09.04.2024
கோவையில் பாசிச பிஜேபிக்கு எதிராக பேசக்கூடாதா?
ஒட்டு மொத்த தமிழ்நாடும் பாசிச பா.ஜ.க-வை வீழ்த்தும்!
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டையே பேரழிவுக்கு உள்ளாக்கியது மோடி – அமித்ஷா பாசிச கும்பல். நாடு முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்களின் முன் தோற்று நிற்கிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பல். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டினைக் குறிவைத்து பிஜேபி வேலை செய்து வந்தாலும் டெபாசிட்டுக்கு கீழே அக்கட்சியை மக்கள் வைத்திருக்கிறார்கள்.
எனினும், அதிகார வர்க்கத்தை கையில் வைத்துக்கொண்டு பாசிச பா.ஜ.க, தங்களை அம்பலப்படுத்துபவர்களை தொடர்ந்து மிரட்டுகின்ற வேலையிலே ஈடுபட்டு வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பாசிச பா.ஜ.க-வை அம்பலப்படுத்தி பரப்புரையை மேற்கொண்டு வந்த தோழர்கள் திருமுருகன் காந்தி மற்றும் குடந்தை அரசன் ஆகியோரின் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தகராறு செய்துள்ளது. இந்த பாசிச கும்பலின் பேச்சைக் கேட்டு பரப்புரையை முடித்துக் கொள்ளச் சொல்லி வலியுறுத்தியுள்ளது போலீசு. எனினும், பாசிச கும்பலுக்கு அடிபணியாமல் தொடர்ந்து பிரச்சாரத்தை தோழர்களும் மேற்கொண்டனர்.
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் கோட்டையை போலவும் அங்கே மோடியைப் பற்றியும் பா.ஜ.க-வை பற்றியும் விமர்சனம் செய்ய முடியாது என்பதைப் போலவும் போலீசை வைத்துக்கொண்டு போங்காட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றது பா.ஜ.க கும்பல். இந்த பாசிச – ரவுடி – பொறுக்கி கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
கோயம்புத்தூர் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ்நாடும் பாசிச பா.ஜ.க-வை வீழ்த்தும் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
இதையும் பாருங்கள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube