Friday, May 9, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்டெங்கு : செயலிழந்த அரசை தட்டிக் கேட்போம் - திருப்பூர் ஆர்ப்பாட்டம் !

டெங்கு : செயலிழந்த அரசை தட்டிக் கேட்போம் – திருப்பூர் ஆர்ப்பாட்டம் !

-

தேர்தல் வந்தால் தெருவெங்கும் தோரணங்கள் இருப்பது போல இப்போது டெங்கு நோய் பரப்பும் கொசுக்களும் அதற்கு காரணமான OPS – EPS வகையறாக்களும் கையில் ‘A1’ குற்றவாளி ஜெயாவின் படத்துடன் நிலவேம்பு கசாயம் கொடுப்பதாக போஸ் கொடுக்கும் செய்திகள் தினசரி வருகின்றன.

ஈவிரக்கமற்ற கிரிமினல்கள் எதற்கும் அஞ்சாமல் திருடுவது – கொலை செய்வது போலத்தான் அரசும் – அதிகாரிகளும் கூட்டுச்  சேர்ந்து மக்கள் மற்றும் வணிகர்கள் மேல் அபராதம் விதித்து மக்களிடம் வழிபறியும், டெங்கு – மர்ம – வைரஸ் காய்ச்சலை தடுக்காமல்  கொலை செய்து கொண்டு வருகின்றனர். அதற்கு உதாரணமாக மாநகராட்சி குப்பைகளை சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணமோ- போதிய சம்பளமோ – நோய் வந்தால் இலவச மருத்துவமோ கொடுக்காமல் அவர்கள் வாங்கும் சொற்ப கூலியில் அனைத்தையும் செய்து வர நிர்பந்திக்கப்படுகிறார்கள். அன்றாடம் திருப்பூரை சுத்தம் செய்து வரும் அவர்களின் பணி போற்றுதலுக்கு உரியது.

இவர்களுக்கு நேர் எதிராக அதிகாரிகள் லஞ்சம் – ஊழல் செய்து கொழுத்து வருகின்றனர். அரசு தலைமை மருத்துவமனையில் எதோ கிரிமினல் குற்றவாளியை பார்க்க ஜெயிலுக்கு வந்தவர்களைப் பார்ப்பது போல கம்பிக்கேட்டு  போட்டு பத்து – பத்து நபர்களாக டோக்கன் கொடுத்து பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து அனுப்பி விடுகின்றனர்.

மயங்கிய நிலையில் வருபவர்களுக்கும் பாராசிட்டமால்தான் என்றால் இவர்களின் யோக்கியதை என்ன என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள் – போதிய மருத்துவர் – செவிலியர் இல்லாமல், இருக்கும் சொற்ப மருத்துவர்,பணியாளர்களைக் கொண்டு தரமான மருத்துவம் இல்லையென்றாலும் கனிவாகப் பேசி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர் மேலதிகாரிகள்.

ஒரு மருத்துவரிடம் நோட்டீஸ் கொடுத்து டெங்கு பற்றி தங்களுக்கு தெரிந்த விபரங்களைக் கூறினால் ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு கோரிக்கை வைப்போம் என்று கேட்டதற்கு எது பற்றியும்  வாய்திறக்காமல் மேலதிகாரியை பாருங்கள் – ஆபீஸ்-ல் கேளுங்கள், நோயாளியை என்னுடைய கிளினிக்குக்கு வரச்சொல்லுங்கள் என 12.30 மணிக்கே தனது காரில் ஏறிச் சென்றுவிட்டார் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் [Dr.T.S.K], பெயரே இல்லாதவர் போல ஒருவரும் தங்கள் பெயரை சொல்லவில்லை.

தலைமை மருத்துவர் எங்கே என்றால் எல்லோரும் கலெக்டர்  பின்னால் சென்றுவிட்டார் என்றார்கள், கலெக்டர்  எங்கே என்றால் மோடியின் அல்லக்கை OPS – EPS ன் – அமைச்சர்கள், MLA , MP களுக்கு பின்னால் கசாயம் கொடுத்துக் கொண்டுள்ளார் என்பதே பதிலாக உள்ளது. காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனை சென்றால் குறைந்தது 6,000 வசூலிக்காமல் வெளியில் விடுவதில்லை. மக்களை பயமுறுத்தியே மருத்துவம் பார்க்கின்றனர் NEET ஆதரவு கயவாளிகள்

மக்கள், அதிகாரம் செலுத்துவதன் மூலம்தான் மரண பீதீயை உருவாக்கியிருக்கும் டெங்குவில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

அரசின் செயல்பாடுகளுக்கு ஒருசில புகைப்படங்களை இணைத்துள்ளோம் இந்த அவலங்கள் போக்க அனைத்து தரப்பு மக்களும் – தொழிலாளிகளும் அணிதிரண்டு ஆர்ப்பாட்டத்திற்கு வரவேண்டும் என அழைக்கின்றோம்.

டெங்கு சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள்

திருப்பூர் டெங்கு பாதிப்புகள் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்தி

திருப்பூர் நகரெங்கும் காணப்படும் சுகாதார சீர்கேடுகள்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம் – திருப்பூர்.
தொடர்புக்கு – 99658 86810.

_____________

கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் மாபெரும் கூட்டம்

19 நவம்பர், 2017 மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.

நண்பர்களே,

ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.

பெரும் பொருட்செலவுடன் நடைபெறும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வு நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங் கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க