விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கொடிக்கம்பம் இந்த ஆண்டு ஏப்ரல் 22 தோழர் லெனின் பிறந்த நாளன்று நிறுவப்பட்டது.

அந்த கொடிக்கம்பத்தை 20.09.2017 அன்று இரவு சமூக விரோதக் கும்பல் ஒன்று வெட்டி சாய்த்து, அருகில் இருந்த கரும்பு தோட்டத்தில் தூக்கி வீசியுள்ளது. அதைக் கேள்விப்பட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ’மக்கள் அதிகாரம்’ தோழர்கள் கொடிக் கம்பத்தைப் பார்த்து விட்டு, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். கொடிக்கம்பம் சாய்க்கப்பட்ட இடத்தில் சமுக விரோதக் கும்பலை அம்பலபடுத்தும் வகையில் தட்டி வைக்கப்பட்டது.
அதன் பிறகு அந்த சமுக விரோதக் கும்பலை அம்பலபடுத்தி, பகுதி முழுவதும் 5 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. தெருமுனைப் பிரச்சாரத்தில் கொடிக்கம்பத்தை உடைத்தவர்களை கண்டுபிடித்து மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 24.09.2017 அன்று காலை 9:50 மணியளவில் காரப்பட்டு கிராமத்தில் இருந்து தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கொடிக்கம்பம் உள்ள இடம் வரை முழக்கமிட்டப்படி ஊர்வலமாக சென்றனர். பின்னர் மக்கள் அதிகாரம் கிளை ஒருங்கிணைப்பாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர் ஏழுமலை கொடியினை ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து மக்கள் அதிகார மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் கலை கண்டன உரையாற்றினார். சமுக விரோதக் கும்பலைக் கண்டித்தும், கட்டமைப்பு நெருக்கடி குறித்தும் இன்றைய சூழலில் மக்கள் அதிகாரத்தின் அவசியத்தையும் விளக்கிப் பேசினார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம் மண்டலம்.
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி