privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைலெனின் - பெரியாரை தொட்டுப் பார் பட்டுப் போவாய் !

லெனின் – பெரியாரை தொட்டுப் பார் பட்டுப் போவாய் !

-

லெனினும் பெரியாரும் சிலை அல்ல சிந்தனை !

லகெங்கும்
கோடிக்கணக்கான மக்களின்
தலைக்குள் இருக்கிறார்
லெனின்.

சிலைக்குள் தேடும்
முண்டங்களே
எத்தனை புல்டோசரோடு
வந்தாலும்
உங்களால்
தவிர்க்க முடியாது லெனினை.

வளர்ந்து வரும்
வர்க்கப் பகையில்
தொழிலாளி வர்க்கத்தின் மூச்சில்
கலந்துவிட்ட லெனினை
மூலதனம் அடைகாக்கும்
கோல் வால்கர் குஞ்சுகளே
உங்களால்
தடுக்கவும் முடியாது.

எத்தனை பாரதமாதாவுக்கு
நீ, ஜெய்! போட்டாலும்
சா வர்க்க(ர்) கும்பலே
உன்னால் லெனினை
புதைக்க முடியாது
ஏனெனில்
லெனின் என்றால்
எதிர்காலம்.

அன்னிய தேசத்து தலைவருக்கு
இங்கெதற்கு சிலை என்றால்
அன்னிய ‘லோகத்து’ சாமிகளுக்கு
இங்கெதற்கு சிலை?
ஆரிய குடி ராஜாவுக்கு
காரைக்குடியில்
என்னடா வேலை!

ஆரியன் நீதான்
அந்நியன்,
லெனின்
உழைக்கும் வர்க்கத்து மண்ணியன்.

பூவுக்கும் வாசத்திற்கும்
என்ன சம்பந்தம்
பூமிக்கும் காற்றுக்கும்
என்ன சம்பந்தம்
அண்டத்திற்கும்
அணுக்களுக்கும்
என்ன சம்பந்தம்
அறியாத
தறுதலைகள் கேட்கின்றன,
லெனினுக்கும் இந்தியாவுக்கும்

என்ன சம்பந்தம்!
உலகுக்கும்
மின்சாரத்துக்கும்
என்ன சம்பந்தமோ
அதுதான்
லெனினும் இந்தியாவுக்கும்
உள்ள சம்பந்தம்.

வந்தேறி
ஆரிய ஆர்.எஸ்.எஸ். கும்பலே
முதலில்
உனக்கும்
மனித இனத்துக்கும்
என்ன சம்பந்தம்?
குரங்குகள்
வாழ ஆசைப்படலாம்
ஆள ஆசைப்படக் கூடாது.

முன்னேறிய
சிந்துவெளி நாகரிகத்தை
சீரழித்த
ஆரிய சுரண்டல் கும்பலுக்கு
லெனினின் சிவப்படியும்
பெரியாரின் செருப்படியும்
இன்னும் வலிக்கிறது.
சிலையாய் பார்த்தாலும்
பூணூல் எரிகிறது
குடுமி கொதிக்கிறது.

மிச்சமிருக்கும்
எச்சு ராஜாவுக்கும்
எரியத்தான் செய்யும்,
அணு உலைக்கும்
கொடிதான
மனு உலைக்கே
வேட்டு வைத்தவர் பெரியார்.

எங்கள்
நாடி நரம்பெல்லாம்
எழுந்து நிற்கிறார் ப‍ெரியார்.
பெரியார்
சிலை அல்ல
சிந்தனை.
தொட்டுப்பார்
பட்டுப்போவாய்.

– துரை. சண்முகம்