privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஇந்தி - வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் !

இந்தி – வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் !

-

டந்த பத்தாம் தேதி (10.03.2018)  நாக்பூரில் கூடியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய பிரதிநிதிகள் சபை. இந்த சபையில்தான் ஆர்.எஸ்.எஸ் சார்ந்த பல்வேறு இயக்கங்கள், நிறுவனங்கள் பாஜக உட்பட உறுப்பினர்களாக இருக்கின்றனர். வருடம் ஒரு முறை கூடி இந்த பரிவாரங்களோடு தனது இந்துத்துவ ஆண்டுத் திட்டத்தை தீட்டுவது ஆர்.எஸ்.எஸ்-ன் வழக்கம்.

இந்த பிரதிநிதிகள் சபையின் இந்த ஆண்டுத் தீர்மானம் ஒன்று “இந்திய மொழிகளின் பயன்பாடு குறைந்து வருவதை” எச்சரித்துள்ளது. ’பாரதீய’ மொழிகளின் பயன்பாடு குறைந்து வருவதை அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ள ஆர்.எஸ்.எஸ், இம்மொழிகளில் கலந்துள்ள அந்நிய சொற்களை நீக்க வேண்டிய சவால் காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. பிராந்திய அளவிலான மொழிகள் அழிந்து வருவது கவலைக்குரியதாக ஆர்.எஸ்.எஸ்  தெரிவித்துள்ளது.

நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய பிரதிநிதிகள் சபை.

மேலும் மத்திய மாநில அரசுகள் பிராந்திய மொழிகளின் விசயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், நாடெங்கிலும் தாய் மொழி வழியிலான ஆரம்ப கல்வி அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை வைத்துள்ளது. நீதிமன்றங்களிலும் அரசு அலுவலகங்களிலும் அந்நிய மொழியான ஆங்கில மொழிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டு அதனிடத்தை பாரதீய மொழிகளுக்கு அளிக்க வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு மற்றும் பணி உயர்வு போன்றவற்றுக்கு ஆங்கில அறிவு தடையாக இருக்க கூடாது என்றும் மேற்படி பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இத்தீர்மானங்களை மேலெழுந்தவாரியாக புரிந்து கொண்ட ஆங்கில ஊடகங்கள், நாக்பூர் பூனைகள் திடீரென சைவமாக மாறி விட்டதாக ஆச்சர்யமடைந்துள்ளன. ஆனால் மேற்படி தீமானங்களை கொஞ்சமே கொஞ்சம் நெருக்கமாகப் பார்த்தாலே எலி ஏன் அம்மணமாக ஓட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இத்தகைய ஓட்டத்தை இப்போது செய்ய வேண்டிய உடனடித் தேவை ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஏன் ஏற்பட்டது?

இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழகத்தின் விடாப்பிடியான நிலைப்பாடு என்பது புதிய செய்தியல்ல. இந்தி எதிர்ப்பு மொழியரசியலால் அரசியல் ரீதியில் பலன் பெற்ற தி.மு.க தற்போது 60 – 80களின் காத்திரத்தோடு இப்பிரச்சினையைக் கையிலெடுப்பதில்லை என்றாலும் கூட இந்தி எதிர்ப்பு (அதன் உட்கிடையான பார்ப்பனிய எதிர்ப்பு) ஆகியவை ஏதோவொரு வகையில் தமிழ் மக்களின் ஆழ்மனதில் இருப்பதை அவ்வப்போது இந்தித் திணிப்புக்கு எதிராக நடக்கும் போராட்டங்களே உணர்த்துகின்றன. தி.மு.க -வும் தனது சொந்த அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அவ்வப்போது தமிழர்களின் நனவிலி மனதில் உறைந்து கிடக்கும் இந்தி எதிர்ப்பை அடையாளத்துக்காகவாவது தொட்டுச் செல்கின்றது.

கடந்த சில ஆண்டுகளாக கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும், ஒடிசா, வங்கம் போன்ற மாநிலங்களிலும் இந்தி திணிப்புக்கு எதிரான பொது மனநிலை மெல்ல மெல்ல கட்டமைந்து வருகின்றது. கடந்த 2017-ம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் எழுந்த திராவிடநாடு கோரிக்கையை மலையாளிகள் ட்ரெண்ட் ஆக்கினர் என்றால், கடந்த சில வாரங்களாக ஆந்திர அரசியல் அரங்கில் அம்மாநிலம் 15 -வது நிதிக் கமிஷனின் ஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தெற்கத்திய மாநிலங்களின் ஒருங்கிணைவு குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன.

கடந்த வாரம் கர்நாடக மாநிலத்திற்கென தனிச்சிறப்பான கொடி ஒன்றை வடிவமைத்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருக்கிறது, கர்நாடக அரசு. பெங்களூர் மெட்ரோ ரயிலில் இந்தி வாசகங்கள் தார் பூசி அழிப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் கன்னட மொழிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. விரைவில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ள கர்நாடகத்தில் அதிகரித்து வரும் கன்னட இன உணர்வை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது பார்ப்பனிய இந்துத்துவ முகாம்.

தமிழகத்தைப் போலன்றி கர்நாடகத்தில் எழுந்திருக்கும் மொழி உணர்வு வலதுசாரி அடித்தளத்தில் இருந்தே வருகிறது. இது ஒருவகையில் இந்துத்துவ கும்பலுக்கு சாதகமான நிலை தான். என்றாலும், அங்கே பாரதிய ஜனதாவின் போட்டியாளரான சித்தராமையாவே கன்னட இனவெறிக்கு நீரூற்றி வளர்த்து வருவதால் இதன் மூலம் கிடைக்க கூடிய அரசியல் ஆதாயத்தில் அவரும் உரிமை கொண்டாடுகிறார். தற்போது மத்திய அரசின் இந்தித் திணிப்பை கன்னட தன்மானத்திற்கு (கன்னட சுவாபிமானா) விடப்பட்ட சவாலாக சித்தரிப்பதில் கர்நாடக காங்கிரசு ஓரளவுக்கு வெற்றி பெற்று வருகிறது – இதனை எதிர் கொள்ள முடியாமல் கைபிசைந்து நிற்கிறார் பா.ஜ.க-வின் எடியூரப்பா.

இந்தச் சூழலில் தான் நாக்பூர் நரிகளின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது நாம் தீர்மானத்தின் உள்ளே செல்வோம்.

முதலில், பாரதீய மொழிகளில் உள்ள அந்நிய சொற்களைக் களைய வேண்டும் என்கிற கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ் கும்பல் இப்போது எடுக்கவில்லை. கடந்த ஆண்டே சிக்ஷா சன்ஸ்கிருதி உத்தான் நியாஸ் என்கிற சங்பரிவார் அமைப்பு (இது வித்யாபாரதி எனப்படும் ஆர்.எஸ்.எஸ்-ன் கல்வி சார்ந்த நிறுவனத்தில் துணை அமைப்பாகும்) தேசிய பாடநூல் கழகம் (National Council of Educational Research and Training – NCERT) வெளியிடும் இந்தி நூல்களில் இருந்து உருது மற்றும் அரபி வார்த்தைகளை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்து செயல்பட்டு வருகிறது.

பார்சி மற்றும் அரபி வேர்ச்சொற்கள் அதிகம் கொண்ட இந்தியை சமஸ்கிருதமயமாக்கும் போக்கு கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பார்ப்பனிய சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் இன்னொரு பொருள் அரபி மற்றும் உருது மொழிகள் இந்தியத் தன்மை கொண்டவைகள் அல்ல என்று திரிப்பதோடு அம்மொழிகளைப் பேசும் இசுலாமியர்களை தனிமைப்படுத்தும் உள்நோக்கமும் கொண்டதாகும்.

இரண்டாவதாக, “நீதிமன்றங்களிலும் அரசு அலுவலகங்களிலும் அந்நிய மொழியான ஆங்கில மொழிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டு அதனிடத்தை பாரதீய மொழிகளுக்கு அளிக்க வேண்டும்” என்கிற கோரிக்கையை எடுத்துக் கொள்வோம். தற்போது நீதிமன்றங்களிலும், மத்திய அரசிலும் அலுவல் மொழிகளாக இருப்பது ஆங்கிலமும் இந்தியும் தான். இமயமலையின் உயரத்துக்கு நிகராக குவிந்து கிடக்கும் நீதிமன்றத் தீர்ப்பு நகல்கள், சட்ட நூல்கள் மற்றும் இன்னபிற ஆவணங்கள் இம்மொழிகளிலேயே உள்ளன. அவற்றை பிராந்திய மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்வது ஓரிரு ஆண்டுகளில் நடந்தேறக் கூடிய வேலையும் அல்ல.

மத்திய அதிகாரமும் இவர்கள் கையிலேயே இருப்பதால் அவ்வாறு மொழிமாற்றம் செய்வதைக் காலவரையின்றித் தள்ளிப் போடவும் செய்வார்கள். இந்தச் சூழலில் நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்து ஆங்கிலத்தை நீக்கிவிட்டால் இந்தி மட்டுமே கோலோச்சும். பாரதிய மொழிகளுக்கு கம்பு சுற்றிக் கொண்டே இந்தியைத் திணிக்கலாம் அல்லவா? இதைத் தான் “மாடு மேய்த்த மாதிரியும் ஆச்சு, பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு” என்பார்கள் கிராமத்தில். ஆக மொத்தம் ஆர்.எஸ்.எஸ்-ன் தாய்மொழிக் காதல் என்பது இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பது அன்றி வேறல்ல.

இந்துத்துவ நாக்பூர் நரிகளுக்கு இந்தியாவின் பிராந்திய மொழிகளின் மேல் உண்மையிலேயா அக்கறை இருக்குமானால், ஷாகாக்களில் அன்றாடம் பாடும் பிராத்தனைப் பாடலான “நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமே” என்பதை முதலில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு மாற்றிக் கொள்ளட்டும். சிதம்பரம் கோவிலில் பாரதீய மொழியான தமிழை நீச பாசை என வாதிட்டு தமிழில் பாட முயன்ற சிவனடியாரின் கையை உடைத்த அதே கும்பல் இன்று பிராந்திய மொழிகளுக்காக ஓநாயாக அவதாரம் போட்டுக் கொண்டு கண்ணீர் வடிக்கிறது.

“ஓ ஆடுகளே! நீங்கள் வெயிலில் புல் மேய்ந்து கஷ்டப்படுவதைக் கண்டு பரிதாபப்படும் ஓநாய் கூட்டத்தினிமிடம் எச்சரிக்கையாய் இருக்க கடவீர்!”

மேலும் :