பேருந்து கட்டணம் செலுத்தாதே ! ஓடும் பேருந்தில் பிரச்சாரம் – வீடியோ
மக்களை கொள்ளையடிக்கும் புதிய பேருந்து கட்டணத்தை செலுத்த மறுப்போம்! பழைய கட்டணத்தையே செலுத்துவோம்! என மக்கள் மத்தியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் ஓடும் பேருந்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இந்த பிரச்சாரத்தினை பொதுமக்களைத் தாண்டி பெரும்பாலான போக்குவரத்துத் தொழிலாளிகளும் ஆதரிக்கவே செய்கின்றனர். அதிமுக -வின் அல்லக்கையாக இருக்கும் ஒருசிலர் பிரச்சாரத்தை தடுக்க முயன்றாலும், மக்களே அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கின்றனர். பாருங்கள்!…பகிருங்கள்!
_____________________
இணையுங்கள்:
பேச்சாளர்கள்னா, பளபளன்னு மேடைப்போட்டு, மைக் மாட்டிக்கினு, மக்களுக்காக பேசுறோம்…. மக்களுக்காக வாழுறோம்னு கத்தறதத்தான் கேட்டு இருக்கேன்.
ஆனா, உண்மையில்…. மக்களுக்காக வேலை செய்யறவங்க, எந்த இடத்திலேயேயும், உண்மைய பேசுவாங்க… வர்ற பிரச்சனைகளை மக்களைக் கொண்டே தீர்ப்பாங்க…. னு தோழர்கள் புரிய வைச்சாங்க.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். தமிழ்நாடு முழுக்க, பிரச்சாரத்திற்கு செல்லும் தோழர்களின் சிரமத்தை இவங்க, எங்களுக்கு உணர வைச்சாங்க.
…வீடியோ பதிவின் மூலம், அதே பஸ்ஸில் பயணித்த அனுபவத்தை எங்களுக்கு கொடுத்த வினவிற்க்கு நன்றி.
Poraattam vellattum
மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும். வாழ்த்துக்கள்.