privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷுக்கு சிவப்பஞ்சலி - தஞ்சை அரங்கக் கூட்டம் !

பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷுக்கு சிவப்பஞ்சலி – தஞ்சை அரங்கக் கூட்டம் !

-

இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கு எதிரான போரில் வீர மரணம் ! பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷுக்கு சிவப்பஞ்சலி – தஞ்சை அரங்கக் கூட்டம் !

 

நாள் : 18.09.2017, மாலை 5:45 மணிக்கு,
இடம் : பெசண்ட் அரங்கம், பழைய பேருந்து நிலையம், தஞ்சாவூர்.

தலைமை :

தோழர். இராவணன், ம.க.இ.க. நகரச் செயலாளர். தஞ்சை.

அஞ்சலி உரை :

பேரா. வி. பாரி, மன்னர் சரபோஜி கல்லூரி, தஞ்சை.

திரு. சீனிவாசன், மூத்த பத்திரிக்கையாளர், தஞ்சை.

தோழர். களப்பிரன், மாநில துணைச் செயலாளர். த.மு.எ.க.ச.

வழக்குரைஞர். இ. சதீஸ்குமார், மனித உரிமைப் பாதுகாப்பு மையம். தஞ்சை.

தோழர். காளியப்பன், மாநில இணைச்செயலாளர், ம.க.இ.க.

தோழர். அருள் எழிலன், மூத்த பத்திரிக்கையாளர், சென்னை.

அனைவரும் வருக !!

***

பார்ப்பனர்கள் சாப்பிட்ட இலையில் படுத்து உருண்டால் புண்ணியம் என்ற சுயமரியாதையற்ற மூடத்தனம், தாழ்த்தப்பட்டவர்கள் குடிநீர் எடுப்பதைத் தடுத்து கிணற்றில் நஞ்சு கலக்கும் கொடூர சாதி வெறி. பகுத்தறிவு பேசியதால் கல்புர்கி படுகொலை, குஜராத்துக்கு இணையான இந்து மதவெறி – இசுலாமிய வெறுப்பு இது தான் கர்நாடக மாநிலம்.

பார்ப்பனிய இந்து மதவெறி, தீண்டாமைக் கொடுமை, முடைநாற்றம் வீசும் மூடத்தனம் ஆகியவை தலைவிரித்தாடும் சமூகத்தில் ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல் அதிகார போதையில் ஆட்டம் போடும் நாட்டில் இவர்களுக்கெதிராக அசாத்திய துணிச்சலுடன் சமரசமற்றுப் போராடியவர்தான் பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ்.

ஊடகத்துறையில் ஒப்பற்ற முன்னுதாரணத்தைப் படைத்தவர் கெளரி. இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்று டைம்ஸ் ஆப் இந்தியா, இ.டிவி போன்ற முன்னணி ஊடகங்களில் பணியாற்றியதோடு, பல வெளிநாட்டு இதழ்களிலும் எழுதி வந்தார்.

முற்போக்குக் கவிஞரும் பத்திரிக்கையாளருமான தனது தந்தை லங்கேஷ் மறைவுக்குப்பின் அவர் நடத்திவந்த லங்கேஷ் பத்திரிக்கையைப் பொறுப்பேற்று நடத்திவந்தார்.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பலை சமரசமின்றி அம்பலப்படுத்தி வந்ததோடு அவர்களின் சாதி வெறி அடாவடிகளையும் துணிவுடன் எதிர்த்து வந்தார். மோடி கும்பலை மட்டுமின்றி காங்கிரசின் ஊழலையும் தோலுரித்தார். ஆதிக்க லிங்காயத் சாதியில் பிறந்தவராயினும் தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைத்துப் பாதுகாக்க அயர்வின்றி உழைத்தார்.

ஆர்.எஸ்.எஸ் கும்பலால் தேசத்துரோகி என தூற்றப்பட்ட டெல்லி JNU மாணவர் கண்ணையா குமாரையும், குஜராத்தில் தலித் மக்களின் எழுச்சிக்குத் தலைமையேற்ற ஜிக்னேஷ் மேவானியையும் தனது வளர்ப்பு மகன்கள் என அறிவித்து ஆதரித்தார்.

அவர் மீது நாற்பது வழக்குகள் போடப்பட்டன. ஒரு வழக்கில் கடந்த ஆண்டு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் பிணையில் வந்தும் போராட்டத்தைத் தொடர்ந்தார். ஏராளமான மிரட்டல்கள் அன்றாடம்  வந்த போதும் ஒரு முறைகூட போலீசில் புகார் தரவில்லை. எதிரிகளின் முகத்தில் உமிழ்வது போல துணிவுடன் நடமாடி வந்தார். ஆனால் எதிரிகளோ முகமூடியணிந்து கோழைத்தனமாகக் கொன்றுவிட்டனர்.

கெளரி, கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் என மக்கள் எழுத்தாளர்களின் பேனாக்களுக்குப் பதில் சொல்ல திரானியற்ற பாசிஸ்டுகள் துப்பாக்கியிடம் சரணடைகிறார்கள்.

மக்கள் போராட்டங்களின் வெப்பத்தில் ஆயுதங்கள் பொசுங்கிப் போனதுதான் வரலாறு. ஆட்சி அதிகாரத் திமிரில் அதீத ஆட்டம் போடுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். அதிமுக என்ற கொள்ளைக்கும்பலை அடியாளாகக் கொண்டு தமிழகத்திலும் கால்பதிக்க வெறிகொண்டு அலைகிறார்கள்.

கெளரியை கொன்றவர்கள் இப்போது கொலையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்கள் விரோத கும்பலை வேரறுக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துவதே கெளரி லங்கேசுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை, தொடர்புக்கு : 94431 57641.

_____________

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடி வரும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி