privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்ஆன்மீக 420 -யும் அரசியல் 420 -யும் ! - செப்டம்பர் 2017 மின்னூல்

ஆன்மீக 420 -யும் அரசியல் 420 -யும் ! – செப்டம்பர் 2017 மின்னூல்

-

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1. செத்தும் கெடுத்த ஜெயா!

புதைக்கப்படாமல் அழுகி நாறும் பிணம் போல முடைநாற்றத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. செத்தும் கெடுத்த ஜெயாவின் சாதனை இது.

2. ராம் ரகீம்சிங் : வல்லுறவு – ஆண்மை நீக்கம் – ஆன்மிகம் – இந்து ராஷ்டிரம்!

சங்க பரிவாரம், அன்று கொலைவழக்கில் சிக்கிய சங்கராச்சாரிக்குத் துணை நின்றது. இன்று வல்லுறவுக் குற்றத்தில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றிருக்கும் ராம் ரகீமுக்குத் துணை நிற்கிறது.

3. ராம் ரகீம்சிங் – நரேந்திர மோடி : ஆன்மீக 420யும், அரசியல் 420யும்

4. பணமதிப்பழிப்பு நடவடிக்கை : சிக்கியது வெள்ளை! தப்பியது கருப்பு!!

மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மாபெரும் மோசடி என மறுக்கவியலாதபடி நிரூபணமாகிவிட்டது.

5. பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மீசை வைத்தால் வீரன் ! மீசையை மழித்தால் ஞானி !!

98.8 சதவீதம் செல்லாத நோட்டுகள் வங்கிக்குள் நுழைந்துவிட்டதை கண்டு பாஜக கும்பல் வெட்கப்படவில்லை. மாறாக அதை வெற்றி என கூசாமல் கொண்டாடுகிறார்கள்.

6. பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மோடி கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி!

7. பணமதிப்பழிப்பு நடவடிக்கை: என்னது… மறுபடியும் முதல்ல இருந்தா…?

கருப்புப் பணத்தையும், இலஞ்சத்தையும், கள்ளப்பணத்தையும், தீவிரவாதத்தையும் ஒழித்துக் கட்டும் மந்திரக் கோலாக முன்நிறுத்தப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை, சொல்லிக் கொள்ளப்பட்ட அதன் அனைத்து நோக்கங்களிலும் தோல்வியடைந்துவிட்டது.

8. பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு: சாதி அரசியலுக்குத் தூண்டில்!

இந்து ஐக்கியம் என்கிற கிழிந்த வேட்டியை அவிழ்த்து எறிந்துள்ள பாரதிய ஜனதா, உட்சாதிப் பிரிவினை மற்றும் இடைநிலைச் சாதிகளை ஒன்றோடு ஒன்று மோதவிடும் சாதி அரசியல் என்கிற நிர்வாண நிலையை எய்தியுள்ளது.

9. நீட் தேர்வு : இன்றைய பலி அனிதா ! நாளைய குறி அரசு மருத்துவமனை !!

நீட் தேர்வை முறைகேடாகத் திணிப்பதன் நோக்கம், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதல்ல; அரசு மருத்துவமனைகள் அனைத்தையும் தனியார்மயமாக்குவதே. அனிதாவுக்கு மருத்துவ சீட் இல்லை, அனிதாவைப் போன்ற ஏழைகளுக்கு இலவச மருத்துவம் இல்லை.

10. கவுரி லங்கேஷ் : பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து நின்ற வீராங்கனை!

11. விவசாயம்: வருமானம் இரட்டிப்பாகவில்லை ! வரி இரட்டிப்பாகிறது !!

விவசாய இடுபொருளுக்கும், உழுபடைக் கருவிகளுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரி, விவசாயிகளின் முதலீட்டுச் செலவை அதிகரித்து, வருமானத்தை குறைத்து, கடன் சுமையைத் தீவிரப்படுத்தும்.

12. குஜராத் மசூதிகள் இடிப்பு : பா.ஜ.க.வை வழிமொழியும் உச்ச நீதிமன்றம்!

2002 இனப்படுகொலையின்போது 567 மசூதிகளை அழித்துவிட்டு, அவற்றுக்கு நிவாரணம் தருவதென்பது மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிரானதாகும் என்று குஜராத் பாஜக அரசு வாதாடியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

 Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

  1. கட்டுரை 8 இங்கு இன்னும் வெளியாகவில்லை போல். நிச்சயமாக எதிர்பார்கிறேன்.
    அண்மையில் திவ்யபாரதி விவாதத்திலும் இந்த எண்ணமே ஏற்பட்டது, சாதிவெறியை தூண்டிவிடும் வேலை அமோகமாக நடக்கிறது. அனிதாவுக்காக தேவர் நாடார் பிள்ளை போராடுது என தெரிந்தோ தெரியாமலோ கூவுபவர்களும் மள்ளர் பட்டியல் வெளிஏற்றத்தை ‘யாரும்’ தடுக்க முடியாதென தெரிந்தே கூவுபவர்களும் பிஜேபி **களின் சதிக்கு துணை போகும் ஒற்றை திருப்பணியே செய்கின்றனர்.

  2. அதெப்படி என புரியவில்ல காரி துப்பி செருப்பால் அடித்து ஓடு நாயே என விரட்டினாலும் கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் ‘திரிஷா இல்லன திவ்விய’ வடிவேலு போல அடுத்த சூழ்ச்சி வேலையில் இறங்கி விடுகின்றனர். எல்லாம் புஸ்வாணமாகி இப்போது தமிழகத்தில் ‘ஹிட்’ ஆககூடிய ‘சாதி’ எனும் பாசுபத அஸ்திரத்தை எடுத்துள்ளனர். எச்சரிக்கை மக்களே. இவர்களின் தன்னம்பிக்கை வியப்பளிக்கிறது, முக்கியமாக தமிழ்** அக்காவின் ‘தாமரை மலர்ந்தே தீரும்’ பேச்சு. என்ன செய்வதம்மா தமிழ்நாடு சேறல்லவே தாமரை மலர.

    • that is to mention the recent increase in caste related hot words being uttered by some so called ‘leaders’ or representatives of the mentioned caste and many social media hostile posts towards other ‘intermediate’ castes. these people are clearly being used by BJP to divert people from taking attention on more serious issues like NEET, GST, hydrocarbon protests, and more importantly BJP’s attempt to root in tamilnadu.

      while the whole ‘caste’ system is a non existing yet existing phantom like disease that divides people for the benefits of the few you know who. how these people take ‘caste’ to be like their DNA or something. utter nonsense.

Leave a Reply to சிக்கியது வெள்ளை ! தப்பியது கருப்பு !! – மோடியின் பணமதிப்பழிப்பு ! | Tamil Kilavi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க