21.08.2025
எதிர்க்கட்சிகளை தேர்தல் அரசியல் அதிகாரத்திலிருந்து ஒழித்துக் கட்டும்
சட்ட மசோதாவை முறியடிக்க அணி திரள்வோம்!
கண்டன அறிக்கை
ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டால் ஓர் அமைச்சரோ, ஒரு மாநில முதல்வரோ, பிரதமரோ பதவி பறிப்புக்கு உள்ளாக வழிவகை செய்யும் வகையில் சட்ட மசோதா பாசிஸ்ட் அமித்ஷாவால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமையுடன் முடியவிருக்கும் நிலையில், புதன்கிழமை இந்த மசோதா திட்டமிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
NIA, CBI, ED ஆகிய துறைகளை முதன்மை கூட்டணியாக வைத்துக்கொண்டு செயல்படும் பாசிச மோடி அரசு, எதிர்க்கட்சிகள் மீது தொடர்ந்து பல்வேறு பொய் வழக்குகளை போட்டு வருகிறது. அப்படி இருந்த போதும் கூட அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட முடியவில்லை. அவர்கள் ஏதோ ஒரு வகையில் மக்களின் ஆதரவைப் பெற்று முதல்வராகவோ அல்லது அமைச்சர்களாகவோ ஆகிறார்கள்.
அந்த வாய்ப்பையும் ஒழித்துக் கட்டுவதன் மூலமாக தன்னுடைய இந்துராஷ்டிர கனவை விரைவில் அடைய வேண்டும் என்பதற்காக அமித்ஷாவால் இந்த பாசிச சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆக எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய எந்த மாநிலத்தின் மீதும் அதன் அமைச்சர் மற்றும் முதலமைச்சரை பொய் வழக்கில் கைது செய்து 30 நாட்கள் சிறையில் வைத்திருந்தால் போதும் அவர்களை பதவியில் இருந்து நீக்க முடியும் என்கிறது இந்த சட்ட மசோதா.
இந்தப் போலி ஜனநாயக தேர்தலில் இருக்கக்கூடிய கொஞ்சநஞ்ச உரிமைகளையும் ஒழித்துக் கட்டி முழுமையான பாசிச அரசை நிறுவுவதற்கான செயலே இது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து கட்டியமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram