privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஜி.எஸ்.டி. : கேக் புகழ் பிரெஞ்சு ராணிக்கு போட்டியாக ஸ்மிருதி இரானி !

ஜி.எஸ்.டி. : கேக் புகழ் பிரெஞ்சு ராணிக்கு போட்டியாக ஸ்மிருதி இரானி !

-

ரக்குகள் மற்றும் சேவை வரியானது நாட்டில் வேலை வாய்ப்பினை அதிகப்படுத்தி இருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி கூறியிருக்கிறார். இதற்கு டிவிட்டர் பக்கத்தில் மக்கள் எதிர்வினையாற்றியிருக்கின்றனர்.

ஜூலை மாதம் முதல் தேதியில் GST நடைமுறைபடுத்தப்பட்டதில் இருந்து ஏராளமான சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஏரளமானோர் வேலையிழந்து விட்டனர். பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு இது இந்திய பொருளாதாரத்தை ஒரு உலுக்கி உலுக்கி விட்டது சங்கிகள் தவிர அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விடயம்.

ஆனால் ஸ்மிருதி இரானி கூறியிருப்பதற்கு ஒருவேளை உண்மை இருக்கலாம். அதாவது அவர் கூறியது என்னவென்றால் “பட்டயக் கணக்காளர்களு”க்கான(chartered accountants) தேவை அதிகரித்திருக்கிறதாம்.

சரக்குகள் மற்றும் சேவை வரிக்குப் பிறகு உலகளவில் பட்டயக் கணக்காளர்களுக்கான தேவை எப்படி அதிகரித்து இருக்கிறது என்று ஒரு பதிவை Dnaindia.com என்ற இணையத்தளம் எழுதியிருந்தது. எதோ ஒரு வேலை மக்களுக்கு கிடைத்து இருக்கிறதே என்று இராணி நினைத்தாரோ என்னவோ?

ரொட்டி இல்லையென்றால் என்ன கேக் சாப்பிடுங்கள் என்று வறுமையில் தவித்த பிரெஞ்சு மக்களிடம் சொன்னாளாம்  பிரெஞ்சு இராணி. ஆம் அது பிரெஞ்சு இராணி. இது ஸ்மிருதி இராணி

இராணியின் பதிவிற்கு துவித்தர்களின் எதிர்வினைகள் சில இங்கே:

இது ஒரு பெரிய நிலநடுக்கத்தின் காரணமாக கட்டுமான வேலைவாய்ப்புக்கள் அதிகரித்துவிட்டன என்று சொல்வதற்கு ஒப்பாகும் @ கப்பர் சிங்

ஆமாம், டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு….. அற்புதம் @ ரோஹித் நேகி

தீவிரவாதிகளால் கொல்லப்படும் மக்களால் கல்லறைத் தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும் @ AnyCommonMan

ஆமாம். அதே போலதான் விபத்துக்கள் மருத்துவமனைக்கும், தீவிபத்துக்கள் தீயணைப்புத்துறைக்கும், வெள்ளம் NDRF க்கும் வேலை வாய்ப்பினை கொடுக்கும் @ அமீன்

தயவு செய்து இராஜினாமா செய்யவும். இது இந்திய அமைச்சரவையில் ஒரு எண்ணிக்கையை அதிகரிக்கும் @ BeVoterNotFan

ஆமாம் இந்திய பட்டயக் கணக்காளர்களின் தேவை அதிகரித்து விட்டதுதான். குடும்பப் பிரச்சினைகள் மற்றும் வியாபாரத்தகராறுகள் ஆகியவை வக்கீல்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும். அப்புறம் சிறு வணிகர்களை ஒழித்துவிட்டு எப்போ ரவுடிகளுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கப்போகின்றீர்கள் @ அஜய் குமார் கேம்கா

வரிகள் எளிதில் புரிந்து கொள்ளும் படியாகவும் செலுத்தும் படியாகவும் இருக்க வேண்டும். மனிதர்கள் மட்டத்திலேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைக்கு அதிக பட்டயக் கணக்காளர்கள் தேவைப்படுகிறார்கள் என்பது இது அதிக சிக்கலான அமைப்பு என்பதையே காட்டுகிறது . இது பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நல்ல செய்தி அல்ல. @ irdman

மகிழ்ச்சிக் கொள்ளும் செய்தி அல்ல. சரக்குகள் மற்றும் சேவை வரியின் சிக்கலை தீர்ப்பதற்கு பட்டயக் கணக்காளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் சிக்கலுக்கு யார் காரணம்? @ அபிஜித் தேஷ்முக்

அதாவது சரக்குகள் மற்றும் சேவை வரியானது சிக்கலானது என்பதை தான் இது காட்டுகிறது. இப்போது சிறு வணிகர்கள் சிக்கலான சட்டத்தை புரிந்து கொள்ள பட்டய கணக்காளர்களுக்கும் சேர்த்து செலவு செய்ய வேண்டி இருக்கிறது @ பாண்டே –பிரியங்கா

போலி பட்டதாரிகள் பா.ஜ.க விற்கு அதிகபடியான வேலை வாய்ப்பினை உருவாக்குவார்கள் @ சச்சின் மெத்ரே

ஏல் பல்கலைகழகத்திலா அந்த சூத்திரத்தைக் கற்றுக் கொண்டீர்கள்? பொது மக்கள் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலான அமைப்பை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். இதை நடைமுறைப்படுத்துவதில் அரசிற்கு மிகவும் சிக்கல் இருக்கிறது. டிவிட் செய்வதற்கு முன்னர் யாரிடமாவது கேட்கவும். @ பிரதீப்குமார் TK