Thursday, May 1, 2025
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்ஜப்பான் அணு உலை விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் பாதிப்பு

ஜப்பான் அணு உலை விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் பாதிப்பு

-

டோக்கியோவின் வடக்கே உள்ள ஜப்பானின் ஓராயை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்

ப்பான், இபாரகி மாகாணத்தில் உள்ள ஓராயை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில்(Oarai research and development centre) ஏற்பட்ட புளூட்டானியம் அணுக் கசிவினால் ஐந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை ஜப்பான் அணு ஆற்றல் நிறுவனம் (JAEA) உறுதி செய்துள்ளது.

தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாதது இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என அணுக்கரு ஒழுங்குமுறை ஆணையத்தின்(NRA) தலைவரான ஷுனிசி தானகா கூறியுள்ளார்.

ஜப்பான் அணுக்கரு ஆற்றல் நிறுவனத்தின் பாதுகாப்புச் செயல்பாடுகள் ஏற்கனவே மோசமாகவே இருந்துள்ளன. மஞ்சு(Monju) மாகாணத்தில் அமைந்திருந்த ஒரு வேக ஈனுலையில் (burning fast breeder reactor) 1995 ஆம் ஆண்டு நடந்த ஒரு பெரிய விபத்திற்குப் பிறகு வேறு வழியில்லாமல் சமீபத்தில் தான் ஜப்பான் அரசு அதை மூட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புகுசிமா அணு உலைப் பேரழிவிற்குப் பிறகு அணு உலைக்கெதிரான மக்கள் போராட்டங்கள் கடுமையாக வெடித்தன. இதன் காரணமாக பயன்பாட்டில் இருந்த 42 அணு உலைகளில் மூன்றைத் தவிர மீதியனைத்தும் மூடப்பட்டதாக ஜப்பான் அணுத் தொழில்துறை மன்றம் (Japan Atomic Industrial Forum) கூறியுள்ளது.

அணு உலைக்கெதிராக கிரீன்பீஸ் அமைப்பு தொடுத்த வழக்கில் தக்காஹமா மின் நிலையத்தில் உள்ள இரண்டு அணு உலைகளை மூடுவதற்கு ஒசாகா நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 2017, மார்ச் மாதம் அந்த அணு உலைகளை மீண்டும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஓர் முரண்நகை.

மக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மட்டுமே இது நாள் வரை ஜப்பானில் அணு உலைகள் மூடப்படுவதற்கு காரணமாக இருக்கின்றன. மாறாக ஒட்டுமொத்த ஜப்பானிய அரசியலமைப்பும் அணு உலை முதலாளிகளின் கைப்பாவையாக இருப்பதையே இந்த நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

இந்நிலையில் 2016 , நவம்பர் மாதத்தில் இந்திய-ஜப்பான் இடையேயான அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய சொந்த நாட்டு மக்களையே காக்க இயலாத ஜப்பானிய அணு உலைத் தொழில்நுட்பம் இந்திய மக்களை எங்கனம் காக்க இயலும்?

செய்தி ஆதாரம்:

Japan nuclear workers inhale plutonium after bag breaks

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க