Monday, May 12, 2025
முகப்புசெய்திசீர்காழியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது

சீர்காழியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது

-

சீர்காழில் விவசாயியை வாழவிடு என்ற முழக்கத்தை முன் வைத்து    மே 22. 2017 திங்கள் அன்று நடைபெற இருந்த பொதுகூட்டத்திற்கு போலிஸ் அனுமதி மறுத்த காரணத்தினால், இன்று  மே 23 செவ்வாய்கிழமை காலை 10 மணி அளவில் காவல் துறையை கண்டித்து சீர்காழி பழையபேருந்து நிலயம் அருகில் வாயில் கருப்பு துணிகட்டி மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளார் தோழர் ராஜு தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

தற்போது தோழர் ராஜு உட்பட மொத்தம் 75 தோழர்கள் சீர்காழி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் சிறை  வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மண்டபத்தில் உணவு உண்ன மறுத்து பெயர் கொடுக்க மறுத்து வாயில் கருப்பு துணி கட்டி விடுதலை ஆக மறுத்து பொதுகூட்டத்திற்க்கு அனுமதி தரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு – 98434 80587.