Thursday, July 3, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்தஞ்சை சிண்டிகேட் வங்கி மோசடி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

தஞ்சை சிண்டிகேட் வங்கி மோசடி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

-

“தஞ்சாவூர் சிண்டிகேட் வங்கி டெய்லி டெபாசிட் வசூல் முகவர் பெர்னாண்ட்ஸ் கோடிக்கணக்கில் மோசடி !
பொருப்பேற்க மறுத்து மோசடிக்குத் துணைபோகும் வங்கி நிர்வாகம்!”
என்ற முழக்கத்தை முன் வைத்து  மக்கள் அதிகாரம் சார்பில் 03.03.2018 சனிக்கிழமை மாலை ரயிலடியில் மக்கள் அதிகாரம் தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையில்  நடைப்பெற்றது.

பாதிக்கப்பட்ட சிண்டிகேட் வங்கி  வாடிக்கையாளர்கள் திருவாசகம் கிருஷ்ணன், மேனகா, தனலட்சுமி மற்றும் வழக்கறிஞர் முத்துமாரியப்பன்  ஆகியோர் வாடிக்கையாளர்களின் அவலத்தையும் பாதிக்கப்பட்டவர்களின் கையறுநிலையையும் தங்களது உரையில் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினர். உணர்ச்சிபூர்வமாக பேசிய அம்சவள்ளி பேசி முடித்தவுடன் ஆர்ப்பாட்ட இடத்திலேயே மயங்கி விழுந்தார். தோழர்கள் அவருக்கு முதலுதவி செய்து உதவி செய்தனர். நிறைவுரையாற்றிய மக்கள் அதிகார  மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் வங்கி மோசடிகளை அம்பலப்படுத்தி உரையாற்றினர்.

  • வாடிக்கையாளர்களின் சேமிப்பை பாதுகாப்பது வங்கியின் அடிப்படை கடமை!
  • வாடிக்கையாளர்கள் கட்டிய பணத்தை வங்கி நிர்வாகமே வட்டியுடன் திருப்பி கொடு!
  • முகவர் பெர்னான்ட்ஸ், துணைபோன அதிகாரிகள் அலுவலர்களை கைது செய்து தண்டனை வழங்கு!
  • குற்றவாளிகளின்  சொத்துக்களை பறிமுதல் செய்!

ஆகிய கண்டன முழக்கங்களை  நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் எழுப்பினர்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

– வினவு செய்தியாளர்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க