முன்னெப்போதுமில்லாத வகையில் போரட்டக்களமாகி இருக்கிறது நமது உலகம். இதில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போர்கள், பிராந்திய வல்லரசுகளின் அடக்குமுறைகள், அந்தந்த நாட்டு அரசுகளின் ஒடுக்குமுறைகள், இயற்கை சீற்றங்கள், மருத்துவமனை அலட்சியங்கள் என விதவிதமானவை இருந்தாலும் அனைத்திலும் மக்கள் பாடம் கற்கிறார்கள். அதுதான் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்கிறது. அந்தக் காட்சிகள் சில.

சிரியாவின் ராக்காக் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரு அல்-கைஸ் மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் -சிற்கு எதிரான போராட்டத்தில் சிரிய ஜனநாயகப் படையின் மறைந்திருந்து சுடும் வீரர் ஒருவர்.
இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு) இறந்த போன தனது மகள் ஆருஷியின் (6) புகைப்படத்தை ரிங்கி சிங் (31) வைத்திருக்கிறார். ஏழு நாட்களில் 70 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் இறந்தனர்.
நைரோபியில் கென்ய எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்களுடன் மோதிய காவலர்களுக்குப் பின்னால் ஒரு பெண் மறைகிறார்.
இந்த ஆண்டு மெக்காவிற்கு ஹஜ் புனித யாத்திரை செல்வதற்கு முன்னதாக காசாவில் உள்ள ஒரு பேருந்து சாளரம் வழியாக பாலஸ்தீனிய பெண் ஒருவர் அவரது பேரனை முத்தமிடுகிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த குசான் நகரத்தின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஏற்பட்டத் தீ விபத்தில் நெருப்பினால் சூழப்பட்ட வீடுகளின் மீது தண்ணீரைப் பீய்ச்சியடிக்கிறார் தீயணைப்பு வீரர் ஒருவர்.

தென்னாப்பிரிக்காவிலுள்ள இரஸ்டன்ஸ் – பர்க்கிலுள்ள லோன்மினின் நிறுவனத்திற்குச் சொந்தமானது மரிக்கானா பிளாட்டினம் சுரங்கம். வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது காவல்துறையினால் 34 சுரங்கத்தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதன் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளை சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான சங்கத்தின் (AMCU) உறுப்பினர்கள் பாட்டுப்பாடி நினைவுகூர்கின்றனர்.
நாபுலஸ் நகருக்கு அருகே ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை ஊரான கோஃப்ர் காடோமில் நடக்கும் மோதல்களின் போது பாலஸ்தீனிய போராட்டக்காரர்களை நோக்கி இஸ்ரேலிய படைவீரர் ஒருவர் தனது ஆயுதத்தை குறிவைக்கிறார்.
விர்ஜினியாவின் சார்லட்ஸ்வில் நகரில் ஒரு நினைவிடத்தில் ஹேத்தர் ஹெயரின் புகைப்படம் ஒன்று தரையில் வைக்கப்பட்டிருக்கிறது. இனவாத எதிர்ப்பு போராட்டக் கூட்டமொன்றின் மீது ஒருவன் காரை மோதியதில் அவர் கொல்லப்பட்டார்.
சியாரா லியோனில் (Sierra Leone) இருக்கும் ஃப்ரீடவுன் நகரில் ஏற்பட்ட மண்சரிவின் போது தனது மகனை இழந்த தாய் ஒருவருக்கு கன்னாட் மருத்துவமனைக்கு அருகே ஆறுதல் கிடைக்கிறது. கடுமையான மழைக்குப் பிறகு திங்கட்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் போது 400 -க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
வெனிசுலாவின் அரசியல் குழப்பங்களைத் தீர்க்க இராணுவ ஆலோசனையை முன்வைத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பினைக் கண்டித்து நடைபெற்ற ஒரு பேரணியில் கராகாஸில் உள்ள அரசு ஆதரவாளர்கள் அமெரிக்க அரசு உருவகமான “அங்கிள் சாம்” உருவத்தை வைத்து பகடி செய்கின்றனர்.
இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
Related