Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்மோடியைத் திட்டும் மணப்பாறை மாட்டுச் சந்தை - வீடியோ

மோடியைத் திட்டும் மணப்பாறை மாட்டுச் சந்தை – வீடியோ

-

தொடர்ந்து மக்களின் தலையில் இடியாக ஒன்றன் மீது ஒன்றாக பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறார் மோடி. பணத்தின் மதிப்பை அழித்து மக்களின் பணத்தை வங்கிக்கு கொண்டுவந்துவிட்டு, மல்லையா கடனைத் தள்ளுபடி செய்து வெளிநாட்டுக்கு வழியனுப்பியது பாஜக அரசு. அதே நேரத்தில் வங்கி வாசலின் வரிசையிலும், அவசர மருத்துவ செலவுகளுக்குப் பணமில்லாமலும் நாடெங்கும் நூற்றுக் கணக்கான மக்கள் செத்து மாண்டனர். இன்று அதற்கு சற்றும் குறையாத வகையில் மாடுகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது என அறிவித்து விவசாயிகள் மீது மீண்டுமொரு தாக்குதலைத் தொடுத்துள்ளது மோடி அரசு.

இந்த அறிவிப்பில் கிரமப் பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்கும் நோக்கமும் உள்ளது. பசு புனிதம் என்று இந்தியாவெங்கும் சட்டவிரோதமாக பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் குண்டர்களால் மக்களைக் கொன்ற பாசிசக் கும்பல்; இன்று அதையே சட்டப்பூர்வமாகப் போலீசைக் கொண்டு செய்வதற்கு எத்தனிக்கிறது. அதனால் தான் பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பல் வெவ்வேறு குரல்களில் பேசிப் பார்க்கிறது.

இவற்றையெல்லாம் மக்கள் தங்கள் அனுபவத்திலேயே பார்த்து விட்டனர். மாட்டின் பின்புறத்திற்கு கற்பூரம் காட்டுவதையும், ஒரு கட்டு அகத்திக் கீரையை மட்டும் வழங்கிவிட்டு பசுவை எங்கள் தாய் என தம்பட்டமடித்துக் கொள்ளும் கூட்டத்திற்கு மாடுகளை நம்பி பிள்ளையின் படிப்பு, மகளின் திருமணம், குடும்பத்தின் மருத்துவச் செலவு என தங்கள் வாழ்வின் இரத்தமும் சதையுமாக பிணைத்துள்ள விவசாயிகளின் பதிலடிகளைப் பாருங்கள்,  பகிருங்கள். நேர்காணல் எடுக்கப்ப்ட்ட இடம் மணப்பாறை மாட்டுச் சந்தை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க