16.07.2025

காஷ்மீரத்தின் ஈகியர் நாளன்று
அஞ்சலி செலுத்தும் உரிமையை மறுத்த பாசிச மோடி அரசு வீழ்க!

கண்டன அறிக்கை

1931 ஆம் ஆண்டு ஜூலை 13ம் நாள் காஷ்மீரத்தின் அன்றைக்கு ஆட்சியில் இருந்த ராஜா ஹரிசிங்கின் பாதுகாப்புப் படையினரால் உரிமைகள் கோரிப் போராடிய 21 காஷ்மீரிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஜூலை 13 ஆம் தேதியை ஈகியர் தினமாக காஷ்மீர் மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி ஈகியர் தினத்தில் அஞ்சலி செலுத்த முடிவெடுத்த காஷ்மீரத்தின் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட பலரையும் வீட்டுக்காவலில் வைத்தது பாசிச மோடி அரசு. ஆகவே ஜூலை 14 ஆம் நாள் ஈகியர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உமர் அப்துல்லா தடுக்கப்பட்டுள்ளார். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது

காஷ்மீர் தேசிய இன மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து மறுத்து, நொறுக்கி வரும் பாசிச மோடி அரசு ஈகியர் தினத்திற்கு கூட அனுமதி மறுத்தது என்பது காஷ்மீர் தேசிய இனத்தின் நெஞ்சில் ஈட்டியைக் குத்தியது போன்றதாகும்.

அரசியலமைப்பின் 370 வது பிரிவு ரத்து செய்து அம்மாநில மக்களின் உரிமையைப் பறித்த பாசிச மோடி அரசு தான், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளையும் பறித்து வருகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டவரும் இப்படிப்பட்ட தேசிய அடக்குமுறைகள் தமிழ்நாடு வரை நீளும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

எனவே காஷ்மீர் தேசிய இன மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் மக்களோடு கைகோர்த்து நிற்பது தமிழ்நாடு மக்களின் கடமையாகும்.

காஷ்மீரத்தின் ஈகியர் நாளன்று அஞ்சலி செலுத்தும் உரிமையை மறுத்த பாசிச மோடி அரசு வீழ்க!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க