Sunday, May 4, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கநாளை வெளியாகும் குண்டாஸ் பாடலின் முன்னோட்டம்

நாளை வெளியாகும் குண்டாஸ் பாடலின் முன்னோட்டம்

-

மிழகத்தில் போராடுகின்ற அமைப்பினர் மற்றும் மாணவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்டு பல்வேறு அடக்குமுறைகளை ஏவி விடுகிறது தமிழக அரசு. போராடத் தூண்டுபவர்கள் மீது அடக்குமுறை பாயும் என பாசிச ஜெயாவின் ஆவி புகுந்தவராக கொக்கரிக்கிறார் ஜெயாவின் அடிமை எடப்பாடி.

மெரினாவில் அஞ்சலி செலுத்தச் சென்ற திருமுருகன், கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடம் பிரச்சாரம் செய்த கோவை சட்டக்கல்லூரி மாணவர் வினோத், கதிராமங்கலம் – நெடுவாசல் பிரச்சினையயியொட்டி துண்டறிக்கை கொடுத்ததற்காக மாணவி வளர்மதி, முகநூலில் போராட்ட அழைப்புவிடுத்த சிதம்பரம் முனைவர் பட்ட மாணவர் குபேரன் எனத் தொடர்கிறது கைது பட்டியல். ஆனால் மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்த அதிமுக அமைச்சர்கள் சுதந்திரமாக சுற்றிவருகின்றனர்.

1991 ஜெயா ஆட்சியின் போது எதைப் பேசினாலும் தடா என தன் காட்டாட்சியை நடத்தினார். “அப்போது சிறைமதில்களைத் தாண்டி, அடக்குமுறைக் கொட்டடிகளைத் தாண்டி போராடுபவர்களின் குரலாக” மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இருண்டகானம் ஒலிப்பேழை ஒலித்தது.

இன்று ஜெயாவின் தொடர்ச்சியாக, அடிமைகளின் ஆட்சியாக நீளும் பாஜக பினாமி எடப்பாடி அரசை ஏளனம் செய்கிறது இப்பாடல். பாடலின் முன்னோட்டம் இன்று. முழுப் பாடல் நாளை வெளியாகும்.

 

_______________________

 

இந்த டீசர் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா!
அடக்குமுறைக்கு எதிரான ம.க.இ.க பாடல்களை இசைக்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க