Friday, May 9, 2025
முகப்புசெய்திகார்ப்பரேட் கொள்ளையரின் பயிர் இன்சூரன்ஸ் ! தஞ்சை ஆர்ப்பாட்டப் படங்கள்

கார்ப்பரேட் கொள்ளையரின் பயிர் இன்சூரன்ஸ் ! தஞ்சை ஆர்ப்பாட்டப் படங்கள்

-

ஞ்சாவூரில் 08.12.2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பயிர் இன்ஸ்சூரன்ஸ் விவசாயிகளை பாதுகாக்க அல்ல… கார்ப்பரேட் கொள்ளைக்கே…! என்ற முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தஞ்சை பனகல் கட்டடம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மண்டல அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் புரட்சிகர மாணவர் இளைஞைர் முன்னணி தோழர் சங்கத்தமிழன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக மக்கள் அதிகாரம் தோழர் தேவா நன்றியுரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு மலிவான இடுபொருள்! கட்டுபடியான விலையில் அரசே விளைபொருட்களை கொள்முதல் செய்வது! விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு அரசே பொறுப்போற்றுக் கொள்வது! விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குவது! அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்வது! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் :

கைவிடு! கைவிடு
பயிர்காப்பீடு மோசடியைக்
உடனடியாக கைவிடு!

இதுவரை விவசாயிகளுக்குக்
கொடுக்கவேண்டிய காப்பீட்டுத் தொகையை
தாமதமின்றி உடனே வழங்கு!

வாழவிடு! வாழவிடு!
விவசாயியை வாழவிடு!
அழிக்காதே! அழிக்காதே!
விவசாயத்தை அழிக்காதே!

யாருக்காக! யாருக்காக!
பயிர்காப்பீடு யாருக்காக!
கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக!

கைவிடு! கைவிடு!
இன்சூயூரன்ஸ் மோசடியை! கைவிடு!

ஆயிரம் ஆயிரம் கோடிகளாய்
கார்ப்பரேட்டுகள் பகற்கொள்ளை

பயிருக்கு  இன்சூயூரன்ஸ்
மோட்டாருக்கு இன்சூயூரன்ஸ்
எல்லாத்துக்கும் இன்சூயூரன்ஸ்ன்னா?
என்னத்துக்குடா அரசாங்கம்?

முதலாளிகளின் இன்சூயூரன்ஸ்தான்
மக்களைக் காக்கும் என்றால்
முதலாளித்துவ சமூகத்தை
முதலாளித்துவக் கட்டமைப்பை
ஒழித்துக்கட்டுவோம்! ஒழித்துக்கட்டுவோம்!

வென்றெடுப்போம்! வென்றெடுப்போம்!
மக்கள் அதிகாரம்! வென்றெடுப்போம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை. தொடர்புக்கு 94431 88285.


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க