Saturday, May 10, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கமோடி அரசை மாத்தனும்– மணப்பாறை கொதிக்கிறது – வீடியோ !

மோடி அரசை மாத்தனும்– மணப்பாறை கொதிக்கிறது – வீடியோ !

-

றைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற அறிவிப்பிற்கு தமிழகத்தில் பரவலாக மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சினையை ஆரம்பத்தில் இருந்தே மாட்டுக்கறி உண்பவர்களது பிரச்சினையாக மட்டும் சுருக்க நினைத்தது ஆர்.எஸ்.எஸ்  கும்பல்.

தொலைகாட்சி விவாதங்களில் பசு புனிதம், எங்கள் தாய் போன்றது அதை உண்பது மகா பாவம் என ஏறி நின்று பேசினார்கள். ஆனால் அவர்களுக்கு ஆப்பறையும் விதமாக புரட்சிகர அமைப்புகள், முற்போக்கு – ஜனநாயக சக்திகள் தமிழகமெங்கும் மாட்டுக்கறி திருவிழா நடத்தி எதிர்ப்பைப் பதிய வைத்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சி போன்ற கூலிப்படை வானரப் பரிவாரங்கள் இதை முசுலீம்களின் பிரச்சினை என்பதாக மடை மாற்ற, பன்றிக்கறி சாப்பிடுவோம் என அறிவித்தது. இவ்வாறு கையை ஊன்றி கர்ணம் போட்டாலும் இந்துத்துவ பருப்பு இங்கு வேகவில்லை. அதனால் பொன்.ராதகிருஷ்ணன் போன்றவர்கள் ஜகா வாங்கி இது மாட்டுக்கறிக்கான தடை கிடையாது. விற்பனைகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம் என பேசிவருகின்றனர். ஆனால் இவர்கள் எவரும் இதை தமிழக விவசாயிகளிடம் நேரில் சொல்லிப் பார்க்கட்டும். மக்கள் வெளுத்து விடுவார்கள்.

உண்மையில் மாட்டுக்கறி என்பது விவசாயிகளை வாழவைக்கும் சுழற்சிமுறையாக உதவுகிறது. அதனால்தான் மற்ற எவரையும் விட மாடு விற்கும் விவசாயிகள் எப்படி தமது மாடுகளை விற்றே ஆக வேண்டும் என்பதை கோபத்தோடு இங்கே பகிர்கிறார்கள். மணப்பாறை மாட்டுச்சந்தையின் குரல்களில் சில உங்களின் பார்வைக்கு!

பாருங்கள், பகிருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க