privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரவினாடி வினாஇந்திய – தமிழக நதிகள் : பொது அறிவு வினாடி வினா – 4

இந்திய – தமிழக நதிகள் : பொது அறிவு வினாடி வினா – 4

-

சென்ற வினாடி வினாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி. பதினான்கு கேள்விகளுக்கும் சரியான பதில்களை ஆறு நண்பர்கள் சொல்லியிருக்கின்றனர். பிறகு 13, 12, 11, 10 வரை சரியான பதில்களை சராசரியாக பத்து முதல் இருபது பேர் வரை கண்டுபிடித்தனர். கணிசமான நண்பர்கள் ஐந்து கேள்விகள் வரை சரியான பதில்களை சொல்லியிருந்தனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! மறுமொழிகளில் ஆலோசனை வழங்கிய நண்பர்களுக்கும் நன்றி!

இந்த பகுதியில் இந்திய, தமிழக நதிகள் குறித்து கேட்கிறோம். முயன்று பாருங்கள்!

கீழ்க்கண்ட நதிகளில் காவிரியின் துணையாறு எது?

(விடைக்கான விடுகதை: இந்த ஆறுக்கும் டாலர், ஜக்கி வாசுதேவ், வானவில்லுக்கும் என்ன தொடர்பு?)

நொய்யல் ஆறு
உப்பாறு
கடனா நதி
மணிமுத்தாறு

கீழ்க்கண்ட நதி – மாவட்ட பெயர்களில் எது பொருத்தமற்றது?

(விடைக்கான விடுகதை: ஐயா, தேயிலை நீரில் உப்பு போடலாமா?)

தேனி மாவட்டம் – வெண்ணாறு
கடலூர் மாவட்டம் – கோமுகி
திருச்சி மாவட்டம் – பாம்பாறு
கோயம்பத்தூர் மாவட்டம் – அமராவதி

முல்லைப் பெரியாறு அணை எந்த ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது?

(ஜான் பென்னிகுயிக்கின் சீரிய முயற்சியால் கட்டப்பட்ட இந்த அணையின் முதல் கட்டுமானம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.)

கி.பி 1895
கி.பி 1795
கி.பி 1755
கி.பி 1859

சிவசமுத்திரம் அருவி எந்த நதியில் அமைந்திருக்கிறது?

(இந்த அருவிப் பகுதியில் இருக்கும் நீர்நிலை மின்சார நிலையம், 1902-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது ஆசிய நாடுகளின் மூத்த நீர்நிலை மின்சார நிலையங்களில் ஒன்று. இன்றும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்நிலையம் ஆரம்பத்தில் கோலார் தங்க வயல் தேவைகளுக்கு பயன்பட்டது. இப்போது கோலார் தங்க வயல் மூடப்பட்டுவிட்டது. இந்த அருவி இரண்டு பாதையில் பிரிந்து செல்வதால் இடையில் இருக்கும் தீவுப் பகுதியில் சிவசமுத்திர நகரம் அமைந்திருக்கிறது.)

காவிரி
கிருஷ்ணா
நர்மதா
கோதாவரி

மாஞ்சோலை தேயிலை தொழிலாளர் போராட்டத்தோடு தொடர்புடைய நதி எது?

(இந்த நதிக் கரையில்தான் ஊதிய உயர்வு கேட்டு 1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று  தேயிலைத் தொழிலாளர் நடத்திய பேரணியின் போது காவல்துறையினர் நடத்திய தடியடி படுகொலையில் 17 பேர் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்கள் பல சாதி மதங்களைச் சார்ந்தவர்கள். இருந்தும் முதலாளி வர்க்கத்துக்கெதிரான இந்தத் தொழிலாளிகளின் போராட்டத்தை, திசை திருப்பி, சாதிப் பிரச்சினை என்று அரசியலாக்கினார் அன்றைக்கு பதவியில் இருந்த கருணாநிதி.)

தாமிரபரணி
மணிமுத்தாறு
சேர்வலாறு
வைகை

சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் எந்த நதியோடு தொடர்புடையவர்?

(இந்த நதியில் கட்டப்பட்ட 30 அணைகளில் சர்தார் சரோவார் அணைதான் மிகப்பெரியது ஆகும். 1979 முதல் 2008 வரை இவ்வணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணைக்காக தமது சொந்த கிராமங்களில் இருந்து 18,346 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன என்று அரசு கூறினாலும், எண்ணிக்கை இதைப் போல இரண்டு மடங்கு இருக்கும் என்கிறார் மேதா பட்கர்.)

நர்மதா
கோதாவரி
கிருஷ்ணா
மகாநதி

இந்தியா – பாக் நாடுகள் எந்த ஆண்டில் சிந்து நதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன?

(2016-17 –ம் ஆண்டுகளில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போதாக பாஜக அரசு மிரட்டியது. ஆனால் சிந்து நதியின் வெள்ள நீரை தேக்கி வைக்குமளவு இந்தியாவில் அணைகள் இல்லை என்பதால் இந்த ரத்து என்பது வெறும் உதார்தான் என்று நீர்வளத்துறை நிபுணர்கள் கூறினர். பாக் எதிர்ப்பு அரசியலில் மக்களிடம் ஒரு வெத்து வேட்டு வீரத்தை காண்பிக்க மோடி அரசு இப்படி பேசியது.)

1960
1970
1965
1957

காவிரி தோன்றும் தலைக்காவிரி பகுதி எந்த மலையில் அமைந்திருக்கிறது?

(இந்த மலையில் இருக்கும் காஃபித் தோட்டங்கள் பிரபலமானவை. அனேக பணக்காரர்களுக்கும் முதலாளிகளுக்கும் இங்கே தோட்டங்கள் உண்டு. சிக்மகளூரில் இருக்கும் புதாங்கிரி மலைப் பகுதிக்கு அடுத்து இந்தியாவிலேயே அதிகம் காபி உற்பத்தி செய்யப்டுவது இப்பகுதியில்தான்.)

குடகு மலை
முதுமலை
கல்வராயன்
ஆனைமலை

இராஜஸ்தானில் எந்த நதிக்கு அருகில் ஆஜ்மீர் நகரம் அமைந்திருக்கிறது?

(கி.பி 12-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த நகரம் ஆரவல்லி மலைகளால் சூழப்பட்டது. சூஃபி தர்காக்களும், புராதான கோவில்களும், கோட்டைகளும் இந்நகரில் உள்ளன. ராஜஸ்தானில் ஐந்தாவது பெரிய நகரமாக விளங்கும் அஜ்மீரில் 2011 சென்சஸ் கணக்குப்படி 5,42,580 மக்கள் வாழ்கின்றனர்.)

லூனி
யமுனை
சட்லஜ்
சிந்து

பிரம்ம்புத்ரா நதியின் நீளத்தில் (2,900 கி.மீ) பாதி நீளத்தைக் (1465) கொண்டிருக்கும் நதி எது?

(இந்தியாவில் மட்டும் ஓடும் நதிகளில் கங்கைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நதி இதுதான். இந்நதி எட்டு மாநிலங்களில் பாய்கிறது.)

கோதாவரி
நர்மதா
கிருஷ்ணா
யமுனை

உத்திரப்பிரதேச தலைநகரமான லக்னோ எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?

(1857 முதல் இந்திய சுதந்திரப்போரில் லக்னோ நகரம் ஒரு முக்கியமான மையாமாக இருந்தது.)

கோம்தி
கங்கை
யமுனை
கண்டக்

இந்தியாவில் எந்த நதி மிகப்பெரும் சமவெளிப் படுகையை உருவாக்கியிருக்கிறது?

(இச்சமவெளியில்தான் ஆரியர்களின் பிற்காத வேத நாகரீகம் எழுந்தது. வருணாசிரமத்தின் ஆரம்ப கால மையம் இதுதான். அதன் பொருட்டே இப்பிராந்தியத்தில் பார்ப்ப்பனியத்தை எதிர்த்து புத்த, ஜைன மதங்களும் எழுந்தன.)

கங்கை
சிந்து
பிரம்மபுத்ரா
நர்மதா

மத்தியப் பிரதேசத்தின் இந்திரா சாகர் அணை எந்த நதியில் அமைந்திருக்கிறது?

(அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அவரது பெயர் கொண்ட இந்த அணை 1984-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு அணையின் முதன்மைப் பகுதி 1992-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. தமிழகத்து அம்மா பெயர் பல திட்டங்களுக்கு வைக்கப்பட்டது போல அன்று இந்திரா பெயர் பலவற்றுக்கு சூட்டப்பட்டது. கொள்ளளவின் படி இந்த அணைதான் இந்தியாவில் மிகப்பெரியது.)

நர்மதா
யமுனா
கிருஷ்ணா
சம்பல்

ஹிராகுட் அணை எந்த நதியில் கட்டப்பட்டிருக்கிறது?

(இந்த அணை 1957-ம் ஆண்டில் நேருவால் திறக்கப்பட்டது. இந்த அணைக் கட்டுமானத்தால் ஒன்றறை இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, 22,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.)

மகாநதி
கிருஷ்ணா
நர்மதா
கோதாவரி

 

 

  1. தமிழகத்தை சார்ந்த பாெது அறிவு வினாடி வினாக்களை கேட்டு … அதன் பின் மற்றதை கேட்கலாமே ….

  2. கேள்வி பதில் போன்ற பகுதிகளையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நிறைய அரசியல் சார்ந்த விடயங்களை அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். எ.க காமராஜர் தன் பெயரை “காமராஜர் நாடார்” என பதித்தார் குடியாத்தம் தேர்தலில்.

  3. ரஜினி 1996 தேர்தலில் கட்சி ஆரம்பித்து இருந்தால் முதல்வர் ஆகி இருப்பார்.. இது போன்ற நிறைய அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.. நன்றி..

  4. எம் ஜி ஆர் ராமாவரம் தோட்டத்தில் நிறைய கொலைகள் நடந்துள்ளன என்று பலர் சொல்கிறார்கள். இது உண்மை தானா?? இது போன்ற நிறைய கேள்விகள்..

  5. பாக்கிஸ்தான் சீனாவிற்கு ஆதரவாக இந்தியா வரைபடத்தை தவறாக வெளியிட்ட சீனா கைக்கூலி வினாவிற்கு என் கடும் கண்டனங்கள் (தேசவிரோதி வினவின் மீது E-கல் எரிகிறேன்)

    • மணிகண்டன் , இந்த இந்திய மேப்பை வெளியிட்டது விக்கிமிடியா என்ற நிறுவனம். அதனை பயன்படுத்தியுள்ளது வினவு.. சரியா…? ஒருவேளை இந்த map தவறானது என்றால் என்ன செய்யணும் இந்த மோடி அரசு? அந்த விக்கிமிடியா இணைய தளத்தை தடை செய்யவேண்டியது மோடி அரசின் வேலை தானே? செய்யாமல் என்னத்த புடிங்கி கொண்டு இருக்கு இந்த மோடி அரசு? தூ… மானங்கேட்ட பிஜேபி அரசு…. தேசவிரோத மணிகண்டன்…. தூ தூ….

      இதோ அந்த map இருக்கும் இனைய லிங்க்…

      https://commons.wikimedia.org/wiki/File:India_rivers_and_lakes_map.svg

      இப்ப நீர் கல் எறியபோவது யார்மீது மணிகண்டன்…

      • விக்கிமிடியா இந்தியா நிறுவனம் அல்ல ஆனால் வினவு பாக்கிஸ்தான் சீனாவிற்காக சேவை செய்யும் இந்தியா நிறுவனம்… நிச்சயம் வினவின் செயல் தவறு, அதற்கு என் கடும் கண்டனங்கள்.

        உங்களை போன்ற ஆட்கள் இந்த தவறை கண்டிக்காமல் என்னை திட்டி கொண்டு இருக்கிறீர்கள் அத்தகு நான் தான் உங்களை போன்ற ஆட்கள் மீது காரி துப்ப வேண்டும்.

        வினவிற்கும் உங்களுக்கும் E-கற்களை எரிகிறேன்.

        • கபாலி படத்துக்கு உம் மோடி காட்டிய தேசபக்தி, இந்திய map விசயத்தில் எங்கே போயிற்று சொல்லுங்க மணி…சொல்லுங்க!நீர் எரியற கல்லு ரிடைரக்ட் ஆகி மோடி மேல தானே போயி விழுது மணி! கபாலி படம் இணையத்தில் வந்தது என்று கூவிக்கிட்டு அதனை தடை செய்ய அரசும் அதன் அங்கமான தகவல் தொடர்பு துறை சார்ந்த டெலிகாம் துறையும் எடுத்த முயற்சிகளை பார்த்து இருப்பீர்! அதே வேகத்தில் ஒரு வேலை இந்த map தப்பு என்றால் அதனை அதன் source ஆனா விக்கிமிடியாவில் இருந்து (சர்வரில் இருந்து) டவுன்லோடு செய்து இந்தியாவில் பார்க்க இயலாத மாதிரி தடைசெய்ய மோடிய யாரு தடுத்தா? கபாலி படத்துக்கு உம் மோடி காட்டிய தேசபக்தி, map விசயத்தில் எங்கே போயிற்று சொல்லுங்க மணி…சொல்லுங்க!

Leave a Reply to சட்டக்கல்லூரி மாணவன் குமார் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க