Saturday, May 3, 2025
முகப்புசெய்திகதிராமங்கலத்தில் போலீசின் அட்டூழியத்தை கண்டித்து மாணவர் போராட்டம்

கதிராமங்கலத்தில் போலீசின் அட்டூழியத்தை கண்டித்து மாணவர் போராட்டம்

-

குடந்தை அரசுக் கலை கல்லூரி போராட்ட குழு சார்பாக கல்லூரியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி

கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில்  2002–ம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழகத்தை அழிக்கும் மீத்தேன்-நிலக்கரி திட்டத்தை , ஓ.என்.ஜி.சி மேற்கொண்டுள்ளது. நாட்டு நலனுக்காகத்தான் இந்த திட்டம் என்று மக்களை இவ்வளவு நாள் ஏமாற்றியுள்ளது மத்திய அரசு. ஆனால் இத்திட்டம் கார்ப்பரேட்டு நலனுக்கு தான் என்ற உண்மையைப் புரிந்து கொண்ட மக்கள் ”ஒ.என்.ஜி.சி வெளியேறு” என தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 30.06.2017 அன்று எண்ணெய் குழாயிலிருந்து கசிவு ஏற்றப்பட்டதைக் கண்ட மக்களின் கோபம் தலைக்கேற ,எந்த அதிகாரிகளும் உள்ளே வரக்கூடாது என்று போராடினர். போராட்டத்தை கலைக்க ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஆட்டம் போட்ட போலீசு, இங்கேயும் கசிந்த எண்ணெய்யை திருட்டுத்தனமாக கொளுத்திவிட்டு கலவரத்தை தொடங்கி, மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கை,கால்,மண்டையை உடைத்து வெறியாட்டம் போட்டுள்ளது.

இதைக் கண்டித்து ”விவசாயியை வாழவிடு” என்ற முழக்கத்தின் கீழ் ”பற்றி எரிகிறது கதிராமங்கலம்! சுடுகாடாகிறது தமிழகம்! ” ”போலீசின் அட்டூழியம் ! மாணவர்களே கிளர்ந்தெழுவோம் !! தமிழகத்தை மீண்டும் மெரினாக்குவோம்!!!! என்ற முழக்கங்களை வைத்து இன்று (04:07:2017) வகுப்பு புறக்கணிப்பு மற்றும் குடந்தை சப்-கலக்டர் அலுவலகத்தை முற்றுகை என போராட்டத்தை நடத்த குடந்தை அரசுக் கலை கல்லூரி  மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் போராடுகின்றனர். அதற்காக விரிவான பிரச்சாரமும் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குடந்தை அரசுக் கலை கல்லூரி போராட்ட குழு சார்பாக கல்லூரியில் சுவரொட்டியும் ஒட்டப்பட்டது.. கல்லூரி முதல்வருக்கும் கடிதம் கொடுக்கப்பட்டது.  ”மாணவர்கள் களத்தில் இறங்கினால் தான் விவசாயத்தையும், நாட்டையும் காப்பாற்ற முடியும்” என குடந்தை அரசு கலை கல்லூரி வழியில் தமிழகமெங்கும் போராட்டம் நடத்த அனைத்து கல்லூரிகளுக்கும் அறைகூவல் விடுக்கிறது புரட்சிகர மாணவ-இளைஞர் முன்னணி!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, குடந்தை
தொடர்புக்கு: குடந்தை 9790215284 ,
தமிழ்நாடு -9445112675

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க