Saturday, May 10, 2025
முகப்புசெய்திதிருவாரூர் : ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்டது மக்கள் அதிகாரம் !

திருவாரூர் : ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்டது மக்கள் அதிகாரம் !

-

திருவாரூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த குளத்தை 23.06.2017 வெள்ளியன்று, ஊர்ப்பொதுமக்கள் மக்களதிகாரம் அமைப்பினருடன் இணைந்து தூர்வாரி மீட்டனர்..!

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அருகே ஆனைதென்பாதியில் பிள்ளையார் குளம் உள்ளது. அக்குளத்தை 40 ஆண்டுகளாக அவ்வூரைச் சேர்ந்த தண்டபாணி என்பவரின் குடும்பம் தங்களுக்கு சொந்தமானது என அடாவடியாக ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து அக்குளம் இருப்பது அரசு புறம்போக்கு இடம் என உறுதி செய்தது. விசாரணைக்குச் சென்ற கோட்டாட்சியர் முத்துமீனாட்சியை தகாத வார்த்தைகளாள் தரக்குறைவாக பேசியதோடு குளத்தை வருவாய்த்துறையிடம் ஒப்படைக்க முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று கூறினார் தண்டபாணி.

கோட்டாட்சியர் புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தண்டபாணியைத் தேடிவருகின்றனர். இந்நிலையில் அரசாங்க இடத்தில் உள்ள குளம் ஊர்ப்பொதுமக்களுக்கே சொந்தம் என்ற முழக்கத்தோடு ஊர்ப்பொதுமக்கள் மக்கள் அதிகாரம் தோழர்களோடு இணைந்து குளத்தை சுத்தம் செய்து தூர்வாரினர். குளம் பொதுமக்களிடம் மக்கள் அதிகாரம் தோழர்களால் ஒப்படைக்கப்பட்டது.

மக்கள் அதிகாரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் முரளி தலைமையேற்று ஒருங்கிணைத்தார். மக்கள் அதிகாரம் தோழர்கள் சண்முகசுந்தரம், முருகானந்தம் மற்றும் சமூக ஆர்வலர்களான திரு GV எனப்படும் ஜி.வரதராஜன், திரு தாமரைச் செல்வம் மேலும் ஆனைதென்பாதி முக்கியஸ்த்தர்களான திருவாளர்கள் காத்தமுத்து, மோகன், வீரமணி, சந்திரன், ஜெகநாதன், குழிக்கரை முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா கணேசன், திமுகவைச் சேர்ந்த கணேசன் ஆகியோர் துணை நின்று இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

இந்தப் போராட்டம் நமது பிரச்சினைகளை நாமே தீர்க்கமுடியமென்று மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்களதிகாரம்,
திருவாரூர்.