Thursday, July 3, 2025
முகப்புசெய்திஅறிவிப்பு | “THE FINAL COUNTDOWN” செய்தி அறை தொடங்கியது!

அறிவிப்பு | “THE FINAL COUNTDOWN” செய்தி அறை தொடங்கியது!

நாடு முழுவதும் பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இவையெல்லாம், கோடிக்கணக்கான இந்திய மக்கள் பி.ஜே.பி-க்கான கடைசி கவுண்டனை “THE FINAL COUNTDOWN” சொல்லத் தொடங்கிவிட்டனர் என்பதைத்தான் உணர்த்துகிறது.

-

ன்பார்ந்த வாசகர்களே,

2024 நாடாளுமன்றத் தேர்தலானது, நமது நாடு எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. பாசிச பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி தனது இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றுவதற்காக எல்லாவிதமான சதிச்செயல்களையும் சதித்திட்டங்களையும் அரங்கேற்றி வருகிறது. பெரும்பான்மையாக கார்ப்பரேட் ஊடகங்கள் மோடியின் ஊதுகுழலாக இருந்துக்கொண்டு பாசிசக் கும்பல் உருவாக்கும் நிகழ்ச்சிநிரலை மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றன. மோடி கூறிய 400, 370 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றுமா? என்ற அடிப்படையில்தான் பெரும்பாலான விவாதங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், களத்தில் மக்கள் பாசிசக் கும்பலை நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை. சான்றாக, டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தின் விளைவாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் பல இடங்களில் பா.ஜ.க-வினரால் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட நுழைய முடியவில்லை. ஹரியானாவில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில், பா.ஜ.க. கும்பல் கிராமத்திற்குள் நுழைவதை தடை செய்யும் விதமாக கிராம மக்கள் அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர். 2019- இல் மோடி கும்பலின் பொய் பிரச்சாரத்திற்கு பலியாகி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கொண்டாடிய லடாக் மக்கள் இன்று தங்களது ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க போராட்டக்களத்திற்கு வந்துள்ளனர். இதுபோன்று நாடு முழுவதும் பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இவையெல்லாம், கோடிக்கணக்கான இந்திய மக்கள் பி.ஜே.பி-க்கான கடைசி கவுண்டனை சொல்லத் தொடங்கிவிட்டனர் என்பதைத்தான் உணர்த்துகிறது.

இந்த மக்கள் போராட்டங்கள்தான் பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவதற்கான ஆயுதமாக உள்ளது. இதை பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்த்து அணித்திரட்டுவது மூலம்தான் நாடுத்தழுவிய அளவில் பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான மக்கள் எழுச்சியைக் கட்டியமைத்து பா.ஜ.க-வை வீழ்த்த முடியும். அந்த வகையில் பா.ஜ.க-வை வீழ்த்துவது குறித்து பல்வேறு கோணங்களில் விளக்கும் விதமாக வினவு+புதிய ஜனநாயகம் இணைந்து “THE FINAL COUNTDOWN” என்ற பெயரில் செய்தி அறை ஒன்றை உருவாக்கியுள்ளோம். முதல் கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி வரை வினவு இணையதளம், வினவு யூ-டியூப் சேனல், வினவு மற்றும் புதிய ஜனநாயகத்தின் சமூக ஊடக பக்கங்களில் கட்டுரைகள், வீடியோக்கள், பதிவுகளை கொண்டுவரப்போகிறோம். இதை வாசகர்கள் அனைவரும் படித்து, பகிர்ந்து தொடர் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.

மேலும், இந்த செய்தி அறையில் பா.ஜ.க-விற்கு எதிராக வினையாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், ஊடகங்களில் பணியாற்ற ஆர்வம் கொண்டவர்கள் ((Translation, Content Creation, Video-Audio Editing, Voice over) ஏப்ரல் 15 முதல் 19 வரை ஐந்து நாட்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க