privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அதிகாரக் கொழுப்பு : பொண்டாட்டிய வித்தாவது கக்கூஸ் கட்டு !

அதிகாரக் கொழுப்பு : பொண்டாட்டிய வித்தாவது கக்கூஸ் கட்டு !

-

பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தின் ஆட்சியரான கன்வல் தனுஜ்

ரசியல் ரீதியில், பீகார் மாநிலம் இன்னொரு தமிழகமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பது ஊர் அறிந்த விசயமே. தமிழகத்தில் பாஜகவின் எடுபிடி அரசாக எடப்பாடி அரசு இருப்பது போலவே பீகாரிலும் நிதிஷ் குமார் அரசு செயல்பட்டு வருகிறது. அதே சமயத்தில், நிர்வாக ரீதியில் பீகார் இன்னொரு இராஜஸ்தானாக மாறி வருகிறது. அதை சமீபத்தில் பீகாரில் நடந்து வரும் நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

சுவச்சு பாரத்தின் ஒரு பகுதியாக, வரும் 2019-ம் ஆண்டிற்குள் பீகாரை திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத மாநிலமாக மாற்றவேண்டும் என்று மோடியின் விசுவாசி நிதிஷ்குமார் உத்தரவிட்டிருக்கிறார். இதன் ஒரு பகுதியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பல இடங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அவ்வகையில் பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தின் ஆட்சியரான கன்வல் தனுஜ், கடந்த ஜூலை 23 அன்று ஜம்மோர் கிராமத்தில் சுவச்சு பாரத் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். தனது உரையின் துவக்கத்தில் இருந்தே மக்களை ஆடுமாடுகளைப் போல் இழிவுபடுத்தி பேசியுள்ளார். மக்களைப் பார்த்து, “திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தால் தான் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரிக்கின்றன. உங்களால் முடியும் என்றால் உங்கள் வீட்டுப் பெண்களின் மானத்தைக் காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அப்படி என்ன ஏழ்மையாய் இருக்கிறீர்கள்?. உங்கள் மனைவியின் மதிப்பு என்ன ரூ.12000-ஐ விடக் குறைவானதா? என் மனைவியின் மானத்தை எடுத்துக் கொண்டு எனக்கு ரூ.12,000 தாருங்கள் என்று நீங்கள் யாராவது கேட்பீர்களா ?” எனக் கேட்டுள்ளார்.

இதனிடையே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், கழிப்பறை கட்ட தன்னிடம் பணம் இல்லை என்றும், கழிப்பறைக்கு மத்திய மாநில அரசுகள் உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஆட்சியர், “கழிவறை கட்ட பணம் இல்லை என்றால், உன் மனைவியை விற்று பணம் ஏற்பாடு செய்து கொள்”, எனத் திமிர்த்தனமாக பேசியுள்ளார்.மோடி என்ற ‘ஹிட்லரின்’ ஆட்சியில், ஏழைகள் 3 வேளை அரை வயிற்றிற்குத் திண்பதற்கே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் போது, இனிப் பேளுவதற்கும் படாதபாடு படவேண்டும் போலும்.

இதைப் போன்றே கடந்த மாதம் இராஜஸ்தானில், பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்க கையில் கேமராவுடன் நகராட்சி அதிகாரிகள் ஊர் ஊராக சுற்றித் திரிந்தது நினைவிருக்கலாம். அதனைத் தட்டிக் கேட்ட ஒரு கம்யூனிஸ்ட் தோழரை குண்டர்களின் உதவியோடு அப்பகுதி நகராட்சிக் கமிஷனர் அடித்தே கொன்றது குறிப்பிடத்தக்கது.

அதே போல ரேஷன் அரிசி கிடைக்கவேண்டும் என்றால், உங்கள் வீட்டு வெளிப்புறச் சுவரில், நான் ஒரு ஏழை என்று எழுத வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஹிந்துத்துவ பாசிஸ்டுகளையும், அதிகாரவர்க்கக் கிரிமினல்களையும் விட வேறு யாராலும் ஏழைகளை இழிவாக நடத்த முடியுமா?

சொந்த நாட்டு மக்களுக்கு பொதுக் கழிப்பறைகளைக் கூட கட்டிக் கொடுக்க வக்கில்லாத இந்த கிரிமினல் கும்பல் தான் சுவச்சு பாரத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. மக்களைப் பற்றியே கவலைப்படாத இந்த அரசு தான், மக்களின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் குறித்து நீலிக் கண்ணீர் வடிக்கிறது. கன்வல் தனுஜ் ஒட்டு மொத்த அதிகார வர்க்கத்தின் ஒரு ‘மாதிரி’. அதன் மக்கள் விரோத முகத்தின் நேரடி சாட்சி.

செய்தி ஆதாரம்:

_____________

இந்தச் செய்தி உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

    • இதற்கும் ஒரு அருமையான விளக்கத்தை மணிகண்டன் தருவார் பாருங்கள்.

      • இப்படி சொன்னவாவது இந்த மக்களுக்கு உரைக்காதா என்ற நல்லெண்ணத்தில் அவர் அப்படி கூறியிருக்கலாம். இதைப் போய் தப்பாய் எடுத்து கொள்ளலாமா?

        எல்லாத்தையுமே சும்மா கொடுக்க முடியுமா? இப்படி எல்லாத்தையும் ஓ.சி ல கொடுத்து மக்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டது சோசலிசம்.

  1. // சொந்த நாட்டு மக்களுக்கு பொதுக் கழிப்பறைகளைக் கூட கட்டிக் கொடுக்க வக்கில்லாத இந்த கிரிமினல் கும்பல் தான் சுவச்சு பாரத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது //

    வினவு ஆசிரியரே கொஞ்சம் உண்மையையும் சேர்த்து எழுதுங்கப்பா

    • உண்மையை பெயரில் குத்தகைக்கு எடுத்திருப்பவரே..அவுங்க கறுத்த அவுங்க எழுதிட்டாங்க…. நீங்க எது பொய் எது மெய்யுனு நீங்க தான் எழுதுங்களே…..

      • மோடியை எதற்கெடுத்தாலும் எதிர்த்தால் தான் ‘உண்மையர்’ என்று நீங்கள் ஒப்பு கொள்வீர்கள் என்றால் அப்படிப்பட்ட போலியான பட்டம் எனக்கு தேவை இல்லை

        அவங்க கருத்த அவங்க எழுதறதுக்கு எதுக்கு பத்திரிகை. பத்திரிகை என்றாலே நடுநிலைமை தானே வகிக்க வேண்டும் ? இல்லை பத்திரிகைகளிலும் ஒன்னு-சைடு பகுத்தறிவாதம் தானா ?

        • பின்ன யாரோட கறுத்த எழுதருத்துக்கு பத்திரிக்கை….மோடியோட கறுத்த எழுதவா? நடுநிலைமை அப்படின்னு ஒன்னு இருக்கா என்ன?

          பொண்டாட்டிய வித்தாவது கக்கூசு கட்டுன ஒரு பி.ஜெ.பி பொறம்போக்கு சொல்லுது… இதுக்கு மோடிக்கு என்ன சுத்தியா போட முடியும்……

          • // பின்ன யாரோட கறுத்த எழுதருத்துக்கு பத்திரிக்கை….மோடியோட கறுத்த எழுதவா? நடுநிலைமை அப்படின்னு ஒன்னு இருக்கா என்ன? //

            நீங்க எந்த வேணும்னா எழுதுங்க. எவன் வேணாம்னு சொன்னான். சொல்ல கருத்துல உண்மையையும் சேர்த்து எழுதுங்க அவளோ தான்.

            எந்த பொறம்போக்கு சொன்னானோ அந்த பொரம்பக்க dismiss கூட பண்ணட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

            • சும்மா கையப் புடிச்சு இழுத்தியா கணக்குல பேசறீங்க….என்ன பொய்ய சொல்லிட்டாங்க….நீங்க என்ன உண்மைய எதிர்பற்குறீங்க….உங்க எழுத்துல ஒரு சரக்கும் இல்லீங்க….mostly void statements…..

              • என்ன சொல்ல, என்ன சொல்ல. நான் கீழே உள்ள வரிக்கு தான் வினவிடம் விளக்கம் கேட்கிறேன். நண்பர் HisFeetம் அதை தான் என்னிடம் கேட்டுள்ளார். நானும் அவர்க்கு விடை அளித்துள்ளேன்

                // சொந்த நாட்டு மக்களுக்கு பொதுக் கழிப்பறைகளைக் கூட கட்டிக் கொடுக்க வக்கில்லாத இந்த கிரிமினல் கும்பல் தான் சுவச்சு பாரத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது //

                ‘கிரிமினல் கும்பல்’ என்று வினவு வார்த்தை பிரயோகம் செய்து இருக்கிறது. கழிப்பறை விஷயத்தில் என்ன கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்று வினவு ‘தெரிவித்தால் தானே’ வசதியாக இருக்கும்.

                இனி வினவு தான் ‘Tax amount’ என்ன ஆனது என்று “உண்மையை” சொல்ல வேண்டும். நன்றி

                • //கழிப்பறை விஷயத்தில் என்ன கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் //

                  பா.ஜ.க-வின் கேடுகெட்ட கிரிமினல் தனம்:

                  கடந்த மாதம் இராஜஸ்தானில், பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்க கையில் கேமராவுடன் நகராட்சி அதிகாரிகள் ஊர் ஊராக சுற்றித் திரிந்தது நினைவிருக்கலாம். அதனைத் தட்டிக் கேட்ட ஒரு கம்யூனிஸ்ட் தோழரை குண்டர்களின் உதவியோடு அப்பகுதி நகராட்சிக் கமிஷனர் அடித்தே கொன்றது குறிப்பிடத்தக்கது.

                  • இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அது எந்த கட்சிக்காரன் செய்து இருந்தாலும் சரி

        • First, do you accept the statement that people who want to build toilets should sell their wives? (You may accept because your holy book says a woman married by five brothers was used in betting for a game of dice)

          Second, Modi has levied 0.5% Swatch Bharath tax on everything. Where that money is going? Can’t that be utilized for building toilets for poor people? (You will again ask why your tax money is used to build their toilets! But they are also paying tax whenever they purchase anything sir!)

          Third, news reporting and journalism are somewhat different. You can’t report falsehoods in media. But you can express your views and criticize things in media. This piece is a good criticism of what the court has said and how Modi government is acting.

          • // First, do you accept the statement that people who want to build toilets should sell their wives? (You may accept because your holy book says a woman married by five brothers was used in betting for a game of dice) //

            Ok. You guys are rationalists right. Sorry, one-side rationalists. Lets go one-by-one then

            1) Where did I mention that I agreed with his statement ? Please show that text to me
            2) I don’t what’s the connection between ‘Mahabharat’ and this incident.
            Off Topic: The incident told in ‘Mahabharat’ is an exception. Exceptions are always there. In real-life also an Indian woman married to 5 brothers which is an exception

            // Second, Modi has levied 0.5% Swatch Bharath tax on everything. Where that money is going? Can’t that be utilized for building toilets for poor people? (You will again ask why your tax money is used to build their toilets! But they are also paying tax whenever they purchase anything sir!) //

            That’s what I asked Vinavu. What happened to our 0.5% tax? What’s the truth? Have you seen ‘Mohan Kumaramangalam’ recent video on this? I understand one-side rationalists will never get time to go through such videos

            // Third, news reporting and journalism are somewhat different. You can’t report falsehoods in media. But you can express your views and criticize things in media. This piece is a good criticism of what the court has said and how Modi government is acting. //

            This is also kind of media. In fact a powerful media now-a-days. There must be some honesty when writing articles.

            I don’t believe in articles written in ‘edugai-monai’ slogans and articles with twisted information

            FIRST LETS US BE STRAIGHT before criticizing

            • //1) Where did I mention that I agreed with his statement ? Please show that text to me//

              I have not said that you have agreed with his statement. I have asked you “Do you agree?” You have not replied for that question. The reason why I brought Mahabarath in is simple. Religiously corrupted minds like yours can’t think beyond a limit.

              What do you mean by one-sided rationalist? If I say this man is my dad and this woman is my mom, will that make me one-sided? What do you expect us to do? You want us to accept truths and falsehoods? Do you want us to give weightage to stupidities?

              Let us be straight before criticizing. Same to you. Before criticizing Vinavu, you bee straight.

  2. // I have not said that you have agreed with his statement. I have asked you “Do you agree?” You have not replied for that question. //

    I need not to reply that question because I have not mentioned anything on that. My question to Vinavu was entirely on a different sentence

    // The reason why I brought Mahabarath in is simple. Religiously corrupted minds like yours can’t think beyond a limit. //

    In your point of view, people who are religious are corrupted. Or people like me are corrupted? Ok. Don’t worry. Lets assume I’ve got corrupted mindset. Show me one-single text posted by me which indicated my corrupted mindset

    // What do you mean by one-sided rationalist? If I say this man is my dad and this woman is my mom, will that make me one-sided? What do you expect us to do? You want us to accept truths and falsehoods? Do you want us to give weightage to stupidities? //

    You want us to accept truths and falsehoods? – Yes. When BJP does anything wrong, criticize that. No issues. But, when BJP does something right you need NOT to praise that. Instead, that should be mentioned in the article at least. I have not seen such news in Vinavu so far.

    Can you now ask Vinavu to mention all the details and not to hide details selectively ?

    // Let us be straight before criticizing. Same to you. Before criticizing Vinavu, you bee straight. //

    I’ve been doing that already. If you guys are capable of doing that please go ahead and do it. I know what you guys and Vinavu are doing by forming a vritual coalition

Leave a Reply to @HisFeet பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க