Thursday, May 1, 2025
முகப்புகலைகவிதைபசுவைக் காப்பார்கள் - சிசுவைக் கொல்வார்கள் !

பசுவைக் காப்பார்கள் – சிசுவைக் கொல்வார்கள் !

-

அரசியல் பேசும் பிணங்கள் !

மோடியின் ஆட்சியில்
மூச்சு முட்டுது நாடு.
யோகியின் ஆட்சியில்
மூச்சுத்திணறி
பச்சிளம் குழந்தைகள் சாவு.

எழுபத்தியோராவது
சுதந்திர தினத்தின்
எடையைக் கூட்டும்
எழுபத்தியோரு குழந்தைகளின்
பிணங்கள்.

தரகர்களின் பிடியில்
தாய் திருநாடு
இனி நாம் மூச்சு விடுவதும்
பெரும் பாடு.

சிசுவைக் காப்பாற்ற
வக்கில்லை
பசுவைக் காப்பாற்ற
புறப்பட்டு விட்டார்கள்!

காவிகளின் வளர்ச்சியில்
அரிசிக்கும் பஞ்சம்
ஆக்ஜிசனுக்கும் பஞ்சம்.

தூய்மை நிர்வாகத்தின்
யோக்கியதைக்கு
வெளிறிய பிணங்களின்
விழிகளே சாட்சி.

குஜராத்தில்
கருவிலிருக்கும் குழந்தைகளின்
மூச்சை நிறுத்துவதற்கே
கலங்காத சூலங்கள்.
வெளியிலிருக்கும் குழந்தைகளின்
மூச்சை நிறுத்தியதற்கா
வெட்கப்பட போகிறது!

இந்தியாவின் குழந்தைகள்
உலகத்தை விட்டே
போவது பற்றி
பிள்ளைக்கறி நாயனார்களுக்கு
பெரிதும் கவலையில்லை,

அமெரிக்க ட்ரம்ப்பின்
பிள்ளைகள்
ஐதாராபாத் வருவதற்காக
இப்போதே
ஐம்பத்தாறு அங்குலம் மார்பு
மகிழ்ச்சியில் துடிக்கிறது.

ஏழை இந்தியரைக் காப்பாற்ற
ஒரு பிராணவாயு உருளைக்கு
வழியில்லை,
மூலைக்கு மூலை
ஏ.டி.எம்.- பே.டி.எம்.
வளர்ச்சியாம் வல்லரசாம்!

பொது மருத்துவமனையை
எட்டிப் பார்ப்பதற்கே
ஆதித்யநாத் காவிக்கு
இருபது குளிர்சாதனப் பெட்டி!

உயிர் பிழைக்க
ஒரு ஆக்ஜிஜன் சிலிண்டரின்றி
உ.பி. குழந்தைகளுக்கு
சவப்பெட்டி.

இறந்த குழந்தையின் உடலைச் சுமந்து செல்லும் உறவினர் ஒருவர்

இந்துத்துவம் பயணிக்க
மெர்சி‍டிஸ் கார்.
ஏழை இந்தியர்கள் பயணிக்க
பாடைக்கும் வழியின்றி
பரிதவிக்கும் தோள்.

கிடை பிணங்களை
நடை பிணங்கள் சுமக்கும்
நாடு இது.

தெரியும்படி செத்துவிட்டார்களே
என துடிக்கும் அரசு இது.

சோற்றுக்கு வழியின்றி
தாய் சாகிறாள்
காற்றுக்கு வழியின்றி
பிள்ளை சாகிறான்.

மூக்கில் நுரை தள்ளி
உதடுகள் துடித்து
தவித்து அடங்கிய இதயங்களின்
பயத்திலிருந்து வீசுகிறது
மேக்இன் இந்தியாவின்
பிணவாடை!

ராமாயண அருங்காட்சியத்திற்கு
பல கோடி
அரசாங்க மருத்துவமனைக்கு
டெட் – பாடி!

பிராமண வாயு
திணிக்கப்படும் நாட்டில்
இனி
பிராண வாயுக்கு
வழியில்லை!

– துரை. சண்முகம்.

மேலும் :

கோராக்பூர் குழந்தைகள் படுகொலை – மரணத்தின் நிறம் காவி

_____________

பாசிச பாஜக அரசைத் தோலுறிக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு  நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க