Sunday, May 4, 2025
முகப்புசெய்திகதிராமங்கலம் : சப் கலெக்டரை முற்றுகையிட்ட குடந்தை அரசுக்கல்லூரி மாணவர்கள் !

கதிராமங்கலம் : சப் கலெக்டரை முற்றுகையிட்ட குடந்தை அரசுக்கல்லூரி மாணவர்கள் !

-

திராமங்கலத்தில் ONGC குழாயில் எண்ணெய்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர் கொண்டு விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளிருப்பு  போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் பல மாணவர்கள் கதிராமங்கலத்திற்கு செல்ல முடியாமல் திருப்பி சென்று கொண்டிருக்கும் நிலையில், சப்-கலெக்டரை முற்றுகையிட்டனர் குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள்.

கடந்த 18.07.2017 அன்று காலை பு.மா.இ.மு செயலாளர் தோழர் பகத் தலைமையில் மாணவர்கள் கூடினர். அதன் பின் மாணவர்கள் வெளியே அழைத்து செல்லும் வகையில் கல்லூரி பாலத்தின் மேல் ஏறி நின்று தோழர் தீபக் மாணவர்களிடம் உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து கதிராமங்கலத்தில் இருந்து வரும் கல்லூரி மாணவி, இதைத்தான் நாங்கள் குடிக்கிறோம் என அக்கிராமமக்கள் குடிக்கும் குடிநீரைக் காட்டி, அம்மக்களின் அவலத்தை விளக்கினார். அதன்பின் மாணவர்கள் அனைவரும் முழக்கமிட்டபடி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அலுவலகம் முன்பு மாணவர்களை கலைக்க முயற்சித்த காவல்துறையை தோழர்கள் எதிர் கொண்டு பேசினார். பின் கலெக்டரிடம் ONGC நிறுவனத்தின் முறைகேடுகள் நிறுத்தப்பட வேண்டும், கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று மாணவர்கள் தங்களின் கோரிக்கையை மனுவாக அளித்தனர்.

அனைத்து கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டுகாக ஒன்றிணைந்தது போல், போராட்டங்களில் ஈடுபடவேண்டும், தமிழகத்தை அழிக்க நினைக்கும் இந்த அரசிடம் கெஞ்சாதே! தடுக்கவரும் போலிசுக்கு அஞ்சாதே! நம் உரிமை நிலைநாட்ட போராட்டத்தில் ஈடுபடும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை, தொடர்புக்கு: 97902 15184.
_____________

இந்த போராட்டச் செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க