Thursday, April 15, 2021
முகப்பு செய்தி சீர்காழியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது

சீர்காழியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது

-

சீர்காழில் விவசாயியை வாழவிடு என்ற முழக்கத்தை முன் வைத்து    மே 22. 2017 திங்கள் அன்று நடைபெற இருந்த பொதுகூட்டத்திற்கு போலிஸ் அனுமதி மறுத்த காரணத்தினால், இன்று  மே 23 செவ்வாய்கிழமை காலை 10 மணி அளவில் காவல் துறையை கண்டித்து சீர்காழி பழையபேருந்து நிலயம் அருகில் வாயில் கருப்பு துணிகட்டி மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளார் தோழர் ராஜு தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

தற்போது தோழர் ராஜு உட்பட மொத்தம் 75 தோழர்கள் சீர்காழி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் சிறை  வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மண்டபத்தில் உணவு உண்ன மறுத்து பெயர் கொடுக்க மறுத்து வாயில் கருப்பு துணி கட்டி விடுதலை ஆக மறுத்து பொதுகூட்டத்திற்க்கு அனுமதி தரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு – 98434 80587.

 1. திருத்துறைப் பூண்டி பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து தற்போது சீர்காழிப் பொதுக் கூட்டத்திற்கும் போலீசு அனுமதி மறுத்திருக்கிறது போலிசு! சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்பதுதான் போலிசுக்கு கவலை என்றால் அந்த புடுங்குற வேலைக்குத்தான் ஜீப்,கார்,வேன்,தலையில இரும்புத்தொப்பி, கையில உருட்டுக் கட்டை, காலுக்கு பூட்சு, தோள்ல ரெண்டு பட்டை, இதுபோக சம்பளம், அலவன்சு,போனசு, டூட்டியில செத்தா பல லட்சம்னு கவர்மென்ட் வாரிக் கொடுத்திருக்கு! இவ்வளவையும் வச்சுக்கிட்டு சட்டம் ஒழுங்கை காப்பாத்த முடியலைனா,எனக்கு வேலை செய்யத் திறமையில்லை, தகுதியில்லைன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போயித் தொலைங்க! அந்த சட்டம் ஒழுங்க மக்கள் பாத்துக்குவாங்க!

 2. தமிழகத்தில் தொடர்ச்சியாகா மக்கள் அதிகார அமைப்புக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கிறது காவல் துறை.

  இந்த நாட்டுக்கு உண்ண உணவு அளிக்கும் விவசாயி இன்று பல்வேறு போராட்டங்கள் நடத்தி,,ஆடை கலைந்து முழு நிர்வாணமாய் டெல்லி வரை போராடி பார்த்தும் இந்த கேடு கெட்ட அரசு செவி சாய்க்க வில்லை-எனில் இந்த அரசுக்கு தடை செய்வதா????

  நாடு முழுவதும் 16-ஆண்டுகளில் 2,50,000-விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
  விவசாயியின் அழிவு,,, இச் சமூகத்தின் பேரழிவு..விவசாயத்தை காப்பதற்காக “விவசாயியை வாழ விடு”-என பேசுவதுக்கு தடை விதிப்பதா??

  மக்களின் வாழ்வாதர பிரச்சனை பேசினால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடுமா???
  தேசிய அளவில் சட்டம் ஒழுங்கு காப்பதாக தமிழ்நாடு காவல்துறை 5-வது இடத்தில் உள்ளது. அப்பேர்பட்ட திறமை மிக்க காவல்துறை(பில்டிங் ஸ்டாங்கு,,,ஆனா பேஸ்மட்டம் வீக்கு-ங்க) … சமூக சீரழிவு கூத்தாடி நடிகைகளுக்கும்,,,
  நாட்டை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கும்,,,,மதவெறி பிடித்த சாமியார் கும்பலுக்கும்,, எவ்வித தங்கு தடை இன்றி பாதுகாப்பும் அனுமதியுண்டு…
  மக்கள் வரி பணத்தில் உண்டு கொழுத்து
  இயங்கும் காவல் துறைக்கு சட்டம் ஒழுங்கு காப்பதற்கு துப்பில்லையா??
  நயவஞ்சக தனமாக தடை விதிக்கும் காவல் துறை எதிராக போராடுவோம்…
  தடையை உடைத்தெறிவோம்..
  ஊர்கள் தோறும்,,
  தெருக்கள் தோறும்,, “விவசாயியை வாழ விடு”-என்ற முழக்கத்தை முழங்க செய்வோம்…
  அதிகாரமற்ற காவல் துறையை தூக்கியெறிவோம்-அதிகாரத்தை நாமே கையிலெடுப்போம்– நாங்கள் சோறு தின்னுகிற கூட்டம் …தடை விதிப்பவர்கள் சோறு தவிர்த்து (ப்ப்ப்+ஈ)தின்னும் கூட்டம் என நிரூபித்து கொண்டே இருக்கட்டும்

Leave a Reply to M.SELVAKUMAR,CUMBUM பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க