Saturday, May 10, 2025
முகப்புசெய்திஆட்சியாளர்களின் அலுவலர்களாக நீதிபதிகள் - லஜபதிராய் உரை

ஆட்சியாளர்களின் அலுவலர்களாக நீதிபதிகள் – லஜபதிராய் உரை

-

ஞ்சையில் ஆகஸ்டு 5, 2017 அன்று மக்கள் அதிகாரம் நடத்தும் “விவசாயியை வாழவிடு” மாநாட்டின் கருத்தரங்கில்  “விவசாயிகள் பிரச்சினையில் நீதிமன்றத்தின் பாராமுகம்” என்ற தலைப்பில் வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள்  ஆற்றிய  உரையின் சுருக்கம்.

டக்குமா? நடக்காதா? என்று இருந்த மாநாடு.  100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கடைசி நேரத்தில் ஓடி வெல்வது போன்று வெற்றிகரமாக நடக்கிறது.

கூடுவிட்டு கூடுபாயும் மந்திரக்கதைகளை சிறுவயதில் கேட்டபோது நம்பியதில்லை.  உலகத்தில் உள்ள  மந்திரவாதிகளை விட கூடுவிட்டு கூடுமாறும் மந்திரவாதிகள்  நீதிபதிகள். மதுரையில் நடந்த கிரானைட் கொள்ளையில் திமுக ஆட்சியில் இருந்த வரை அழகிரி பற்றி எதுவும் பேசாதவர்கள் நீதிபதிகள். அதே ஆட்சி அதிகாரம் மாறும் போது எளிதில் மாறியவர்களும் அவர்கள்தான்.

நில சீர்திருத்தச் சட்டம் கொண்டு வந்தார்கள். அந்த சட்டத்தின் மூலம் ஒருவர் முப்பது ஏக்கர் நிலம் தான் வைத்துக்கொள்ள முடியும். இதனை எதிர்த்து  பஞ்சாபில் ஒருவர் தொடர்ந்த வழக்கில் இந்த சட்டம் செல்லாது என்று அறிவித்தார்கள் நீதிபதிகள்.

H.R. கோக்லே என்பவர்  மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி. தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். பிறகு காங்கிரசு சார்பில் சட்ட அமைச்சர் ஆனார். அமித்ஷா வழக்கை தள்ளுபடி செய்ததால் தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம்,  கேரளா ஆளுநர் ஆகிவிட்டார்.

போலீசாகவோ, நீதிபதியாகவோ ஒருவர் வரும் பொழுது அவர்களுடைய மூளை செல்கள், இதய செல்கள் அனைத்தையும் அறுவை சிகிச்சை செய்து விட்டு வருவார்களோ என்று நினைத்ததுண்டு. அது இப்பொழுது உறுதியாகிவிட்டது. இந்த மாநாட்டிற்கு குழந்தைகள் எத்தனை பேர் வருவார்கள் என்று கேட்கிறார்கள். இப்படி ஒரு கேள்வியை கேட்க முடியுமா?

மன்னர் மானிய வழக்கு, சொத்துரிமை வழக்கு போன்றவற்றில்  மன்னர்களுக்கு சலுகைகள் பல நீதிமன்றம் வழங்கியுள்ளது. பிறகு சட்ட திருத்தம் கொண்டு வந்து தான் மன்னர் மானிய முறை ஒழிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் எப்பொழுதும் நிலச்சுவாந்தாரர்கள், சொத்துடமையாளர்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வழங்கியுள்ளது.

“நீதிபதிகள் எப்பொழுதும் உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு இறக்கம் காட்டத் தவறியதில்லை என்று சொன்னதற்காக ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  போட்டார்கள்.

“Gods of small Things” என்ற நூலில் நீதிபதியை விமர்சித்து எழுதியதற்காக அருந்ததிராய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டார்கள். இப்படி எதைப் பேசினாலும் வழக்கு போட்டு முடக்கும் பணியைத்தான் நீதிபதிகள் செய்கிறார்கள்.

சமூக வரலாறு தெரிந்தவர்கள் யாரும் நீதிமன்றத்திற்கு சென்றிருக்க மாட்டார்கள். சாதாரண மக்கள் தான்  நீதித்துறை என்பது பெரிய அறிவு சார்ந்தது என்று நினைக்கிறார்கள்.

கிழக்கு கடற்கரை வழக்கு பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். சிலிக்கான் ஏரி. மிகவும் புகழ் பெற்ற ஏரி. அங்கே பல வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வரும். ஆந்திரா, ஒரிசா மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் அந்த பகுதி விளங்குகிறது.  அதனை டாடாவிற்கு 1000 ஏக்கர் லீசுக்கு விட்டார்கள்.  மக்கள் அதனை எதிர்த்து போராடினார்கள். போராட்டத்தில் பங்கேற்காத சிலர் வழக்கு போட்டார்கள்.

அந்த மக்கள் நிறைந்த பெளர்ணமி அன்று திரண்டு டாடாவின் கட்டிடம் முழுவதையும் இடித்து தள்ளி வெற்றி பெற்றார்கள்.

பிளாச்சிமடா வழக்கில் கொக்கோகோலா கம்பனி ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்தது. நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. “அவர்கள் தண்ணீர் இவ்வளவு தான் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்றார்கள் நீதிபதிகள்”. ஆனால் காவிரி பிரச்சனையில் தண்ணீர் தர மறுத்தது குறித்து எதுவும் பேசவில்லை.

ஆட்சியாளர்கள் எந்த அறிவுப்பூர்வமான சட்டங்களையும் கொண்டு வந்ததில்லை. அந்த ஆட்சியாளர்களின் அலுவலர்களாத்தான் நீதிபதிகள் இருக்கிறார்கள். மக்கள் போராட்டத்தால் மட்டும் தான் நீதி கிடைக்கும். போராடுவோம்.
– வினவு செய்தியாளர்கள்

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க