Friday, May 9, 2025
முகப்புசெய்திபொதுக்கூட்டம்: அராஜகங்களுக்கு முடிவு கட்ட ! - மக்கள் அதிகாரம் ! - 28/10/2017

பொதுக்கூட்டம்: அராஜகங்களுக்கு முடிவு கட்ட ! – மக்கள் அதிகாரம் ! – 28/10/2017

-

அரசியல் அக்கிரமங்களுக்கு, அராஜகங்களுக்கு முடிவுகட்டும் போராட்டங்கள் தேவை!

பொதுக்கூட்டம்

நாள் : 28.10.2017 மாலை 5:30 மணி,
இடம் : எம்.ஜி.ஆர். நகர் மார்கெட், சென்னை.

சிறப்புரை : தோழர் ராஜூ மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சி.

***

ன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே !

தமிழக அரசியலில் எடப்பாடிகளும், புரோக்கர் பன்னி கும்பலும், தமிழகத்தை சீரழித்த சதிகாரி ஜெயா பெற்றெடுத்த தீயசக்திகள், ஜெயா, சமாதியான பிறகும், மக்களின் துன்பங்களும் அவமானங்களும் தொடர்கின்றன.

சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்கி, முதல்வராகவும் ஆக்க முயன்ற கிரிமினல் கும்பல்தான், இன்று ஜெயா மரணத்திற்கு நீதிவிசாரணை வைக்கிறது. இட்லி சாப்பிட்டாரா? – சாப்பிடவில்லையா? என லாவணி பாடி மக்களை முட்டாளாக்குகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வென்றால் என்ன – தோற்றால் என்ன? ஜெயா எப்படி செத்தால் நமக்கு என்ன? நம்ம வீட்டில் உலை கொதிக்குமா?

சிந்தனையைமழுங்கடிக்கும் ஊடகங்கள்

எம்.எல்.ஏ -க்களுக்கு டிடிவி கரன்சியாகக் கொடுத்தால், எடப்பாடியோ மணல் குவாரிகளையே பிரித்துக் கொடுக்கிறார். குதிரை பேரத்தில் கரன்சி மழை பொழிகிறது. எந்த ஒளிவு மறைவும் இல்லை. தேர்ந்தெடுத்த மக்களுக்குத் துரோகம் செய்பவனை தொகுதிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற ஆத்திரத்தை ஊடக விவாதங்கள் ஏற்படுத்தவில்லை.

ஜெயா மரணம் முதல், நடைபெறும் சட்டத்துக்குப்புறம்பான ஆட்சி வரை – அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோருக்கு மக்களிடம் பொய் சொல்கிறோம் என்ற பயமேதும் இல்லை. பாஜக, தமிழகத்தை கைப்பற்ற, அடிமை எடப்பாடி ஆட்சி தொடர வேண்டும். அதிமுக கொள்ளையடிக்க பாஜக -வின் ஆசி வேண்டும்.

டிடிவி ஆதரவு எம்எல்.ஏ -க்களை நீக்கியது தவறு ; திமுக எம். எல்.ஏ -வை நீக்காதே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்து – நடத்தாதே என வழக்குகள், எங்களை நீக்கிய தனபால் அவர்களை ஏன் நீக்கவில்லை என வழக்கு – இந்த லாவணிக் கச்சேரியில், இரண்டில் ஒன்றைத் தொடுவதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை என்பதுபோல் ஊடகங்கள் விவாதங்களைக் கட்ட மைக்கின்றன.

“இவனுக்கு அவன் பரவாயில்லை, வேறென்ன செய்ய முடியும்?” என போதைக்கு அடிமையான குடிகாரனைப் போல் சகித்துக்கொள்ளப் பழக்கப்படுத்தப்படுகிறோம்.

நீட் தேர்வு வேண்டும் – வேண்டாம், நடத்து – நடத்தாதே என எத்தனை வழக்குகள், தீர்ப்புகள். இதைப் பற்றி தினந்தோறும் பத்திரிகை தொலைக்காட்சிகளில் அனல் பறக்கும் விவாதங்கள், இவை எதுவும் அனிதாவைக் காப்பாற்றவில்லை. அரசு மருத்துவமனையையும் காப்பாற்றப் போவதில்லை, நீட்டின் தரம், உ.பி.வில் கொந்துக் கொத்தாக இறக்கும் குழந்தைகளுக் கும், டெங்கு காய்ச்சலில் சாகும் ஏழைகளுக்கும் நிவாரணம் வழங்குமா?

காவிரி நீர் உரிமை தமிழகத்திற்கு உண்ட? இல்லையா? என 1991 முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. 1,000 ரூபாயை சில்லரையாக மாற்றி எத்தனை முறை எண்ணிப் பார்த்தாலும் ஆயிரம் ரூபாய்தான். அதைத் திரும்பத் திரும்ப எண்ணிக்காட்டி ஏமாற்றுவது போல உச்ச நீதிமன்றம், மீண்டும் மீண்டும் விசாரித்து தமிழகத்திற்கு தண்ணி வருவதைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மோடி அரசு தமிழகத்திற்குத் துரோகம் இழைத்துள்ளது.

கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்கு

மோடி என்றால் மோசடி என்றாகிவிட்டது. அண்டப்புளுகு ஆகாசப்புளுகையெல்லாம் மிஞ்சிவிட்டது மோடிப்புளுகு வெளிநாட்டுக் கருப்புப் பணம் வரவில்லை. உள்நாட்டுக் கருப்புப் பணம் ஒழியவில்லை. ரூ. 500, 1000 நோட்டு செல்லாது என்ற முடிவால் மக்கள் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான சிறு குறுந்தொழில்கள் அழிந்தன. பொருளாதாரம் வீழ்ந்தது. ஆனால் பாஜக -வின் திமிர்மட்டும் குறையவில்லை.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றார் மோடி. கடன் தள்ளுபடி ஆதார விலை கோரிப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது பாஜக வின் ம.பி அரசு. வக்கிரமான முறையில் விவசாயிக்கு ஒரு ரூபாயை மட்டும் கடன் தள்ளுபடி செய்துள்ளது பாஜக, உ.பி அரசு. ஆனால் பூசன், எஸ்ஸார், ஜிண்டால் ஆகிய மூன்று இரும்பு ஆலை முதலாளிகளுக்கு மட்டும் ஒரு லட்சம் கோடிக்குமேல் கடன் தள்ளுபடி செய்துள்ளது மோடி அரசு.

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்றார் மோடி. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரிந்து ஆடுகிறது. மானியம் கொடுப்பதற்கு ஆதார் என்றார் ஏற்கனவே இருந்த கேஸ் மானியமும் பறிக்கப்படுகிறது. ரேசன் மானியம் போகப்போகிறது. கோமாத அரசியலை அனைவரின் மீதும் திணிக்க மாட்டுக்கறிக்குத் தடை மாடு விற்கத் தடை என்றது மோடி அரசு விவசாயிகள் வெகுண்டெழுந்ததால் பின்வாங்கியது.

மேடியின் டிஜிட்டல் இந்தியா, கையால் மலம் அள்ளுவதைத் தடுக்கவில்லை. புல்லட் ரயில் கக்கூஸ் பயணம் செய்வதை தடுக்கப் போவதில்லை (ஸ்வச்  – பாரத்) தூய்மை இந்தியா வந்த பின்னால்தான் காய்ச்சல்கள் வேகமாகப் பரவுகின்றன. பத்தாண்டுகள் பதப்படுத்திய அமெரிக்கக் கோழிக் கால்களை இறக்குமதி செய்கிறார் மோடி. இதுதான் பாஜக -வின் வளர்ச்சிக் கொள்கை.

பாஜக பேசுவது தேச பக்தி, செய்வது தேசத்துரோகம். புல்லட் ரயில் – ஜப்பான், பட்டேல் சதுக்கம் – சீனா, ஸ்மார்ட் சிட்டி – ஸ்வீடன், மோடியின் கோட் – இங்கிலாந்து மோடியின் கண்ணாடி – இத்தாலி, மோடி யின் புல்லட் புரூஃப் கார் – ஜெர்மனி, மேக் இன் இந்தியா லோகோ – ஸ்விட்சர்லாந்து, மோடியின் தேர்தல் பிரச்சா நிறுவனம்கூட ஆப்கோ என்ற அமெரிக்க கம்பெனிதான் – மோடியின் முழக்கம் மட்டும் மேக் இன் இந்தியா!

ஊழலுக்கு எதிரான ஆட்சி என்று பம்மாத்து செய்வதற்காக மோடி அரசின் ரெய்டுகள் தொடர்கின்றன. கரூர் அன்புநாதன், நத்தம், ஓ.பி. எஸ்., எடப்பாடி, விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி, செந்தில் பாலாஜி, ராம்மோகன் ராவ், சேகர் ரெட்டி ஆகியோரை மிரட்டுவதன் மூலம் தமிழக அரசைத் தமது கைப்பாவையாக ஆட்டி வைக்கிறது. ரெய்டுகள் மூலம் எந்தக் குற்றவாளியும் சிறைக்கு அனுப்பப்படவில்லை, எந்த ஊழல் சொத்தும் பறிமுதல் செய்யப்படவில்லை.

இந்துத்துவ உருவாக்கும் சாமியார்களும் தேசபக்தி மோசடியும்

பாலியல் குற்றத்திற்காக போலீசால் கைது செய்யப்படும் வட இந்திய சாமியார்களில் பலர், மோடி ராஜநாத் சிங், ஆர்.எஸ் .எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக, மாநில முதல்வர்கள் ஆகியோருடன் ஆசிபெற்ற புகைப்படங்கள் வெளிவருகின்றன.

ராம் ரஹீம், ஆசாராம் பாபு போன்ற சாமியார்களால் பல கோடி ரூபாய் கருப்புப் பணம், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், இசட் பிரிவு போலீசு பாதுகாப்பு எனத் தனி சாம்ராஜ்யமே நடத்த முடிகிறது.

ராம் ரஹீம் இழைத்த கொடூரமான பாலியல் குற்றங்களுக்கு பதினைந்து ஆண்டுகள் கழித்துதான் குற்றவாளி எனத் தீர்ப்பு வருகிறது. தீர்ப்புக்கு எதிராக பாஜக ஆளும் மாநிலத்தில் சாமியார் கும்பல் கலவரம் நடத்தி 36 பேரைக் கொல்கிறது. மொத்த பாஜகவும் ராம் ரஹீம் மட்டுமல்ல சாமியார்கள் செல்வாக்கை தேர்தல் வாக்கு அரசியலுக்குப் பயன்படுத்தி வருகிறது.

யோகா கற்றால் ஒழுக்கம் வரும், இது இந்து மதத்தின் தனிச்சிறப்பு எனத் தாயத்து விற்பது போல் மோடி மஸ்தானை வைத்துக் கதை அளக் கிறார்கள் பாலியல் குற்றம், வரி ஏய்ப்பு, ஊழல், கொலை கொள்ளை, தேசத் துரோகம் போன்ற குற்றங்களை யோகா என்ன செய்துவிடும்?

கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ கிளம்புமா ? சினிமாக் கொட்டகையில் தேசியகீதம் போட்டல் தேசபக்தி வளருமா?

நமக்குப்பொறுப்பில்லையா?

அவலங்களை, அநீதிகளை எதிர்த்துப் போராடினால் வழக்குப் போடுவர்கள் சிறையில் அடைப்பார்கள், பெயில் கிடைக்காது அரசு வேலைக்குப் போக முடியாது. பாஸ்போட்ராட் தரமாட்டார்கள் – எனத் தன்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள், தங்கள் விரும்பியதை அடைந்து விட்டர்களா? அடையத்தான் முடியுமா?

சொந்த வாழ்க்கையை சூறையாடுகின்ற இந்த அரசியலை ஒரு கை பார்க்காமல் பிரச்சினை எப்படித் தீரும்? இந்த அரசை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடும் மக்கள் பிழைக்கத் தெரியாதவர்களா? ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் நெடுவாசல் போராட்டம் அந்த மக்களுக்கு மட்டுமானதா?

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி எண் ணெய்க் குழாய்களால் வயல்கள் எரிகின்றன. எங்களை வாழவிடு எனப் போராடுகிறார்கள் போக்குவாந்துத் தொழிலாளர்கள். ஓய்வூதியத்தைப் பறிக்காதே எனப்போராடுகிறார்கள் அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். போராட்டங்கள் ஒன்றிணையாமல் எப்படி வெற்றி பெறுவது? சட்டப்படி நீதி கிடைக்காது என்பதால்தான் போராட்டங்கள் அதிகரிக்கின்றன.

நீதிமன்றங்கள் நீதி வழங்குமா?

ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கிரானை கொள்ளை, தனியார் பள்ளிகள், கல்லூரிகளின் கட்டணக் கொள்ளைகள் இவற்றை எந்த நீதிமன்றத்தாலாவது தடுத்து நிறுத்த முடிந்ததா? முடியாது. காரணம் இதில் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் குற்றவாளிகள், எண்ணற்ற பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்து மக்கள் காத்துக்கிடந்தார்கள். தீர்வு கிடைத்ததா?

மாநிலத்தின் டிஜிபி -யும், தலைமைச் செயலாளரும் கிரிமினல் ஊழல் குற்றச்சாட்டில், காவல் அதிகாரிகள் பலர் வழிப்பறித் திருடர்கள், கூலிப்படைகளின் கூட்டாளிகள், பாலியல் குற்றவாளிகள் அதிமுக வட்டர் செயலாளர் முதல் முதலமைச்சர் வரை எதில் எவ்வளவு சுருட்டலாம்? என்ற திட்டத்தில் மக்கள் விரோதமாக மாறிய இந்த அரசுக்கட்டமைப்பில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது.

சகாயம், விஷ்னுயிரியா, முந்துக்குமாரசாமி போன்ற நேர்மையாளர்கள் என்ன செய்துவிட முடியும் என்பதையும் பார்க்கிறோம். டாஸ்மாக், நெடுவாசல், கதிராமங்கலம், நீட், ஜி.எஸ்.டி, விவசாயிகள், மாணவர்கள், யாரானாலும் மக்கள் போராடிக்களைந்து அலுத்துப் போய் விடுவார்கள். அல்லது போராடியே சாகட்டும் என அரசு நினைக்கிறது.

மீறிப் போராடுபவர்கள் மீது குண்டர் சட்டம், தேசத்துரோக வழக்கு போட்டு காலணி ஆட்சியில் செய்ததைப் போல் மொத்த மக்களையும் அச்சுறுத்த முயல்கிறது. கற்பழித்தவனிடமே கல்யாணம் செய்துகொள் என கெஞ்சுவதைப்போல் இந்த கட்டமைப்பிற்குள் தீர்வுகாணும்படி, நல்லவரை முதல்வரக்குங்கள் என நம்மை மீண்டும் மீண்டும் புதைகுழியில் அழுத்துகிறார்கள். அழுகிய மீன் கூடையில் நல்ல மீனைத்தேடும் முட்டாள்களாக நம்மை ஆக்கப்பார்கிறார்கள்.

அதிகாரத்தின் மீது கேள்வி எழுப்பு

தனித்தனிப் பிரச்சினைகளுக்குத் தனித்தனி தீர்வு சாந்தியமில்லை என்பதைத்தான் நாடு முழுவதும் நீடிக்கும் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. “மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்த நாட்டுக்கு எதிராகவும், நாசகாரக் கொள்கைகளை அமல்படுத்தும் மந்திய மாநில அரசுகளின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும்”. அதற்கு மக்கள் அதிகாரம்தான் ஒரே மாற்று!

நீங்கள் அனைவரும் மக்கள் அதிகாரமாக இணையுங்கள்!

உங்கள் ஊரில் – கிராமத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பை ஏற்படுத்துங்கள்!

உங்கள் ஊர் பொதுப்பிரச்சினையில் பங்கேற்று உதவத் தயாராக இருக்கிறோம்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை – மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க