08.07.2025
ஜூலை – 9 பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசக் கும்பல் வீழட்டும்!
பத்திரிகை செய்தி
தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் ஜூலை 9 அன்று அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் இணைந்து பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்தை மக்களை அதிகாரக் கழகம் ஆதரிக்கிறது.
குறைந்தபட்ச ஊதியம், பழைய பென்சன் திட்டம், மின்சாரத்தை தனியார்மயம் மற்றும் கார்ப்பரேட் கைகளுக்கு வழங்கும் மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை பாதுகாப்பு, விவசாய விளைப் பொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு விலை, 100 நாள் வேலைக்கு உரிய நிதி வழங்குதல், வரலாறு காணாத விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் 17 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கி ஜூலை ஒன்பதாம் நாள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நாடு தழுவிய இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram