privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபாஜக-வை அலற விடும் பைத்தியமாகிப் போன வளர்ச்சி !

பாஜக-வை அலற விடும் பைத்தியமாகிப் போன வளர்ச்சி !

-

வ்வளவு அசிங்கப்பட்டாலும் கமுக்கமாக இருக்கும் கல்லுளிமங்கர்களான பாரதிய ஜனதா தலைவர்களே இப்போது அலறியடித்துக் கொண்டு பதில் சொல்லி வருகின்றனர். கடந்த பத்தாம் தேதி அகமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா தமது கட்சிக்கு எதிராக நடந்து வரும் விசம பிரச்சாரங்களை முன்னிட்டு இளைஞர்கள் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய ஜனதாவின் ’சொர்ணாக்கா’வான நிர்மலா சீதாராமன், தமது கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் நடந்து வரும் பிரச்சாரங்களுக்கு குஜராத் மாநில பா.ஜ.க பதிலடி கொடுக்கும் என சவுண்டு விட்டுள்ளார். குஜராத் மாநில முதல்வரோ, இது போன்ற பிரச்சாரங்களுக்கு இளைஞர்கள் பலியாகி விடக்கூடாது என்று புலம்பி வருகின்றார்.

விசயம் வேறொன்றும் இல்லை; மூன்றாண்டுகளுக்கு முன் பாரதிய ஜனதா வீசியெறிந்த பூமராங் தற்போது திரும்பி வந்து கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் – குறிப்பாக குஜராத் மாநிலத்தில் “பைத்தியமாகிப் போன வளர்ச்சி” (#Vikas gone crazy) எனும் ஹேஷ் டாக் ஒன்று சமீபமாக வைரலாகப் பரவி வருகிறது. மோடி வகையறாக்களால் “குஜராத் மாடல் வளர்ச்சி” என கடந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் பீற்றிக் கொள்ளப்பட்ட கந்தாயத்தை சமூக வலைத்தள பயனர்கள் மேற்படி ஹேஷ்டாகின் கீழ் கிழித்தெறிந்து வருகின்றனர்.

“இது மொத்தமும் காங்கிரசு சதி” என கையைப் பிசைகிறது பாரதிய ஜனதா. அதில் ஓரளவு உண்மை இருக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. ஆனால், தற்போது கட்சி சார்பானவர்களைக் கடந்து பலரும் இதே தலைப்பின் கீழ் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாரதிய ஜனதா முன்வைத்த குஜராத் மாடல் என்பது எந்தளவுக்கு மோசடியானது என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகின்றனர். காங்கிரசு சார்பானவர்கள் கூட மோடி பாணி “வளர்ச்சியை” இடித்துரைப்பதிலும் ஒரு நகைமுரண் உள்ளது – அதே வளர்ச்சியைத்தான்; அதாவது தரகு முதலாளிகளின் வீக்கத்தைத் தான் காங்கிரசும் வளர்ச்சியாக முன்பு முன்னிறுத்தியது.

இன்னும் சொல்லப்போனால் காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் பாரதிய ஜனதாவின் கொள்கைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இன்று எதிர்வரும் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் லாபங்களுக்காக காங்கிரசு பாரதிய ஜனதாவின் குஜராத் மாடலை உற்சாகமாக அம்பலப்படுத்த முனைந்துள்ளதை ஒரு வகையில் சொந்த செலவில் வைத்துக் கொள்ளப்படும் சூனியம் என்றும் புரிந்து கொள்ளலாம். இன்னொரு வகையில் இரண்டு அயோக்கியர்களும் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் போக்கில் மாறி மாறி உண்மைகளைச் சொல்வதாகவும் புரிந்து கொள்ளலாம்.

காங்கிரசே கூட இந்த ஹேஷ்டாகைத் துவங்கியிருந்தாலும், தற்போது அது நவதாராளமய பொருளாதாரக் கொள்கைகளை தோலுரிக்கும் வகையில் மக்களின் பங்கேற்பை பெற்றுள்ளது. எனவே, காங்கிரசு – பா.ஜ.க அக்கப்போர்களை ஒதுக்கிவிட்டு நாம் இந்த ஹேஷ்டாகில் வெளியாகி உள்ள சில சுவாரசியமான பதிவுகளைப் பார்ப்போம்.

இதோ வளர்ச்சியின் வேலையிழப்புகள்

ஓட்டை விழுந்த சாலையில் கவிழ்ந்து கிடக்கும் மோடியின் ’வளர்ச்சி’

பள்ளிக்குச் செல்லும் ’வளர்ச்சி’

படம்: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் பாதைகள்
கேள்வி – வளர்ச்சி எங்கே?
பதில் – அது புல்லட் ரயிலில் உட்கார்ந்திருக்கிறது

நண்பர்களே, குஜராத்தில் வளர்ச்சிக்கு எப்போதோ பைத்தியம் பிடித்து விட்டது.

இதோ ‘வளர்ச்சி’யின் காலத்தில் நடந்த ஊழல்களின் பட்டியல்.

ஒரே மழைக்கு ஓட்டையாகிப் போன சாலைகளின் ’வளர்ச்சி’.

389 கோடி செலவில் கட்டப்பட்ட அணை திறந்து வைப்பதற்கு ஒரு நாள் முன்பு நொறுங்கி விட்டது. அட, நிதிஷ் குமாரின் பீகாரிலும் வளர்ச்சிக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?

இது ’ஸ்கில்’ (திறன்) இந்தியா இல்லை; ’கில்’ (கொலை) இந்தியா.

புல்லட் ரயில் – மோடியின் ஆர்வத்தின் பின்னணி – சீனாவில் புல்லட் ரயில்பாதை அமைக்க ஆன செலவு கிலோமீட்டருக்கு 104 கோடி ரூபாய். ஆனால் இந்தியாவில் 210 கோடி –  இதற்குப் பெயர் தான் ஊழல், திருவாளர் மோடி அவர்களே.

மோடியின் ஆட்சியில் மாடுகளும் எருமைகளும் தான் பாதுகாப்பாக உள்ளது. மனிதர்கள், குறிப்பாக பத்திரிகையாளர்கள் அடைபட்டுள்ளனர். இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கும் விசயங்கள் நகைப்பை உண்டாக்குகின்றன.

இப்படித் தான் வளர்ச்சிக்கு பைத்தியம் பிடித்தது

 

பாஜக பசு அம்பானிக்கு மட்டும் பால் தரும் – மக்களுக்கு கோமியமும் சாணமும் தான்.

கோட்டு கலர்ல நோட்டு – கருப்புப் பணத்த ஒழிச்சிடோம்ல…

வளர்ச்சியைக் கண்டு பிடித்துவிட்டேன் நண்பர்களே !

வேலைவாய்ப்பின்மை

மோடியின் புதிய கல்விக் கொள்கை – கார்ட்டூன்

கார்ட்டூன் : நண்பர்களே, பாத்தீங்களா நம்ம நாடு எப்படி மேலே போய்கிட்டு இருக்குன்னு.

மோடி : ஆப் கீ பார் …  (உங்களுக்கு முன்….)
விவசாயி : அய்யா தூரத்திலேயே கையெடுத்து கும்பிட்டுக்கறேன், ஆள விடு சாமி..

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி