privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகறி போடுவதால்தான் எர் இந்தியா நட்டத்தில் ஓடுகிறதா ?

கறி போடுவதால்தான் எர் இந்தியா நட்டத்தில் ஓடுகிறதா ?

-

ஏர் இந்தியா விமானத்தில் அசைவ உணவுக்கு தடை ! – நிர்வாகம் அறிவிப்பு

டந்த 2017 மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கை கணக்காயர் அறிக்கையில் ஏர்-இந்தியா நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் சுமார் 321.4 கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியான இழப்பைச் சந்தித்து வருவதையும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதனையே காரணமாக வைத்துக் கொண்டு, அந்நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான வேலைகளை துரிதப்படுத்தியுள்ளது மத்திய அரசு.

கடந்த வாஜ்பாய் ஆட்சியிலிருந்து, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், இலாபத்தில் ஓடும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களையும், நிர்வாகத்தைச் சீர்குலைத்து, ஊழல்மயப்படுத்தி அவற்றை நட்ட்த்தில் தள்ளி வருகிறது இந்திய அரசு. மன்மோன்சிங் காலத்தில் இது மேலும் வேகமெடுத்தது. தற்போது மோடி அரசில் தனியார்மயத்தை முடித்து வைக்கிறார்கள்.

குறிப்பாக ஏர்-இந்தியா நிறுவனத்தைப் பொறுத்தவரையில், விமான நிலையங்களில், அதிக பயணிகள் பயணத்தைத் தொடங்க விரும்பும் நேரங்களில் தனியார் விமானங்களை இயக்க அனுமதிப்பது, குறைவான பயணிகள் பயணம் செய்யும் நேரங்களில் ஏர்-இந்தியா நிறுவனத்தின் விமானங்களை இயக்குவது, விமானி தங்கும் விடுதிக்கு அதிகக் கட்டணம் செலுத்தி அதில் முறைகேடுகளை நடத்துவது என பல்வேறு முறைகேடுகள் மூலம் அந்நிறுவனத்தை நட்டத்தில் தள்ளியது இந்திய அரசு.

ஆகவே ஏர்-இந்தியா நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு வாங்குவதற்கு டாட்டாவும், இன்ன பிற தரகு முதலாளிகளும் தயாராக உள்ளனர். இடையில், ஏர்-இந்தியா நிறுவனம், செலவுக் குறைப்பு நடவடிக்கை என்ற பெயரில் உள்நாட்டில் செலுத்தப்படும் விமானங்களில் 2ம் வகுப்பு (எக்கனாமிக்) பயணிகளுக்கு அசைவ உணவு இனி வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது.

இதற்குக் காரணமாக ஏர்-இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அஸ்வனி லோஹனி கூறுகையில், “அசைவ உணவு அதிக அளவில் மீந்து விரயமாவதைத் தடுப்பதற்காகவும், அதற்கு ஆகும் அதிகச் செலவைக் குறைக்கும் பொருட்டும்”, “பல்வேறு சமயங்களில் சைவ உணவுக்காரர்களுக்கு உணவு வழங்குகையில், அதில் அசைவ உணவு எதிர்பாராத விதமாகக் கலந்து விடுவதைத் தடுப்பதற்காகவும், உணவு வழங்கலை இன்னமும் செழுமைப்படுத்தவுமே இந்த நடவடிக்கை” என்றும் கூறியுள்ளார்.

சிறு குழந்தைகள் கூட எள்ளி நகையாடும் அளவிற்கு இட்டுக்கட்டப்பட்ட விளக்கங்களை அளித்துள்ளது ஏர்-இந்தியா நிர்வாகம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்தவுடனேயே மக்கள் மத்தியில் சைவ உணவைத் திணிக்கும் வேலைகளையும், அசைவம் உண்பவர்களை இழிவாகச் சித்தரிக்கும் வேலைகளையும் பல்வேறு துறைகளிலும் செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த எஸ்.கே.ஜெயின் என்பவர் எழுதிய ஒரு கடிதத்தைக் கடந்த 2014-ம் ஆண்டு, மனித வளத்துறை அமைச்சகம், அனைத்து ‘இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களுக்கும்’ (ஐ.ஐ.டி) அனுப்பியது.

அக்கடிதத்தில் சைவ மற்றும் அசைவ உணவு உண்பவர்களைத் தனித்தனியாகப் பிரிக்குமாறு எஸ்.கே. ஜெயின் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், அசைவ உணவு உண்ணுபவர்கள் தங்களது தமஸ் (இருள்நிறைந்த / கடுமையான) குணத்தால் தங்களது பெற்றோர்களை வருத்தத்திற்கு உள்ளாக்குபவர்களாக உருவெடுப்பர் என்றும், அவர்களது உணவு முறை நேரடியாக அவர்களது சிந்தனையோடு தொடர்புடையதாக இருப்பதால் இந்தியப் பாரம்பரியத்திலிருந்து அக்குழந்தைகள் விலகிச் செல்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

சைவம் உயர்ந்தது, அசைவம் தாழ்ந்தது என்ற பார்ப்பனீயக் கருத்தை அனைத்துத் தளங்களிலும் நிலைநாட்ட முயற்சிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் மறைமுகமாக ஒரு இந்துராட்டிரத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 88% பேர் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஆகும். அவர்களை, அதாவது ஆகப்பெரும்பான்மையான மக்களை இழிவு படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

தனது இந்துராட்டிரப் பெருங்கனவிற்காக, பசு புனிதம் என்று கூறி விவசாயிகளின் வாழ்க்கையைச் சீரழித்து, முட்டை அசைவம் என்று கூறி பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைவை உண்டாக்கி, மாட்டுக்கறிக்குத் தடை எனக் கூறி இந்தியா முழுவதும் ஏழைகளுக்கு குறைவான விலையில் கிடைத்து வந்த சத்தான உணவையும் முடக்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்.

நமது உணவையும், பாரம்பரியத்தையும் பார்ப்பனியத்தின் கலாச்சாரத்திற்குக் கீழானதாக மதிக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டாவிடில், சொந்த நாட்டிலேயே அடிமைகளுக்குரிய மரியாதையோடு தான் நாம் வாழும் நிலை ஏற்படும்.

_________________________________________

இந்த பதிவு பிடித்திருக்கிறதா?

    • OK,Air India is incurring losses.Like Britishers shoot a dog and then tell that it was a mad dog,the Central Govt from the days of Narasimha Rao,(after liberalization)would have made Air India a loss making enterprise by allocating good air traffic(routes) to private airlines.In Salem Steel Plant also,after investing capital to acquire coin minting machine,prevented that plant to mint coins.Instead the plant was ordered to supply sheets for making coins to Govt mints in other states.They have to make that plant as loss making.So that the enormous iron ore in Kanjamalai near the plant can be made best use by Reliance which is bidding for the plant.Let Raman explain why Ennore Kamarajar Port is about to be sold to private sector,when that port is making consistent profit every year and cater to the need of all South Indian car exporters?Why the army vehicle factory at Jabalpur is closed and orders for army vehicles are placed to private sector?Why they are contemplating privatisation of ordnance factory at Trichy?

    • Raman is having phobia of socialism and public sector banks.He does not know that out of 22 public sector banks in India,13 banks found their places in a list of 2000 powerful institutions of the world as published by Forbes magazine.State Bank of India (244)is ahead of ICICI Bank(310).Canara Bank (1230)is ahead of Yes Bank(1239).Bank of India (1250)is ahead of Indus Ind Bank(1272)Other public sector banks in the list are;-Bank of Baroda(1145)Punjab National Bank(1148)Union Bank of India(1420)Central Bank of India(1664)Syndicate Bank(1745)Indian Overseas Bank(1828)Allahabad Bank(1845)Uco Bank(1849)Oriental Bank of Commerce(1859)and Indian Bank(1937)He does not know that ICF is going to manufacture solar powered coaches for Indian Railway.

  1. வாயால் சிரிக்க முடியவில்லை … இந்த நஷ்ட காரணத்தை பார்த்து … காெஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் எப்படி இது பாேன்றவைகளை உயர்பதவியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள் …?

  2. இராமன் நடப்பது என்ன சோசியலிச அரசா?

    இந்தியாவில் பெயரளவுக்கான சோசியலிசம் கூட திரு இந்திரா அம்மையார் காலத்துடன் முடிவுற்று விட்ட நிலையில் இன்னும் இந்தியா சோசியலிசத்தை தான் முன்ன்னேட்டுது செல்கின்றது என்ற ராமனின் கூற்று நகைப்பிற்கு உரியது மட்டும் அல்ல அடி முட்டாள் தனமானது…1990ஆம் ஆண்டுக்கு பின் இந்தியா நடைபோடும் புதிய பொருளாதார கொள்கையின் அடிப்படையில் தான் நரசிம்மராவ் முதல் இன்றைய மோடி வரைக்கும் அரசை வழி நடத்திக்கொண்டு உள்ளார்கள்…இவர்கள் எல்லாம் என்ன சோசியலிட்டு மனபான்மை உள்ளவர்களா? இல்லையே…! அதுவும் நேற்றைய மன்மோகன் சிங்கையும் இன்றைய மோடியை பற்றி அவர்களின் கார்பரேட் அடிமை தனத்தை நாம் சொல்லவே தேவை இல்லை…உலகம அறிந்த உண்மை அது….

  3. // குறிப்பாக ஏர்-இந்தியா நிறுவனத்தைப் பொறுத்தவரையில், விமான நிலையங்களில், அதிக பயணிகள் பயணத்தைத் தொடங்க விரும்பும் நேரங்களில் தனியார் விமானங்களை இயக்க அனுமதிப்பது, குறைவான பயணிகள் பயணம் செய்யும் நேரங்களில் ஏர்-இந்தியா நிறுவனத்தின் விமானங்களை இயக்குவது, //

    இதென்ன பஸ்ஸா. கூட்ட நெரிசல் நேரம். கூட்ட நெரிசல் இல்லாத நேரம் என்று சொல்ல

    எனக்கு தெரிந்து ‘Itenary’ முடிவான பின் தான் விமானம் பயணம் உறுதியாகும். குறைந்தபட்சம் ‘International Flightsக்கு’ இது தான் நடைமுறை

    உள்ளூர் விமானங்களில் டைரெக்டாக ‘counterல் ticket’ (ரயில் பயணம் போல) வாங்கி பயணம் செய்ய முடியுமா என்று எனக்கு தெரியவில்லை

    • உண்மையார் , விசயத்தை இப்படி பார்க்கலாம்… சென்னையில் இருந்து மதுரைக்கு,திருச்சிக்கு அல்லது கோவைக்கு செல்லவேண்டும் என்றால் அதுவும் ஏதோ ஒரு அலுவலக பணிக்கு, நேர்முக தேர்வுக்கு, அல்லது பலகலைகழக்த்துக்கு செலலவேண்டும் என்றால் அங்கே காலையில் குறைந்தது 11.30 am மணிக்காவது நாம் இருக்கவேணும் அல்லவா? அதிக பச்சம் இரண்டு மணி நேர பயணம் என்று கொண்டால் கூட காலையில் நமக்கு கிடைக்கும் விமானங்கள் தனியார் விமானங்களாக தானே இருகின்றன். இந்த நேரத்தை தான் பீக் அவர் என்கின்றேன்… அதற்கு பின் நண்பகலில் நாம் விமானம் பிடிக்க செல்லவேண்டிய அவசியம் மிக குறைவு அல்லவா? ஒருவேளை அடுத்த நாள் வேலையை பார்க்க இன்று நண்பகல் அல்லது அதற்கு மேல் செல்ல்வோம் என்ற்றால் என்ன ஆகும் ..? நாம் விடுதியில் தங்க மற்றும் உணவுக்கு என்று இன்றைக்கும் நாளைக்கும் தனியாக செலவு ஆகும் அல்லவா? இந்த நேரங்களில் நாம் செய்யும் பயன்கள் நான்பீக் அவர் பயணம் என்று நாம் வரையறை செய்தால் அதில் தவறு என்ன உண்மையர்?

      சென்னையில் இருந்து மதுரைக்கான விமான பயண நேரங்களையும் ,நிறுவனங்களின் பெயரையும் பார்க்கலாமா உண்மையர்…?

      Jet (9W 2341) 5:55 – 7:35

      SpiceJet (SG 3071)6:05 – 7:25

      Jet (9W 2343) 9:35 – 10:55

      SpiceJet (SG 611) 9:55 – 11:00

      Air India (AI 671)11:25 – 12:40

      Jet (9W 2727) 13:10 – 14:35

      Jet (9W 2345) 15:25 – 16:50

      SpiceJet (SG 103) 18:05 – 19:05

      Jet (9W 2723) 19:20 – 20:45

      air India வின் பயன நேரத்தை பாருங்கள் Air India (AI 671)11:25 – 12:40 இந்த நேரத்தில் பயணம் செய்வது என்பது பயணிகளுக்கு சாதகமான ஒன்றா? அல்ல்லது காலையில் Jet (9W 2341) 5:55 – 7:35 SpiceJet (SG 3071)6:05 – 7:25 Jet (9W 2343) 9:35 – 10:55 SpiceJet (SG 611) 9:55 – 11:00 இவற்றில் ஏதோ ஒன்றில் பயணிப்பது பயணிகளுக்கு சாதகமான ஒன்றா?

      சொல்லுங்க உண்மையர்…. சொல்லுங்க!

      • I am aware Air-India is under crisis since UPA if I am not wrong. It’s better they stop Air-India. With only one single flight for a day there’s no point in running it

        • உண்மையர்! ,ஒரே ஒரு air india விமானம் !அதுவும் கூட்டம் இல்லாத நேரத்தில் நான் பீக் அவரில்…..! வினவு உண்மையை தானே சொல்லியுள்ளது!

          சரி விசயத்துக்கு வருகின்றேன்…!மன்மோகன் சிங் மட்டும் அல்ல மோடியும் கூட தான் அரசு பொதுத்துறை நிறுவங்களை நட்டத்தில் இயங்க (நடத்த) வைத்து பின்பு நட்ட கணக்கை காட்டி அவற்றை விற்க ஆயத்தம் ஆகியுள்ளார்… இந்த தனியார் மையம் ஆக்குவதில் மோடிக்கும் அவரின் பிஜேபி அரசுக்கும் அண்ணன் யார் என்றால் நரசிம்ம ராவின் காங்கிரஸ் அரசும் அதில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் அவர்களுமே! இந்த தனியார் மாயமாகும் பெருமையை!!!!! பிஜேபி அரசு தட்டிக்கொண்டு செல்ல முடியாது….ஹஹஹா… வேண்டுமானால் காங்கிரஸ்க்கு இளைய பங்காளியாக வேண்டுமானால் பிஜேபி இந்த விசயத்தில் இருக்கலாம்….!

    • மேலும் மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் air India விமானத்தின் பயன நேரத்தையும் கவனியுங்கள்… உண்மையர்..!

      Air-India AI672 13:20 14:20

      மேலும் பிற விமாங்களின் பயண நேரங்களையும் கவனியுங்கள்….

      etair 9W2728 15:00 16:25
      Jetair 9W2342 08:00 09:10
      Jetair 9W2724 21:10 22:35
      Jetair 9W2344 11:25 12:45
      Jetair 9W2346 17:15 18:30
      Spicejet SG612 19:35 20:40
      Spicejet SG3072 07:45 09:00
      Spicejet SG106 11:30 12:30
      Spicejet SG3068 21:50 23:15

      சென்னைக்கும் மதுரைக்குமிடையே ஒரே ஒரு விமானம்… அதனையும் நான் பீக் அவரில் தான் விடுகின்றது… அது போன்றே மதுரைக்கும் சென்னைக்கும் இடையில் Air India விடுவது ஒரே ஒரு விமானம். அதனையும் நான் பீக் அவரில் தான் விடுகின்றது…

      பின்பு ஏன் Air India நடத்தில் நடக்காமல் ,இயங்காமல் இருக்கும் உண்மையர்?

  4. Primary purpose / job of our government is to govern. Govt should plan and ensure progressive wealth creation, maintain & manage natural resources, making sure people have sufficient opportunities to earn for their food, and livelihood. Government should not be running businesses like Ports, Airlines, Steel Plants, etc. It’s for private players to run within the framework set by Govt.

    • “When the private investment is not forthcoming,strategic investment should be made in public sector to.generate growth and employment”DrC.Rangarajan,former Governor of RBI-15-7-2017.Ennore Kamarajar Port is making consistent profit every year.Why Central Govt intends to privatise this port?

  5. Air India விமானங்கள் மட்டுமா கூட்டம் இல்லா நேரத்தில் செலுத்தப்பட்டு தனியார் விமானங்கள் கூட்டம் உள்ள நேரத்தில் செலுத்தப்டுகிறன ? இல்லையே… அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் இதே நிலை தான்…

    சேலத்தில் இருந்து திருச்சங்கோடு செல்ல கலையில் 8 am முதல் 9.30 am வரையில் நமக்கு உள்ள வாய்ப்பு தனியார் பேருந்துகள் மட்டுமே…!இந்த நேரத்தில் தான் திருச்சங்கோட்டுக்கு செல்ல பள்ளி க்ல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என்று பஸ்ஸில் ஏற அலைமோதுவார்கள் …. பெண்களின் நிலையே இன்னும் பரிதாபம்….9.30am மணிக்கு மேல் அரசு பேருந்துகள் வரிசைக்கட்டிகொண்டு சேலத்தில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாய் வரும்… கூடமும் இருக்காது…

    இப்ப விசயத்துக்கு வருவோம்… தனியார் பேருந்துகள் கூட்ட நேரத்தில் இயங்க சில ஆயிரங்கள் மாதத்துக்கு இலச்சம் என்று அரசு பேருந்து அதிகாரிகளால் வாங்கபடுகிறது என்றால் அது போன்றே தனியார் விமானங்களை கூட்ட நேரத்தில் இயக்க , air இந்தியாவை கூட்டமில்ல நேரத்தில் இயக்க யார் யாரிடம் காசு வாங்கியிருபார்கள் என்று நாம் எளிதில் முடிவுக்கு வரமுடியும் அல்லவா?

Leave a Reply to Selvarajan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க