Saturday, May 3, 2025
முகப்புசெய்திமெரினா போலீசு வன்முறை : விசாரணை ஆணையம் தோல்வி !

மெரினா போலீசு வன்முறை : விசாரணை ஆணையம் தோல்வி !

-

ஜல்லிக்கட்டு போராட்டம் : விசாரணை ஆணையம் தோல்வி ! – சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதும், மாணவர்களுக்கு அடைக்கலம் தந்த கடற்கரையொட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மீனவ மக்கள் மீதும் கடந்த 23.01.2017 அன்று போலீசு கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதனை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் உண்மை அறியும் குழுவாக சென்று ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டனர்.
பின்பு மெரினாவில் நடந்த வன்முறை குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி S. ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.
ஆணையத்திடம் புகார் அளிப்பது குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் பரவலான விழிப்புணர்வு இல்லை. ஆகையால் மிக மிக சொற்பமான மனுக்கள் அளித்திருந்தார்கள். போலீசின் புகார் மனுக்கள் மட்டுமே ஆயிரத்தை தொட்டது.
அதனால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று முகாம்கள் நடத்தி அவர்களிடமிருந்து பிராமண பத்திரங்கள் (Affidavit) தயாரித்து ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.
இதில் முதல் கட்டமாக 50 பேரை விசாரிப்பது என ஆணையம் முடிவெடுத்தது. ஜூன் 7, 2017 அன்று விசாரணை தொடங்கியது.  ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி விசாரணைக்கு வரத் தயங்குகிறார்கள், மேலும் ஆணையம் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. ஆகையால் புகார் அளிக்கும் தேதி நீட்டிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  நேற்று 19.06.2017 காலை 11:00 மணியளவில் நீதிபதி S.ராஜேஸ்வரன் அவர்களிடம் மனு அளித்தனர்.
மனுவின் மீதான விசாரணையில் நீதிபதி அவர்கள் மனுதாரர்களின் கோரிக்கைகளை முற்றிலுமாக நிராகரித்து உத்தரவு பிறப்பித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்த இந்த தாக்குதலைப் பற்றி ஊடகங்கள் உலகறிய வெளியிட்டன.
உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டது, வாழ்வாதரங்களை இழந்தது , போலீசு மீதான அச்சம், ஆணையத்தை எவ்வாறு அணுகுவது என்பது பற்றிய அறியாமை,  மக்களிடம் அரசு ஏற்படுத்தும் குழப்பம் ஆகிய காரணங்களே  பாதிக்கப்பட்ட மக்கள் ஆணையத்தின் முன் விசாரணையில் ஆஜாராகாமல் இருப்பதற்கு அடிப்படை .
இந்த அடிப்படை உண்மைகளை பரிசீலிக்க மறுத்து நீதிபதி அவர்கள் வழக்கறிஞர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.
சட்டரீதியாக இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தாங்கள் ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருப்பதாக வழக்கறிஞர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
மனுவில் உள்ள விவரங்கள் பின்வருமாறு :
BEFORE JUSTICE S.RAJESWARAN COMMISSION ENQUIRING POLICE EXCESSES ON JALLIKATTU MARINA AND IN ADJOINING FISHERMAN KUPPAMS PUBLIC REPRESENTATION
Place – Chennai
Date – 19.06.2017
Sub: POLICE EXCESS ON FISHERMAN DWELLERS AND ON MARINA EXCESSES
Before the Hon’ble Commission we submit the following faithful representation at your good offices.
1. We request the Hon’ble Commission to extend the period of Commission so as to enable the ignorant victims to file theirAffidavits and enable their effective representation before the Hon’ble Commission.
2. We submit that as the victims are uneducated and downtrodden, the Commission instead of claiming Affidavit can warmly accept victim’s representations. The victims are poor and ignorant who do not know the meaning and content of Affidavit formats.
3. We submit that the Commission itself may make elaborate arrangements and public efforts to do wide arrangements and infrastructure facilities to receive victims’ representations.
4. It is submitted that Commission must take responsibility to create public awareness so that affected public victims can easily represent and depose before the stipulated Commission. Even at the initial stage visit by the Hon’ble chairman was helped the people to overcome fear and it is submitted that they are not aware of the current position of the enquiry and are ignorant about the deposition and hearing which has been proceeded right now.
5. It is submitted that as the victims are poor and downtrodden, the to and fro travelling expenses accrue out of their travel for deposition purpose may be borne by the Commission itself.
6. It is submitted that the victims of police excess include disabled and paralyzed people; the to and fro travelling charges may be borne by the Commission itself.
7. It is submitted that the Commission may appoint delegated committee or the Commission itself to arrange for camp in the areas where police excess took place to enable the victims to depose their evidence.
8. It is submitted that the visit of the human rights Chair persons and the Chairman of the Commission to the police excess areas for spot verifications consoled the victims. But is requested that it is the need of the hour to appoint a delegate committee comprises of Advocates, Human Rights Activist, Journalist or any other appropriate persons to do legal aid, so as to arrange for a camp to collect affidavits or the material evidences whichever is necessary or available.
9. It is submitted that the police machinery is organized so as to enable to collect materials for their case. But the victims are unable to consolidate the materials available to prove their case. That necessitate a body of delegates should be appointed in this regard and does the needful.
It is therefore prayed that this Hon’ble Commission may be pleased to pass orders to extend the period of commission for victims to file affidavits and depose evidence, to engage delegate commission to visit and collect affidavit from the victims, to arrange campaign among victims for them to overcome fear to come forward to depose, to arrange infrastructure facilities to enable the victims to fearlessly represent their cause and to bear the victims’ traveling expenses for deposition and may pass such other Order or Orders to meet the ends of justice.
HIGH COURT ADVOCATES
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.