privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்பாலாவை விடுதலை செய்! கலெக்டரை கைது செய்! மக்கள் அதிகாரம் - பத்திரிகைச் செய்தி !

பாலாவை விடுதலை செய்! கலெக்டரை கைது செய்! மக்கள் அதிகாரம் – பத்திரிகைச் செய்தி !

-

மக்கள் அதிகாரம்  – பத்திரிகைச் செய்தி

5-11-2017

நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையால் தீயில் கருகிய குழந்தையை கலெக்டர், கமிசனர், எடப்பாடி ஆகிய மூவரும் அம்மணமாக நின்று வேடிக்கை பார்ப்பது போல் கார்ட்டூன் படம் வரைந்த பத்திரிகையாளர் பாலாவை மாவட்ட ஆட்சியர் அளித்த சந்தீப்  புகாரின் பேரில் நெல்லை போலீசார் இன்று 5-11-2017 காலை கைது செய்துள்ளனர். வீட்டிலிருந்த கம்ப்யூட்டர், செல் போன், கீ போர்டு என அனைத்தையும் போலீசார் குற்றத்தை நிருபிக்க பறிமுதல் செய்து எடுத்துச் சென்று விட்டனர். படம் வரைந்ததை பாலா மறுக்கவில்லை. தமிழக மக்கள் அனைவரும் ”இந்த படத்தில் என்ன தப்பு இருக்கு ?”என்று கேட்கிறார்கள்.

இசக்கிமுத்துவின் மரணம் கிரிமினல்மயமான தோற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பின் மீது தொடுக்கப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல். இதன் மூலம் அதிகார வர்க்கம் தங்களை நியாயப்படுத்த முடியாமல் அம்மணமாகி நின்றது. இதுதான் பாலாவின் கார்ட்டூன்.

நான்கு பேர் அநியாயமாகத் தீயில் கருகியது குற்றமாகத் தெரியவில்லை. கலெக்டர், கமிசனர், எடப்பாடியை அம்மணமாக பாலா படம் வரைந்தது தான் குற்றமாகத் தெரிகிறது. இந்த அக்கிரம அராஜகங்களுக்கு முடிவு கட்டுவது எப்போது?. மக்கள் பிரச்சினைகளால் வெடிக்க காத்திருக்கும் தமிழகத்தை எந்தத் திரி பற்ற வைக்கும் எனத் தெரியவில்லை. அனிதா மரணத்திலும், டெங்கு மரணத்திலும், சென்னை வெள்ளத்திலும் சிக்கிய அதிமுக அரசு இப்போது கருத்துரிமையில் கை வைத்துச் சிக்கியிருக்கிறது.

“கந்துவட்டிக்காரன் மிரட்டுகிறான் காப்பாற்றுங்கள்” என ஆறு முறை குடும்பத்தோடு நெல்லை கலெக்டரிடம் மனு கொடுத்தார் இசக்கி முத்து. எந்தத் தீர்வும் இல்லை. மாவட்ட ஆட்சியரை நம்பினால் இனி மானத்தோடு வாழ முடியாது என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டு 23-10-2017 அன்று தனது இரு குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு தீ வைத்துக் கொளுத்திக் கொண்டார்.

இதைக் கேட்டாலே ஈரக் குலை நடுங்குகிறது. அனைவரும் பார்த்து நெஞ்சம் பதறினோம். கார்டூனிஸ்ட் பாலா படம் வரைந்தார். இனியும் வரைவார். அது நமது உரிமை. கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராக இசக்கிமுத்து பற்ற வைத்த தீ இன்று தமிழகம் முழுவதும் பரவுகிறது. எடப்பாடி அதிமுக அடிமை அரசிற்கு சுதந்திரம், ஜனநாயகம், மானம், சுயமரியாதை என எதுவும் கிடையாது. ஆனால் ’மானம் போச்சு’ என்றுதான் வழக்கு பதிவு செய்யபட்டிருக்கிறது.

“பாலாவை விடுதலை செய்!

கலெக்டரை கைது செய்!” என முழங்குவோம்!.

 

இவண்

வழக்குரைஞர் சி.ராஜூ

மாநில ஒருங்கிணைப்பாளர், 

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

தொடர்புக்கு : 99623 66321

  1. இந்த கருத்து சுதந்திரம் என்பதன் வரைமுறை என்ன ? கண்டபடி ஒருவரை எந்தவித ஆதாரமும் இல்லாமல் விமர்சிப்பது கருத்து சுதந்திரமா ? ஹிந்து கடவுள்களை மட்டும் மிக மிக மோசமாக விமர்சனம் செய்வது கருத்து சுதந்திரமா ?

    • வாங்க சார். நீங்களோ நானோ , கலக்டரோ, இல்லை போலிசோ யாருமே கருத்துரிமையின் காவலர்கள் கிடையாது…..

      தற்போதைக்கு இந்தியாவின் கருத்துரிமைக்கு காவலர்கள் உச்ச நீதிமன்றம் தான். எனவே அவரை கைது செய்ய வேண்டுமெனில் வழக்கு தொடுத்து முறையாக குறம் நிரூபிக்கப்பட்ட பின்ன்னர் தான் கைது செய்ய வேண்டும். நீர் தூக்கத்தில் உச்சா போரவரோ? இந்த அடிப்படை கூட தெரியாமல் நீர் இத்தினி நாள் உயிரோடு இருக்கிறீரே?

      • அளவற்ற கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கண்டபடி ஆதாரம் இல்லாமல் அவதூறாக பேசலாம் என்பது சரியல்ல.

      • உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் நீதிமன்றங்களை நம்புவது இல்லையே நீதிமன்றங்கள் மீது கூட அவதூறு பரப்பும் கூட்டம் தானே நீங்கள்… பிறகு என் நீதிமன்றங்கள் மீது இவ்வுளவு பாசம் உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்டினியா ?

        • பாஸ். கார்டூனிஸ்ட் பாலா கம்யூனிஸ்டு கிடையாது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்குற கதையல இருக்கு.

          எங்களுக்கு நம்பிக்கை இல்லைங்குறது சரிதான். ஆயினும் வரி செலுத்துகிறோம். வேலை செய்கிறோம்…எங்களோட வரில தான் அந்த கலெக்டரும், கமிஷனுரும் முதலமைசுரும் சோறு துன்னறாங்க.கொள்ளையடிக்கிறாங்க.

          சரி ஆதாராம் இல்லாமல் இங்கே யார் என்ன பேசி விட்டார்கள்? கந்துவட்டிக்கு மூன்று உயிர்கள் பலியானது பொய்யா?

          நல்ல பசுமாட்டுக்கு ஒரு சூடு.. நல்ல மனுஷனுக்கு ஒரு சொல்லு.
          உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கம் மானம் சூடு சொரனை ஈவு இரக்கம் எதுவுமே இல்லையா. என்ன ஜென்மம் அய்யா நீவிர்….

          • மணி சார்…

            எங்க ஆள காணும். சரி கார்டூன் வரைந்த பாலாவை கைது செஞ்சு மிரட்டியாச்சு…..அனா அவரது கார்டூன் வெளி வந்த பத்திரிக்கைகள், வெளியிட்ட முகநூல் கணக்குகள், வாட்ஸ்அப் கணக்குகள் எல்லாத்தையும் என்ன பண்ணலாம்னு உத்தேசம்….

  2. அதிகார மயக்கத்தில் சுழல் விளக்குடன் வலம்வருவோரே
    இறந்தவன்வங்கிவாசலைஅறியாதவன் வரவுசெலவு தெரியாதவன் தன்குடும்பத்தையைே கொன்றவன் என்று வழக்குப் பாேடுங்கள்.
    காவிக்கூட்டமே பதில்சொல் கந்துவட்டிக்காரன்தான் காரணமா ஜிஎஸ்டி என கந்துவரி வசூலிக்கவில்லயைா.

  3. அது ஒன்னுமில்ல மணி மாமா

    புஷ்பக விமானம் ஓட்டுனான், யானைக்குட்டிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணுனான், இராமன் பாலம் கட்டுனான், குரங்கு மலைய தூக்கிண்டு போச்சுன்னு நம்மவாள் அடுச்சு விடுறான் பாருங்க…அதான் ஓய் கருத்து சுதந்திரம்….

    அப்புறம் ஓய் …கோமியத்த பாட்டில்ல புடிச்சு குடிச்சா நோய் வராதுன்னு சொல்றோம்ல அதுவும் கருத்து சுதந்திரம் தான் ஓய்…

    இந்த பாவிப்பய எசக்கிய அக்கினி பகவான் அழச்சுண்டு போனதுக்கு இவாள்( இபிஎஸ், கலெக்டர், போலிசு) எல்லாம் என்ன பண்ணமுடியும்கிறேன்…

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க