Saturday, May 3, 2025
முகப்புசெய்திவிவசாயிகள் போராட்டம் : கோடை முடிந்தாலும் வெப்பம் தணியாது !

விவசாயிகள் போராட்டம் : கோடை முடிந்தாலும் வெப்பம் தணியாது !

-

செல்லாப் பணமும் விவசாயிகளும்! இன்று பரவி வரும் விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு உடனடிக் காரணம் :

செல்லாப் பண நடவடிக்கையினால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போய் வெங்காயம், தக்காளி போன்ற காய்கள் உட்பட விளைபொருட்களின் விலைகள் வீழ்ந்தன. கருப்புப் பணக்காரர்கள் பிடிபடப் போகிறார்கள் என்ற நம்பிக்கையில் சிரமங்களைப் பொறுத்துக் கொண்ட விவசாயிகள், சந்தை நிலைமை இன்று வரை சீரடையவில்லையெனினும் கருப்புப் பணம் ஏதும் பிடிபட வில்லை என்பதை உணர்ந்து கொண்டனர்.

விவசாய விளைபொருட்களுக்கு 50 சதவீதம் லாபம் என்று எம். எஸ். சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையை அமுல்படுத்துவோம் என்று மோடி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை என்பதால் ஏற்பட்ட கோபமும் விவசாயிகளுக்கு இருக்கிறது.

கால்நடைச் சந்தையின் மீது விதிக்கப்படிருக்கும் கட்டுப்பாடுகளும் கிராமப்புற பொருளாதாரத்தை சீர்குலைக்கப் போகிறது.

கடந்த 25 ஆண்டுகளாகவே புதிய பொருளதாரக் கொள்கையினால் விவசாயத்துறை உதாசீனம் செய்யப் பட்டதின் எல்லாப் பின்விளைவுகளும் இன்று விவசாயிகளை போராட்டக் களத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன. செல்லாப் பண நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறு தொழில்கள் ஜி எஸ் டி வரியினால் மேலும் வீழ்ச்சியுறும் என்கிற பயம் கூடி வருகிறது.

கோடை முடிவுக்கு வந்தாலும் வெப்பம் தணியாது என்றே தோன்றுகிறது!

– ஃபேஸ்புக்கில் Vijayasankar Ramachandran

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க