பொதுவாக அரசு என்பது தனது குடிமக்களை அழிவிலிருந்து காப்பதுதான் அதன் கொள்கையாக இருந்து வந்துள்ளதை வரலாறு முழுதும் கண்டிருக்கிறோம். ஆனால், இன்றைய மத்திய, மாநில அரசுகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவளிக்கும் உழவர்களில் பெரும்பகுதியினரை அழிப்பதைக் கொள்கையாகக் கொண்டு செயல்படுகின்றன.
அதன் விளைவுகள்தான் நாடுமுழுதும் விவசாயிகளின் தற்கொலை அதிர்ச்சி மரணங்களும்; பிழைப்புத்தேடி ஊர் ஊராய் அலையும் பேரவலமும். இதற்கு எதிரான போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்படுகின்றன. தமிழகத்தில் கதிராமங்கலம், நெடுவாசல் மக்களின் அழுகுரலைக்கூட ஒடுக்குகிறது எடப்பாடி அரசு. வெள்ளையரின் கொடுஞ்சுரண்டலால் உருவான பஞ்சத்தில் கோடிக்கணக்கானோர் மாண்டனர். அத்தகைய நாசத்தை நோக்கி இட்டுச் செல்கிறது மோடி அரசு.
இப்போது, ரேசன் பொருட்கள் ரத்து, எரிவாயு மானியம் ரத்து என அடுத்தடுத்து இடியை இறக்குகிறது. கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களை பேரழிவுக்குள்ளாக்கும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதத் திட்டங்கள், நோக்கங்கள் கொள்கைகள் குறித்து விவாதிக்க, சிதறிக் கிடக்கும் விவசாய அமைப்புகளை ஒருங்கிணைக்க, உரிய முடிவுகளை எட்டி நமது மக்களைக் காக்கும் நடவடிக்கையில் இறங்க “விவசாயியை வாழவிடு” என்ற மாநிலந்தழுவிய மாநாட்டை ஆகஸ்டு, 5 – சனிக்கிழமை அன்று தஞ்சையில் நடத்த விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம்.
தஞ்சை திருவள்ளுவர்(திலகர்) திடலில் நடைபெறும் மாநாட்டின் கருத்தரங்கம் காலை 10 மணிக்குத் தொடங்கும். கருத்தரங்கில் பல்வேறு வேளாண் வல்லுநர்களும், அறிஞர்களும் உரையாற்றுகின்றனர்; மாலை 5;30 மணியளவில் நடைபெறும் மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் பஞ்சாப், ஆந்திரா, தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு விவசாயச் சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
உழைக்கும் மக்களின் பங்களிப்பு, பங்கேற்போடு “ மூடு டாஸ்மாக்கை” மாநாட்டை கடந்த ஆண்டு ஆரம்பத்தில் வெற்றிகரமாக நடத்தினோம். தமிழகத்தைக் குடியிலிருந்து மீட்கும் போராட்டத்தை நமது பெண்கள் கையிலெடுத்து விட்டனர். விவசாயிகளைக் காக்க இதனினும் வலிய போராட்டத்தை முன்னெடுக்க இம்மாநாடு ஒரு தொடக்கமாக அமையவேண்டும்.
எனவே, மாநாடு சிறப்புற அமைய உங்கள் பங்கேற்பு மிக அவசியம். அத்துடன் உங்களின் நிதி உதவியும் மிக முக்கியம். உங்கள் அதிகபட்ச நிதியைத் தாருங்கள்.
நிதி அளிக்க விழைவோர் பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.
- STATE BANK OF INDIA, POZHICHALUR BRANCH
- A/C Holder’s name: C. VETRIVELCHEZHIYAN
- A/c. No.: 62432032779
- IFSC CODE: SBHY 0021334
குறிப்பு; மாநாட்டு அரங்கில் அமைந்துள்ள எமது அலுவலகத்தில் நேரடியாகவும் தங்களுடைய நிதிப் பங்களிப்பை வழங்கலாம்.
ஆகஸ்ட் 5 அன்று மாநாட்டையொட்டி, விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை, தெளிவான கண்ணோட்டத்தோடு பகுப்பாய்வு செய்து “விவசாயியின் அழிவு ! சமூகத்தின் பேரழிவு!! ” என்ற குறுநூலை வெளியிடுகின்றோம்.
விவசாயிகள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீீீீர்வு காண இந்த சிறு புத்தகம் பரந்த அளவில் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும்.இதனை நூற்றுக்கணக்கில் வாங்கி உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள்.
இந்த வெளியீடு தஞ்சை மாநாட்டு வளாகத்தினுள் விற்பனைக்கு கிடைக்கும். நன்கொடை ரூ 10 மட்டுமே.
நன்றி!
தோழமையுடன்,
தோழர் ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.