Friday, May 9, 2025
முகப்புசெய்திஅம்பேத்கர் நினைவு நாள் : பார்ப்பன பாசிஸ்டுகளை விரட்ட உறுதி ஏற்போம் !

அம்பேத்கர் நினைவு நாள் : பார்ப்பன பாசிஸ்டுகளை விரட்ட உறுதி ஏற்போம் !

-

டிசம்பர் 6 : டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள்! பாபர் மசூதி இடிப்பு பயங்கரவாத நாள்!

க்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக சேத்துப்பட்டு பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கும், தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி 06.12.2017 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மகஇக சென்னை மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

முதல் நிகழ்ச்சியாக  தோழர் சோமு  பறை இசை முழங்கினார். அதன் பின்னர் மகஇக பொதுக்குழு உறுப்பினர் தோழர் இளவரசி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினார்.

முழக்கங்கள் :

டாக்டர் அம்பேத்கர் வாழ்க!
தந்தை பெரியார் வாழ்க!
சாதி தீண்டாமை கொடுமையை
இந்து மத கொடுமையை
அம்பலப்படுத்தி போராடிய
போராளி அம்பேத்கரின்
நினைவை நெஞ்சிலேந்துவோம்.

குரல் கொடுப்போம், குரல் கொடுப்போம்
இந்து மத வெறியர்களால்
இடித்து தள்ளிய பாபர் மசூதியை
அதே இடத்தில் கட்டிக்கொடுக்க
குரல் கொடுப்போம், குரல் கொடுப்போம்.

மூட நம்பிக்கையே மூலதனம்
எதிர்த்து கேட்டா ஆளை காணோம்.
கொலை செய்யுறான் கொலை செய்யுறான்
வேடிக்கை பார்ப்பது அவமானம்.

கோவிந்த் பன்சாரே படுகொலை
கல்புர்க்கி படுகொலை
கெளரி லங்கேஸ் படுகொலை
படுகொலையின் பாதகர்கள்
ஆர்.எஸ்.எஸ் இந்து மத வெறியர்கள்.

பிள்ளையார் சதுர்த்தி, விளக்கு பூஜை,
மாங்கல்ய பூஜை, கணபதி பூஜை,
பக்தியல்ல பக்தியல்ல,
நம்மை மயக்க வைக்கும் மரண பூஜையே.

கிறித்துவ மக்களுக்கு எதிராக
இசுலாமிய மக்களுக்கு எதிராக
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக
வன்முறை கும்பல் இவர்கள்தான்
ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தான்.

பக்தனுக்கு பிரச்சினை என்றால்
பக்தி கூட்டம் வருவதில்லை
பக்திக்கு பிரச்சினை என்றால்
மத வெறி கூட்டம் ஆட்டம் போடுது.

சாதி மத அடையாளங்கள்
சதி வேலைக்கு சேவை செய்யுது.
அடையாளங்களை விட்டொழிப்போம்
இந்து மத வெறியர்களை
விரட்டியடிப்போம்,விரட்டியடிப்போம்.

உழைக்கும் மக்களை நேசிக்கும்
புதிய ஜனநாயக சமூகம் நோக்கி
முன்னேறுவோம், முன்னேறுவோம்.
சாதி மத வெறி கூட்டத்தை
விரட்டியடிப்போம்,விரட்டியடிப்போம்.

அதன் பிறகு  மகஇக தோழர் பாஸ்கர் அவர்கள் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர்  சிலைக்கும், தோழர் ஜெ.காமராஜ் அவர்கள் தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்தார்கள்.

அதனையொட்டி மகஇக தோழர் ஜெ.காமராஜ் அவர்கள் இந்து மதவெறி பாசிசத்தை விளக்கியும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அண்ணல் அம்பேத்கரையும், தந்தை பெரியாரையும் போதிக்கவேண்டும் என்றும் சிறப்புரையாற்றினார். இறுதி நிகழ்ச்சியாக மகஇக சென்னை மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
சென்னை. தொடர்புக்கு – 95518 69588


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க