privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருச்சி இனியாவை பலி கொண்டது டெங்கு மட்டுமா ?

திருச்சி இனியாவை பலி கொண்டது டெங்கு மட்டுமா ?

-

மிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் என சாவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த 06.10.2017 அன்று திருச்சியில் இனியா என்கிற 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

சிறுமி இனியா

அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்த இனியாவுக்கு, காய்ச்சலுக்கான சிகிச்சை திருவெறும்பூர் அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக அளிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் அங்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையளிக்கும் வசதியில்லை எனக்கூறி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர்.

அக்குழந்தையை ஏற்றி செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தும் வரவில்லை. காரணம், அந்த வாகனம் அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில் அவரது உறவினரை அழைத்து வர சென்னைக்கு சென்றுவிட்டது.

எனவே சிறுமியை ஆட்டோவில் வைத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாலை 4:30 மணிக்கு அழைத்து வந்தனர். குழந்தையை உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சையைத் தொடங்காமல், முன்பதிவு செய்யும்படி கூறி காக்க வைத்து 5:30 மணிக்குதான் உள்ளே அனுப்பி உள்ளனர். ஆனால் பரிதாபமாக குழந்தை இறந்து விட்டது.

இப்படித்தான் மருத்தவமனையின் அலட்சியத்தினாலும் போதிய மருத்துவ வசதியுமின்றியும் நமது மக்கள் பலர் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சிகிச்சைக்காக வரும் மக்கள் துன்பப்படுகின்றனர். தண்ணீர் பயன்பாடுக்காக போடப்பட்ட 10 ஆழ்துளை குழாய்களில் மூன்றில் மட்டுமே தண்ணீர் வருகிறது. கழிவறை சுத்தமின்றி நாறிக் கிடக்கிறது.

நில வேம்பு கசாயத்தின் பெயரில் வெறும் சுடுநீரைக் கொடுப்பதும், ஒரு படுக்கையில் இரண்டு நோயாளிகளை தங்க வைப்பது என எந்த வசதியும் இன்றி இம்மருத்துவமனை உள்ளது. நோயாளிகளுக்கு போதிய இருக்கை இல்லாததால் கீழே தரையில் படுக்கவைத்து குளுக்கோஸ் ஏற்றுகின்றனர். இந்நிலையில்தான் இக்குழந்தை இறந்துள்ளது.

குழந்தை இறந்த விசயம் மக்களுக்கு தெரிந்து பிரச்சினையாகக் கூடாது என்பதற்காக. குழந்தையின் உடலை உடனடியாக தூக்கிக்கொண்டு போங்க என்று மருத்துவர், காவல்துறை மற்றும் செக்யூரிட்டிகள் ஆகியோர் இனியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களை விரட்டினர்.

இதற்கிடையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் சென்று இக்கொடுமையை தட்டிக் கேட்டனர். மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்காமல் மக்களை விரட்டுவதிலயே கருத்தாக இருந்தனர். பிறகு மக்களை அணிதிரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

காவல்துறை, பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் அங்கே சூழ்ந்து விட்டனர். மருத்துவமனையின் டீன் வந்து பதில் சொல்ல வேண்டும் என அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு வந்த டீன்-யை சுழ்ந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் – உறவினர்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினர். அவற்றை எழுதி தர சொல்லி பெற்றுக் கொண்ட டீன் இன்னும் 2 நாட்களில் சரி செய்து விடுகிறோம் எனக் கூறினார்.

இந்த கோரிக்கைகைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும். அதில் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றவுடன் மக்கள் தங்களது தொலைபேசி எண்ணை ஆர்வமுடன் தந்தனர். மேலும் “நம்ம வரிப்பணத்துல சம்பளம் வாங்கி கிட்டு நமக்கு எந்த வசதியும் செஞ்சு கொடுக்கல என்னத்துக்கு ஓட்டு போடணும்” என்றும் “ஓட்டுக்கேட்டு எவன் வந்தாலும் இனி வெளக்கமாத்தாலே அடிப்போம்” என்றும் மக்கள் கூறினர்.

அரசு மருத்துவமனை டீனிடம் நாம் உடனடியாக செய்யச் சொன்ன கோரிக்கைகள்:

  • மருத்துவமனையில் குடிக்க கூட தண்ணீர் இல்லை. நோயாளிகளுக்கு வெந்நீர் கிடைப்பதில்லை. அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • நிலவேம்பு கசாயம் முறையாக தருவதில்லை அதை 24 மணி நேரமும் கிடக்கும் வகையில் தங்கு தடையின்றி கொடுக்க வேண்டும்.
  • நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை. 2 நோயாளிகளுக்கு ஒரு படுக்கை என்ற நிலைமை உள்ளது அதிகப்படியான படுக்கைகளை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • கழிப்பறை சுத்தம் செய்வதில்லை. அங்கும் போதிய தண்ணீர் இல்லை.அதை சரி செய்ய வேண்டும்.
  • தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி சீட்டுக்கு காத்திருக்க வைக்காமல், உடனே மருத்துவம் பார்க்க வேண்டும்.
  • உடனுக்குடன் இரத்த பரிசோதனை எடுத்து ரிசல்ட் தருவதற்கேற்ப 24 மணிநேரமும் இயங்க வேண்டும்.
  • டெங்கு உறுதி செய்ய எலிசா டெஸ்ட் எடுக்க வேண்டும்.
  • இதற்கேற்ப கூடுதல் மருத்துவர், பணியாளர்களை போட வேண்டும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி.   94454 75157.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி