14.10.2025

தமிழ்நாட்டில் தொடரும் ஆணவ படுகொலைகள்!

கண்டன அறிக்கை

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமம் நாயுடு சாதியை சேர்ந்த 24 வயதான ராமச்சந்திரன், கணபதிபட்டி கிராம் கள்ளர் சாதியை நேர்ந்த 21 வயதான பெண் ஆர்த்தி இருவரும் காதலித்து மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.

திருமணமான நாள் முதலிருந்தே ஆர்த்தி குடும்பத்தினரிடமிருந்து அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. அக்டோபர் 12-ந் தேதி பால் கறவைக்காக ராமசந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பெண்ணின் தந்தை சாதிவெறியன் சந்திரன் வழிமறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான். கை துண்டான நிலையில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

திருமணமான ஒரு மாதம் கழித்து ஆர்த்தியின் தந்தை வீட்டிற்கு வந்து இருமுறை மிரட்டிவிட்டு சென்றுள்ளான். ”நீ நல்லா இருக்கிறாயா கொஞ்சம் நாள் தான் நல்லா இருப்ப. நான் கொடுக்கும் சாவு யாரும் கொடுக்காத சாவாக இருக்கும் என்று” ஆர்த்தியின் அண்ணன் போனில் மிரட்டியுள்ளான். கடந்த சில மாதங்களாக அண்ணன், அம்மா, அப்பா என மூவரும் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் ஆர்த்தி பேட்டியளித்துள்ளார். இப்படி குடும்பமே திட்டமிட்டு தான் இந்த கொலை செய்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

கொலையாளி சந்திரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். 60 வயதான சந்திரன் மட்டுமே இந்த கொலை செய்திருக்க முடியாது. கண்டிப்பாக பலர் சேர்ந்து தான் கொலை செய்திருக்க வேண்டும்; அதனால் அனைவரையும் கைது செய்ய வேண்டுமென்று உறவினர்கள் போராடி வருகிறார்கள்.

சமீபத்தில் நடந்த சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின், வைரமுத்து படுகொலைகளை அடுத்து தமிழ்நாடு முழுவதும் ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் போராடிக்கொடு இருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது. இதை மக்கள் அதிகார கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு அரசே

  • இந்த ஆணவக் கொலைக்கு காரணமான ஆர்த்தியின் குடும்பத்தினர் அனைவரையும் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடை!
  • பாதிக்கப்பட்ட ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கு!
  • சாதி, மதம் கடந்த திருமணங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடு!
  • ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்று!
  • ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடை செய்!
  • ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யை தடை செய்!

சாதி, மதம் கடந்து காதலிக்க, திருமணம் செய்ய ”வேண்டும் ஜனநாயகம்!” என முழங்குவோம்.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க