11.09.2022
ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது !
மக்கள் அதிகாரம் கண்டனம்
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பாக தனது இணைய ஊடகம் வழியாக தொடர்ச்சியாக எழுதி வந்த ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் இன்று (11.09.2022) காலை கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் விவகாரத்தில், மாவட்ட போலீசும் மாவட்ட ஆட்சியரகமும் மேற்கொண்ட பள்ளி நிர்வாகத்தின் சார்பான நடவடிக்கைகள் மற்றும் தலித் மக்கள் மீது திட்டமிட்டு போலீசார் நடத்திய நரவேட்டை ஆகிவற்றை ஊடகவியலாளர்களும் வழக்கறிஞர்களும் வெளிக்கொண்டு வந்தனர்.

நீதிமன்ற உத்தரவு என்று கூறிக்கொண்டு சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் தமிழக அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மீண்டும் சாவித்திரி கண்ணனை கைது செய்யும்போது மேற்கொள்ளவேண்டிய முறையான எவ்வித வழிகாட்டதல்களையும் மேற்கொள்ளாமல் வீட்டினுள் புகுந்து அராஜகமாக கைது செய்த போலீசு, சாவித்திரி கண்ணனுடைய மனைவியின் செல்போனை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளது. சாஸ்திரி நகர் போலீஸ் என்று கூறிக்கொண்டு கைது செய்திருக்கிறது கள்ளக்குறிச்சி போலீஸ்.
இந்த அராஜகமான சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருப்பதாக கூறப்படும் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை ஆகியவற்றை நசுக்கும் செயல்களில் அரசு ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும்.
![]()
தோழமையுடன்
தோழர் குருசாமி,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு- புதுவை.
9962366321
