privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்ராம் சேது பாலம் மனிதனால் கட்டப்பட்டதா ? முனைவர் சேதுபதி

ராம் சேது பாலம் மனிதனால் கட்டப்பட்டதா ? முனைவர் சேதுபதி

-

ரண்டு நிமிடம் ஓடக்கூடிய ராம் சேது பாலம் பற்றிய காணொளியை, அமெரிக்காவில் உள்ள சைன்ஸ் சேனல் வெளியிட்டுள்ளது. இவர்களின் ஆய்வுப்படி, இந்த பாலத்திலுள்ள, கற்களின் வயது 7000-ம் ஆண்டு என்றும், அதற்கு மேல் உள்ள மண் திட்டுகளின் வயது 5000-ம் ஆண்டு என்றும் கண்டு பிடித்துள்ளனர். செயற்கைக் கோள் படத்தின் படி இந்த ஆதம் பாலம் மணல் திட்டுக்களாலும், அதன் மேல் இருக்கும் கற்பாறைகளாலும் ஒரு அறுபட்ட பாலம் போல இருக்கிறது. மணல் திட்டுக்கள் உருவாவது இயற்கை என்றாலும் இந்த பாறைகள் இங்கே எப்படி கொண்டு வரப்பட்டன என்று கேள்வி எழுப்புகிறது அந்த வீடியோ.

இந்திய மற்றும் தமிழக புவி அறிவியலை படித்தவன் என்ற முறையில் என்னுள் சில கேள்விகள் எழுகிறது

எதற்காக Dr. Aalan Lester (Geologist – புவி அறிவியல் வல்லுநர்) , இந்த மண்திட்டு உருவானதற்கான காரணத்தை புவிஅறிவியல் கோட்பாடுகளின் மூலம் விளக்காமல், இது இந்து கடவுள் ராம் தான் கட்டியிருப்பார் என்று கூறுவது மிகவும் வியப்பாக உள்ளது. இவர் புவி அறிவியல் வல்லுனரா அல்லது ஹிந்து புரோகிதரா என்ற ஐயம் ஏற்படுகிறது. அந்த வீடியோவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் அந்த பாறைகள் கட்டப்பட்டிருப்பது சாத்தியமில்லை என்பதை இதை சூப்பர் ஹீயூமன்தான் செய்திருக்க முடியும் என்று சொல்கிறார்கள். அதன் பொருள் அதை மனிதர்கள் கட்ட முடியாது, கட்டவில்லை என்பதே.

எனினும் சங்கபரிவாரத்தினர் இதை வைத்தே இராமாயண காலத்திற்கு சென்று வாயால் பாலத்தை கட்டிவிட்டார்கள். ராமன் தான் இந்த மண் திட்டை கட்டியிருப்பார் என்ற நோக்கத்தோடு, டாக்டர் ஆலன் லெஸ்டர் ஆதம் பாலத்தை கூறியிருப்பதை ஆதாரமாக கூறுகிறார்கள்.

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் (2007), இந்த பாலம் மனிதனால் கட்டப்பட்டது என்றால், அதற்கு அருகில் மனிதன் வாழ்ந்தற்கான சான்றுகள் இருக்க வேண்டும். அவ்வாறான எந்த சான்றுகளும் அங்கு கிடைக்கவில்லை. இறந்த மனிதனின் எலும்புகளோ அல்லது எந்த எச்சங்களோ அங்கு இல்லை. இந்த பாலத்தை கட்டுவதற்கு பத்து லட்சம் வானரங்கள் பயன்படுத்தப்பட்டது என்று கூறுகிறது ராமாயணம். ஆனால் இன்று வரை, இந்தியாவின் எந்த மூலையிலும் குரங்கு போன்ற மனித உருவம் கொண்ட எலும்புக்கூடு எங்கும் கிடைக்கவில்லை.

ராமன் ராமேஸ்வரத்திற்கும் ஸ்ரீலங்காவிற்குமிடையே பாலம் அமைத்து தான் ஸ்ரீலங்காவிற்கு போனார் என்றால், அதற்கு முன் அவர் மண்டபத்திலிருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு முதலில் ஒரு பாலம் அமைத்திருக்கவேண்டும். ஏனெனில், மண்டபத்திலிருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரம் ஒரு தீவு. ராமாயணமும், அமெரிக்க சைன்ஸ் சேனலும் ஒரே ஒரு பாலத்தைத்தான் குறிப்பிடுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் கட்டிய பாம்பன் பாலத்தை தவிர அங்கு வேறு எந்த ஒரு பாலமும் இல்லை. ஆதலால், ராமேஸ்வரத்திற்கும் ஸ்ரீலங்காவிற்குமிடையே உள்ள பாலமானது இயற்கையாக அமைந்தது தான் என்று தெரிகிறது.

தொல்உயிரியல் (Paleontology) என்பது மண்ணில் புதைந்த இறந்த உடற்கூட்டினை பற்றியும், அது வாழ்ந்த கால அளவை கொண்டும் அவை தொகுக்கப்படுகிறது. இந்திய தொல்உயிரியல் ஆராய்ச்சிபடி, இந்தியாவில் இமயமலையில் தான் முதன் முதலில் மனிதனின் முன்னோடியான மனிதகுரங்கின் உடற்பாகம் கிடைத்தது, இவ்வகையான குரங்குகள் வாழ்ந்த கால அளவு 1.2 கோடி. அதன் பிறகு முழு மனித உருவம் கொண்ட உடற்கூறு தமிழ்நாட்டில் கிடைத்தது, இதன் காலஅளவு 1.66 லட்சம்.

உலகின் எந்த ஒரு மூலையிலும், மனிதர்களின் முன்னோடியான மனித குரங்குகள் வாழ்ந்த கால அளவும், முழு உருவம் அடைந்த மனிதன் வாழ்ந்த கால அளவும் எங்கும் ஒத்துப்போகவில்லை. ஆனால் ராமாயணத்தில் முழு உருவம் கொண்ட மனிதனான ராமனும் மனித குரங்கு வடிவம் கொண்ட அனுமானும் தோழர்கள். இந்த இரண்டு உருவங்களும் ஒன்றாக இணைந்து 7000ஆம் ஆண்டில் ஒரு பாலம் கட்டினார்கள் என்பது அண்டப்புளுகு மற்றும் அறிவியலுக்கு ஒத்துவராத கோட்பாடு.

இந்திய தொல்பொருள் நிறுவனத்தின் ஆராய்ச்சிப்படி, இந்த பாலமானாது இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையேஉள்ள கடற்பரப்பில் ஏற்பட்ட புவி மாறுதல்களினால் உருவானது. இந்த மண் திட்டானது சுமார் 18,000-ஆம்ஆண்டு முதல் 7000-ஆம்ஆண்டு இடைப்பட்ட காலத்தில் உருவாயிருக்கவேண்டும். பிறகுதான் மனிதர்களும் விலங்குகளும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்றிருப்பார்கள்.

கற்களின் மேல் ராமா என்று எழுதியதால் தான், கற்கள் கடல் நீரில் முழுகாமல் மிதந்து கொண்டிருக்கிறது என்று காவி அறிஞர்கள் அடித்து விடுகிறார்கள். கற்களின் மீது ராமா என்று மட்டுமல்ல, ராவணா என்று எழுதியிருந்தாலும், தண்ணீரின் மிதந்துகொண்டுதான் இருக்கும். ஏ னெனில், ப்யூமிஸ்(Pumice) எனப்படும் எரிமலை கற்களும், பவளப்பாறை கற்களும், தங்களின் கனஅளவில் 70 முதல் 80 சதவிகிதம் வெறும் துளைகளால் ஆனது. இந்த கற்களின் அடர்த்தியானது (Density) கடல் நீரின் அடர்த்தியை விட குறைவானது, அதனால் தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது.

அமெரிக்காவின் சைன்ஸ் சேனல் தங்களுடைய வீடியோவை வெளியிடும் முன்னே, வாழும்கலை நிறுவனம் (Art-Of-Living) ராம்சேது பாலம் பற்றிய வீடியோவை வெளியிட்டது. வாழும் கலை வீடியோவும் “இந்த பாலம் கட்டப்பட்ட கற்களின் வயது 7000 ஆண்டுகள் இருக்கும் என்றும், அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் இதை கண்டுபிடித்தது” என்று கூறுகிறது. கண்டிப்பாக அமெரிக்காவின் சைன்ஸ் சேனல், தங்களுடைய ஆய்வின் முடிவை வாழும் கலை நிறுவனத்துடன் பகிரந்திருக்க வேண்டும். என்னுடைய ஊகம் என்னவென்றால், ஹிந்து சமய கொள்கை மீது பற்றுகொண்ட ஓரிரு ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவின் சைன்ஸ்சேனல் ஆராய்ச்சியின் பின்புலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இராமாயணத்தில் வரும், இலங்கை, இராவணன் என்ற குறியீடுகளெல்லாம் இன்றைய தென்னிந்திய – இலங்கையைக் குறிப்பிடுவன அல்ல, அவை கற்பனையே என்று வரலாறும், வரலாற்று அறிஞர்களும் கூறிவிட்டனர். இடையில் பாலம் மட்டும் எப்படி எழ முடியும்?

Dr. சேதுபதி, PhD.
Geologist

 

  1. போங்கடா வெண்ணெய்களா! இப்படி இந்து மதத்தை சீண்டியே மற்ற மதம் தரும் பிச்சையில் பொழப்பு நடத்துபவர் கள் நீங்கள்! சிறுபான்மை ஆதரவு என்று பேசியே நல்ல கொள்கைகள் உடைய கம்யூனிஸ்ட்கள் பெயரை கெடுக்காதீங்கடா.. இந்துக்கள் மனிதர்கள்தான்டா ஈனப்பிறவிகளா! மற்ற மதத்தை பற்றி சிறு மூச்சு விட தைரியம் இருக்கா?

    • ஆமா முருகன் இந்துக்கள் என்பதே கேவலந்தான்,யார் இந்து? மதம் என்பது ஆரம்பத்தில் ஒடுக்கப்படுகின்ற மக்களின் ஆறுதலாகவே தொடங்குகிறது. இது பொதுவாக பெறும்பான்மை மதங்களுக்கு பொறுந்தும்.ஆனால் இந்து மதம் என்பதாக சொல்லப்படும் பார்ப்பனமதத்திற்கு முற்றிலும் விரோதமானது.ஏனெனில் இந்து என்பதே ஆரம்பம் முதலே மக்களை ஒடுக்கவும் வன்முறையை திணிக்கவும்,ஏற்றத்தாழ்வை தனது மிக அடிப்படை கோட்ப்பாடாகவே கடைபிடிக்கிறது.மேலும் இந்தியாவில் அருதிப்பெரும்பான்மை மக்கள் இந்து சட்டகத்திலேயே வைத்துள்ளது பார்ப்பனீயம்.என்ன செய்வது எது நம்மை அழிக்கிறதோ அதை எதிர்க்கத்தானே வேண்டும்.மேலும் உலக சரித்திரத்தை படியுங்கள்.அந்தந்த நாடுகளின் மதங்களை அங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள் மற்றுமின்றி பகுத்தறிவுவாதிகளும் நாத்திகர்களும் தொடர்ந்து போராடுவதை காணலாம்.
      அறிவும்,மானமும் மனிதனுக்கு அழகு என்றார் தந்தை பெரியார்…
      பார்க்க :வினவின் முந்தய பதிவுகளை example: பாகிஸ்தானில் ஆயுந்தாங்கி
      போராடும் கம்யூனிஸ்ட் பற்றிய ஆவணப்படம்.

  2. நான் எதிர்பார்த்தது போலவே வினவு ஹிந்து நம்பிக்கைகளுக்கு எதிராக இந்த கட்டுரையை வெளியிட்டு இருக்கிறது.

    கால அளவை கணக்கிட இன்று பல வழிமுறைகள் வந்து விட்டன, கார்பன் டேட்டிங், யுரேனியம் டேட்டிங் என்று பல முறைகள் உள்ளது…. ரிமோட் சென்சிங் செயற்கைகோள் மூலம் தற்போது பூமிக்கு அடியில் எங்கே பெட்ரோல் கிடைக்கும் என்றளவுக்கு அறிவியல் வளர்ந்து இருக்கிறது.

    அறிவியல் வளர்ந்தது தெரியாமல் இன்னமும் மனித உடலை தேடி கொண்டு இருக்கிறார் இந்த அறிவாளி 🙂

    • மிஸ்டர் மணி,

      சரி எந்த அறிவியல் முறையை பயன்படுத்தி மனிதர்களும் குரங்கு மனிதர்களும் ஒரே காலகட்டத்தில் நட்பாக இருந்தார்கள் என்று அந்த அறிவியல் தொலைகாட்சி கூறுகிறது?

      என்னடா ஒரே ஆச்சரியமாக இருக்கிறதே!!
      புராண குப்பைகளில் அறிவியலைத் தேடும் மணிகண்டன் கூட இங்கு அறிவியலை பேசும் நிலை வந்து விட்டதே.
      என்ன கொடும சரவணன்!!!!

    • அதை அவர்கள் நாட்டில் பலர் புத்தகங்களாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் வெளியிட்டுள்ளனர். ஆனால் எந்த கிறித்தவனும் அவர்களிடம், “ஏன் சிவன் பற்றி எழுதவில்லை?” என்று கேட்ப்பதில்லை

  3. The opinion was created by Indian iit professor and other parivars. Allen Lester just read that in the TV channel. People like Ramagopalan claims that Rama lived 1.70 lakes years ago, according to this, 7000 years is dont belong to ramayana period. Even in 7000 years ago, it should be connected land. It is known as Isthmus of India. If Ramayana was written to belittle Siva worshipers, in southern India and also to disparage Tamil people. No importance should be given to such imaginary stories.

  4. ராமர் பாலம் மிதக்கும் கற்கள் கொண்டு கட்டப்பட்டது என்பது தொன்மம்/நம்பிக்கை மட்டுமின்றி அறிவியலுக்கு முரண்படாமலும் இருக்கிறது..

    • அது சரி ரங்கராசன்,
      ராமன் வாழ்ந்தாக நீங்க சொல்றது திரேதா யுகம். லட்சம் வருசத்துக்கு முன்னாடி…
      நீங்க பாலம் கட்டுனது 7000 வருசத்துக்கு முன்னாடி…..
      அப்புறம்… ஒரு பாலம் இங்க இருக்கு.. இன்னொன்னு எங்க?
      இந்த அறிவியலுக்கும் முரண்படாம பதிலச் சொல்லுங்க பாப்போம் ! …

  5. காலக்கனக்கீட்டு முறையை நாம் மொழி வழியே பரிமாறிக்கொள்ளும் போது சில தவறான புரிதலுக்கு வர வாய்புண்டு , உமக்கு புரியும் படி சொல்லுவதென்றால் முதலில் பாலமே இல்லை என்று சொன்ன நீவிர் தற்போது “இந்த பாலம் அந்த பாலம் இல்லீங்க ” என்று சமாளிக்க பார்க்கிறீர்கள். ஶ்ரீ.

    • ரெங்காவுக்கு எப்போதுமே கேள்விக்கு பதில் சொல்லி பழக்கமில்ல..ஏன்னா பதில் சொல்லத் தெரியாது…

      • பதில் சொல்லப்பட்டு விட்டது, புரிந்தால் படியும் புரியாவிட்டால் (வழக்கம் போல்) நடியும்..

      • காலக்கணக்கீட்டு முறையில் உள்ள தவறான புரிதலை விளக்குங்களேன் பார்ப்போம் !

        • தேவர்களுக்கு ஒரு இரவு ஒரு பகல், மனிதர்களுக்கு ஓர் ஆண்டு.. இது ஒரு சிறிய உதாரணம்.. மேலும் தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுகும் மொழிபெயர்ப்பு செய்யும் போதும் கணக்கீடு மாற வாய்ப்புள்ளது.. அதுமட்டுமல்லாமல் அன்று புழங்கிய வார்த்தைகளை நாம் தற்போது சரியாகதான் அர்த்தப்படுத்திக் கொள்கிறோமா என்பதுவும் ஆராயப்படவேண்டும்.. உ-ம் தலையில் மிளகாய் அரைத்து விட்டான் எனும் வாக்கியம் மறை பொருளல்லவா தருகிறது..

          • என்னங்க அறிவியல் ரீதியாக விளக்கம் கேட்டால் தேவர்கள் அது இது என்கிறீர், எமக்கு தெரிந்தவரை ‘தேவர்கள்’ எம் இனம் கெடுத்த எம்மை போன்றே சராசரி ஆயுளில் சேத்து மடியும் ஆரிய விலங்குகள், அதுங்க எப்புடிங்க அம்புட்டு ஆண்டுங்க சீவிக்க முடியு?? மாடு விழுங்கி எதாச்சும் slow metabolism நடந்துதா ???

            • “அது இது” தான் பதில்.. காழ்பில்லாமல் மீண்டும் படித்தால் அதன் வாதம் புரியும்..

          • //தேவர்களுக்கு ஒரு இரவு ஒரு பகல், மனிதர்களுக்கு ஓர் ஆண்டு//

            அப்போ செட்டியார்களுக்கு?

      • பாலம் மனித வடிவில் வந்த இறைவனுக்காக அவனது வானர தொண்டர் படை கட்டியது, மிகச்சிறிய தூரம் என்பதாலும், மிதக்கும் கற்கள் கிடைத்ததாலும் எளிதாக பாலம் அமைக்க முடிந்தது இதுவே எமது கூற்று..

  6. //கற்களின் மீது ராமா என்று மட்டுமல்ல, ராவணா என்று எழுதியிருந்தாலும், தண்ணீரின் மிதந்துகொண்டுதான் இருக்கும்.//

    அற்புதமான வரிகள்.

    • மீட்க போறவனுக்கு பாலம் தேவையா?.. இல்ல ஓளிஞ்சவனுக்கு பாலம் தேவையா?..
      ராவணன் பாலம் கட்டவில்லை, அதனால
      அவன் பெயர் எழுதவில்லை.. ராமன் தரப்பு கட்டியதால் , ராம நாமம் இருந்தது இது கூட புரியாமல் இருப்பதனால் தான் அடுத்தவன் பொண்டாட்டியை கடத்தியவனை ஆதரிப்பது அடுத்தவன் தெய்வதாயை பழிப்பது என நடந்து கொள்கிறீர்..

      • //கற்களின் மீது ராமா என்று மட்டுமல்ல, ராவணா என்று எழுதியிருந்தாலும், தண்ணீரின் மிதந்துகொண்டுதான் இருக்கும்.//

        இதோட அர்த்தம் புரிஞ்சுதான் பதில் சொல்றீங்களா? இல்ல, ராவணனை வம்புக்கு இழுக்குறீங்களா?
        எல்லா கொடுமைகளையும் செஞ்சிட்டு அடுத்தவன் மேல பழியப் போடுறத காலம் காலமா செஞ்சிட்டு வர்றீங்க!
        அடுத்தவங்களோட தங்கச்சிய அவமானப்படுத்தி மூக்க அறுத்ததுனாலதான் அந்த அடுத்தவங்க அடுத்தவங்களோட பொண்டாட்டிய தூக்குனது. இராவணன் சீதய மரியாதையாத்தான் வச்சிருந்தாரு!
        சீதய பலாத்காரம் பண்ணுறதுக்கு இராவணனுக்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?
        ஆனா இராமன் சீதய சந்தேகப்பட்டு தீக்குளிக்க வச்சாரு. மாசமா இருந்தவங்கள காட்டுக்குள்ள போயி விட்டுட்டாரு. அந்தம்மா காட்லயே கஷ்டப்பட்டு கொழந்தைங்களும் பெத்தாங்க.
        மூல இராமாயணமான வால்மீகி ராமாயணத்தில ராமனப்பத்தி வண்டி வண்டியா இருக்கு! பகல் குடிகாரன், பெண் பித்தன், கொலைகாரன் (சூத்திரன் தவம் செஞ்சா போட்டுத்தள்ளுறது)….Etc.,
        பின்னாடி தமிழ்ல ராமாயணம் எழுதின கம்பர் ராமன யோக்கியன் மாதிரி காமிச்சுட்டாரு.
        இப்ப சொல்லுங்க! நல்லவன் யாரு? எங்க ராவணனா, உங்க ராமனா?

        • // சீதய பலாத்காரம் பண்ணுறதுக்கு இராவணனுக்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?// உமது இழிந்த கம்யூனிஸ்ட் புத்தி இப்படித்தான் போகும், சீதையை தீய நோக்கத்தோடு தொட்டால் இராவணன் எரிந்து போவான் என்பதனால் தான் அவன் நெருங்கவில்லை, ராவணன் ஒரு பிராமணன் என்பது உமக்கு தெரிந்தும் தெரியாததாக நடிக்கிறீர்! சரி ! உமது இஷ்டம்..

          • “ராவணன் பிராமணன், சீதயத் தொட்டா எரிஞ்சு போயிருவான்”… இப்புடி கலர் கலரா கதய எழுதி வச்சிக்கிட்டு சமயத்துக்கு தகுந்த மாதிரி விளையாடுவீங்க!
            அத விடுங்க, ராமன் சீதய சந்தேகப்பட்டு துன்புறுத்துனது, சூத்திரன் தலய வெட்டுனது, வால்மீகி ராமாயணப்படி அவனது ஒழுக்கத்தப்பத்தி அவன் டவுசர அவுத்திருந்தேனே!
            அதப் பத்தி பதுலுன்னு சொல்லி என்னத்தயாவது எழுதுங்களேன்!

    • அட இவிருக்கு போய் தார்மீக விளக்கம் எல்லாம் கொடுத்துகின்னு கார்த்திகேயன்..அதாவதுங்க அட்வோகேட், அந்த பாறைகள் அடர்த்தி குறைந்ந்தவை என்பதை காட்டவே கட்டுரையாளர் அறிவியலோடு இராவணனையும் மேன்மைபடுத்திஇருந்தார், அதையே மெச்சினேன். புரியலியா? இல்ல புரியாதமாரி நடிக்கிறிங்களா?

  7. என்னய்யா தமாஸ் பண்ணிக்கிட்டு. அவரு தன்னால உருவானது இல்லன்னு சொல்றாரு. நீங்க அந்த கல்லும் மண்ணும் தன்னாலதான் உருவானதுன்னு ப்ரூப் பண்ண வேண்டியதுதானே. அதுதானே லாஜிக். கொரங்கு கட்டுனுச்சீன்னு சொன்னா சிம்பான்சிகூட நம்பாது. ராமாயண கத இங்க முக்கியமில்ல. அது மனுசன் கட்டனதா இல்லையான்றதுதான் கேள்வி. மனுசன் கட்டனதுனா மனுசன் கட்டனதுன்னு ஒத்துகிட்டு போவோம். அப்படி இல்லன்னா இல்லன்றதுக்கு ஆதாரத்த குடுப்போம். அத விட்டுட்டு வாழ்ந்த அடையாளம், ஆயி போன அடையாளம் வேணும்னு பொலம்பிக்கிட்டு. உங்களுக்கு உண்மையயும் பகுத்தறிவயும்விட இந்து எதிர்ப்பே பெருசு போல. வேணும்னா இந்து எதிர்ப்பு மதம்னு ஒன்னு ஆரம்பிச்சி எல்லாம் மெம்பர் ஆகிருங்க. ஆமான்னா ஆமா, இல்லன்னா இல்லன்னு சொல்றதுதான் பகுத்தறிவு. அத கேட்டு மதவாதி கதற்றானோ இல்ல சுய இன்பம் அடையரானோ அது அவனோட பிரச்சன. வினவு பொழிவிழந்து போனதுக்கும் குருட்டுத்தனமான எதிர்ப்புகளே காரணம்.

  8. வினவு கேள்வி கேட்கலாம். இவை என்ன ?

    // ஆனால் இன்று வரை, இந்தியாவின் எந்த மூலையிலும் குரங்கு போன்ற மனித உருவம் கொண்ட எலும்புக்கூடு எங்கும் கிடைக்கவில்லை. //

    இந்தியாவின் மூலை, முடுக்கு என்று ஒன்று விடாமல் தேடி விட்டார்களா ? உண்மையாகவா ?

    // அவர் மண்டபத்திலிருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு முதலில் ஒரு பாலம் அமைத்திருக்கவேண்டும். ஏனெனில், மண்டபத்திலிருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரம் ஒரு தீவு. //

    நீங்கள் எந்த காலத்தை பயன்படுத்தி இதை குறிப்பிடுகிறீர்கள் ? ராமர் வாழ்ந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் “மண்டபத்திற்க்கு மற்றும் ராமேஸ்வரத்திற்கு” 2.1 கிலோமீட்டர் தூரம் இருந்ததா ???

    // கண்டிப்பாக அமெரிக்காவின் சைன்ஸ் சேனல், தங்களுடைய ஆய்வின் முடிவை வாழும் கலை நிறுவனத்துடன் பகிரந்திருக்க வேண்டும். //

    வாழும் கலை நிறுவனம் எந்த காலத்தில் விடியோவை வெளியிட்டது ? science channel எந்த காலத்தில் விடியோவை வெளியிட்டது ?
    அதாவது எந்தெந்த ஆண்டில் விடியோவை வெளியிட்டது ?

    // என்னுடைய ஊகம் என்னவென்றால், ஹிந்து சமய கொள்கை மீது பற்றுகொண்ட ஓரிரு ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவின் சைன்ஸ்சேனல் ஆராய்ச்சியின் பின்புலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். //

    உங்கள் ஊகத்தை உங்களோடு நிறுத்துங்கள். ஊகம் உறுதியான பின் செய்தியை போடவும்

    நன்றி

Leave a Reply to shan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க