09.08.2025

காசா முழுவதையும் கைப்பற்றி இராணுவக் கட்டுப்பாட்டில்
கொண்டு வரத் துடிக்கும் பாசிச இஸ்ரேல் அரசு வீழ்க!

கண்டன அறிக்கை

காசாவின் மீதமுள்ள 25 சதவீத பகுதிகளையும் கைப்பற்றி இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக பாசிஸ்டு நெதன்யாகு அறிவித்துள்ளார். அதன்படி இதுவரை கைப்பற்றப்படாத காசா பகுதியின் மீது கடும் இராணுவ நடவடிக்கையையும் அவர் தொடங்கியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரில் இறந்ததை விட மிக அதிகமான குழந்தைகள் சின்னஞ்சிறிய காசா பகுதியில் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். பாசிச அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து போரை நடத்திக் கொண்டு வருகின்றன. ஹமாசை ஒழிப்பது என்ற பெயரில் குழந்தைகள் பெண்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்வதும் குடியிருப்புப் பகுதிகளையும், மருத்துவமனைகளையும் தாக்கி அழிப்பதும் பாசிச இஸ்ரேல் அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

பாலஸ்தீன மக்களுக்கு உலக நாடுகள் முழுவதிலும் இருந்து அனுப்பப்படும் உணவுப் பொருட்களைத் தடுப்பதும் உணவுப்பொருட்களைப் பெற வரும் பாலஸ்தீன மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் இதுவரை இந்த உலகமே கேள்விப்படாத பாசிச நடவடிக்கைகள் ஆகும்.

இப்படிப்பட்ட மிக மோசமான பேரழிவைச் சந்தித்துள்ள பாலஸ்தீனத்தையும் மக்களையும் முழுமையாக அழிக்கப் போவதாகக் கொக்கரித்துள்ளார் நெதன்யாகு.

இந்த நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நின்று தோள் கொடுக்க வேண்டியது இந்திய மக்களின் கடமையாகும்.

பாசிச இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் மோடி அரசுக்கு எதிராக நம்முடைய கண்டன குரல்கள் எழட்டும்!

பாலஸ்தீன மக்களின் தேசிய இன உரிமையை மறுக்கும் பாசிச அமெரிக்கா – இஸ்ரேல் அரசுகள் வீழ்க!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க