26.10.2025

தஞ்சை: பாபநாசம், கபிஸ்தலம் – தலித் மக்கள் மீது
ஆதிக்க சாதி வெறியர்கள் தாக்குதல்!

ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்வதற்கு
மாபெரும் மக்கள் இயக்கங்களை கட்டி எழுப்புவோம்!

பத்திரிகை செய்தி

தீபாவளி (20.10.2025 ஆம் நாள்) அன்று பாபநாசம், கபிஸ்தலம் மேட்டுத்தெருவில் தலித் மக்கள் வாழக்கூடிய பகுதிக்கு செல்லும் சாலையின் நடுவில் ஆதிக்க சாதி வெறியர்கள் வாகனத்தை நிறுத்தி, மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞர்களை கடுமையாக அவர்கள் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் தலித் மக்கள் வாழக்கூடிய பகுதியில் நுழைந்து தலித் மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்த பின் சுமார் 50 ஆதிக்க சாதி வெறியர்கள் தலித் மக்கள் மீது தாக்குதல் செய்த நிலையில் எட்டு பேர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதி வெறியர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்வதும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க