Thursday, May 8, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்பூம்புகார் வந்தடைந்த மக்கள் அதிகாரம் காவிரி உரிமை நடைப்பயணம் ! !

பூம்புகார் வந்தடைந்த மக்கள் அதிகாரம் காவிரி உரிமை நடைப்பயணம் ! !

மக்கள் அதிகாரம் சார்பில் கடந்த 21 அன்று கல்லணையில் தொடங்கிய காவிரி உரிமை மீட்புப் பிரச்சார நடைபயணம் பூம்புகார் வந்தடைந்தது...

-

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பிரச்சார நடைபயணம் கடந்த 21ம் தேதி கல்லணையில் துவங்கி இன்று (30.04.2018) பூம்புகாரில் நிறைவு பெற்றது.

கடந்த 5 நாட்களாக 100 கிலோ மீட்டருக்குமேல் நடந்து வந்த தோழர்களை ஒவ்வொரு ஊரிலும் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். பல்வேறு கிரமங்களிலும் மக்கள் தோழர்களுடன் இணைந்து நடைப் பயணத்தில்உடன் சென்றுள்ளனர். சுட்டெறிக்கும் வெய்யிலிலும் சிறுவர்களும் நடைபயணத்தில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

பல ஊர்களில் இன்று சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களைப் பார்ப்பது என்பதே அரிதாகிப் போயுள்ளது. பலரும் பஞ்சம் பிழைக்க வெளியூர் சென்றுள்ளனர். அதைத் தாண்டி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளும் நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

காவிரி நீர் விவசாயத்திற்கு பயன்படுவது இருக்கட்டும், பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடே பெரும் பிரச்சினையாக உள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் பல இடங்களில் நிலத்தடி நீரானது கெட்டுப் போய் குடிக்க லாயக்கற்றதாகிப் போயுள்ளது. அப்பகுதி மக்கள் அனைவர் மத்தியிலும் ஒரு ஆழமான அச்சம் நிலவுகிறது. ஓ.என்.ஜி.சி., மீதேன், ஹைட்ரோ கார்பன் போன்ற கொலைகாரத் திட்டங்களால் தங்கள் வாழ்கை சீரழிந்து நிலங்கள் பாலையாகும் என்ற அச்சம் தான் அது.

அந்த அச்சம் அவர்களை ஒன்றிணைக்கும் புள்ளியாக மாற்றியுள்ளது. அதிலிருந்து தான் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சி பிரமுகர்களும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் இந்த நடைபயணத்தை ஆதரிக்கின்றனர். ஒவ்வொரு ஊர்களிலும் வரவேற்கின்றனர். இந்த நடைபயணம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கத்தை தணிக்க 12 நிபந்தனைகள் போட்டுள்ளது போலீசு. குறிப்பாக ஒலி பெருக்கி பயன்படுத்தக்கூடாது, 30 –பேருக்கு மிகாமல் தான் நடைபயணம் செல்வோர் இருக்க வேண்டும், என்பதில் துவங்கி பல நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

அதையும் தாண்டி பல ஊர்களில் உளவுப் பிரிவு போலிசார் நடைபயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களை நேரில் சென்று பீதியூட்டுகின்றனர். ஆனால் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது, “காவிரியை மீட்காது தமிழகத்துக்கு வாழ்வில்லை. இது டெல்டாவின் பிரச்சினை இல்லை ! தமிழகத்தின் பிரச்சினை!” என அர்ப்பணிப்போடு பீடு நடைபோடும் மக்கள் அதிகாரத்தின் இந்த நடைபயணத்தை ஆதரித்தவண்ணம் உள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கல்லணை முதல் பூம்புகார் வரை 150 கிலோமீட்டர் நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் காவேரி மீட்பு நடைபயணத்தை வரவேற்கும் பூம்புகார் மீனவத்தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் பொது மக்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க