைவன் என்ன செய்ய முடியும்? மோடிக்கு பதிலாக யார் இருந்தால் என்ன ? நீங்கள் என்ன மாதிரி நிலைப்பாடு எடுத்து இருப்பீர்கள் ?

          பெட்ரோல் எங்கே கிடைக்கிறதோ அங்கே எடுக்க தான் நினைப்பார்கள் . ஏற்கனவே கூடங்குளம் , கல்பாக்கம் என்று அதிக ரிஸ்க்கான ப்ராஜக்டுகள் எடுத்து கொண்ட தமிழக தலைவர்கள் நாற்பது கோடிக்கு இந்த ரிஸ்க்கை வேண்டுமா என்று சீர் தூக்கி பார்க்க தவறி விட்டார்கள் .

          அது கூட தவறு , அந்த அறிவு இல்லாதவர்களை தேர்ந்தெடுத்த வாக்காளர்கள் தான் மூடர்கள்

          ஜனநாயக நாட்டில் கூட்டு பிராத்தனை செய்து தீர்வை பெற முடியும் என்றால் , பக்த கோடிகளுக்கு அறிவை தர சொல்லி வேண்டுங்கள் . ஒரு வேளை கிடைக்கலாம் , குருடர்கள் பார்க்கும் போது இதுவம் நடக்கும்

          • Just because people are in need of petrol,hydro-carbon project cannot be started in agricultural lands.Does Raman travel by bullock-cart?
            There was a person in TN who always blamed the politicians as fools with some peculiar exceptions like Chandrasekar who sold gold held by RBI and the present PM.Yes,I am telling about late Cho.He considered himself as super intelligent.But,during his tenure of 6 years as nominated Rajya Sabha MP between 1999-2005,he never spoke about any national issues in the Rajya Sabha.Raman wanted to call himself as super intelligent and that is why,he calls all TN politicians and the people of TN as not having brains.If he is so intelligent,he should offer solutions to the problem or prove the critics of the hydro-carbon project wrong.

  9. பிரேக்கிங் செய்வதால் எவ்வளவு ஏக்கர் பாதிக்கும் என்கின்ற புள்ளி விவரம் மக்களுக்குள் ஒரு அதிர்வலையை ஏற்படுத்துகிறது .

    அதே போல ரியல் எஸ்டேட் மனைகள் வாங்கியதால் எத்துனை ஏக்கர் அழிக்கப்பட்டது , எத்துனை புதிய போர் வெல் போடப்பட்டு , நிலத்தடி நீர் எவ்வளவு குறைந்தது என்பதற்கான புள்ளி விவரம் ஏதேனும் உள்ளதா ?

    • One wrong cannot justify another wrong.Just because real estate people were allowed to convert agricultural lands into plots,we need not allow hydro-carbon project.At least, in the case of real estate development,only such piece of agricultural land converted into plots will be lost.But,in the case of hydro-carbon,entire district will suffer from water scarcity,pollution,loss of cultivable lands etc.

  10. விளங்குகிறதா மணிகண்டன்….எந்த தெளிவும் இல்லாத, தீர்க்கமான எந்த பார்வையும் இல்லாத நிலையில்தான் இவ்வளவு நேரமும் கருத்து பதிந்து கொண்டிருக்கிறீர்கள்.மெரினாவில் நடந்தது போல் போராட்டம் வன்முறையில் முடிந்து விடக்கூடாதே என்ற கவலையில்தான் இவ்வளவு நேரமும் அழுது கொண்டிருந்தீர்கள் இல்லையா!?மெரினாவில் வன்முறைதான் நடந்ததா?மெரினாவில் நடந்தது வன்முறை என்று சொல்வது யார்?வன்முறையை விதைத்த காவல் துறை.காவல் துறைக்கு உத்தரவிட்ட அரசு.அந்த அரசுக்கு ஆதரவான சிலர்..மத இன அடையாளம் மறந்து இணைந்த மக்கள் மேல் பொறாமை கொண்ட ஒரு வெறித்தனமான கும்பல்.இவர்களைத் தவிர மெரினாவில் கூடிய மக்களில் வன்முறையாளர்கள் இருந்தார்கள் என்று யாரும் கூறவில்லை.மாறாக கூடிய மக்களின் அமைதியை ஒற்றுமையை உலகமே வியந்து கொண்டாடியது.போராட்டம் என்பது ஜனநாயகத்தின் மிக முக்கிய வடிவமில்லையா?போராட்டம் தானே ஜனநாயகம்.போராட்டம் யாருக்கு பயங்கரமாக இருக்கும்?சுதந்திர போராட்டம் வெள்ளையனுக்கு பயங்கரமாக தெரிந்தது.இன்றைய போராட்டம் அதிகார உச்சத்திலிருந்து ஆண்டு அனுபவிக்கும் ஆட்சியாளனுக்கு பயங்க்ரமாக தெரிகிறது.மணிகண்டனுக்கு ஏன் போராட்டம் பயத்தை தருகிறது?நெடுவாசல் திட்டம் நன்மையா தீமையா எனக்குத் தெரியவில்லை.இரண்டு தரப்பும் தங்களுக்கு சாதகமாய் ஆதராம் காட்டுகிறது.ஆனால் அந்த மக்களின் அச்சம் நியாயமானது.அச்சத்தை போக்க வேண்டியது அரசின் கடமை.செய்தார்களா?இன்றைக்கு அதிகார வர்க்கம் இணக்கம் காட்டுகிறது.காரணம் போராட்டம் விண்ணை முட்டும் பொழுது அடிபணிந்து பேசுகிறார்கள் அரசின் ஏவலாளிகள்.துவக்கத்தில் இவர்களின் அதிகார தொணி எவ்வாறு இருந்தது?H ராஜா இல கனேசன் த.செளந்தரராஜன் பொன்னார் அனைவரும் மணிகண்டன் துவக்கத்தில் சொன்ன அதே தொணியில்தான் மிரட்டினார்கள்.இது என்ன போக்கு?இவர்கள் யாரை ஆள்கிறார்கள்?யாருக்காக ஆள்கிறார்கள்?திட்டம் முற்றும் நன்மையாகவே இருந்தாலும் இந்த மிரட்டலும் மிடுக்கும் மக்களிடம் தேவையா?சரி..அவர்களின் அதிகார நாற்காலி ஆணவத்தை தருகிறது!மணிகண்டனுக்கு என்ன அவர்களை வழிமொழிய?இந்த வினாவைத்தான் மணிகண்டன் உள்முகமாய் சிந்திக்க வேண்டுகிறேன்.இந்த சிந்தனையில் இருக்கிறது..மணிகண்டன் உற்பத்தி செய்யப்பட்டது..எப்படி என்பது..

Leave a Reply to sooriyan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க