28.10.2025

கிருஷ்ணகிரி மாவட்டம்: பருவமழையால் பயிர்கள் சேதம்!

பத்திரிகை செய்தி

டகிழக்கு பருவமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாகவே பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, உரிகம் உள்ளிட்ட மலை மற்றும் வனம் சார்ந்த பகுதி மானாவாரி நிலங்களில் வேளாண் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் கேழ்வரகு பயிரை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில் கதிர் பிடித்து அடுத்த மாதம் அறுவடைக்கு தயார் நிலையில் கேழ்வரகு பயிர்கள் இருந்தன. கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் அஞ்செட்டி, உரிகம், தின்னூர், அத்திக்கோட்டா, எஸ்.குருபட்டி மற்றும் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை நிர்வாகமே!

  • கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளை போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்!
  • வடகிழக்கு பருவ மழையால் சேதம் அடைந்த பயிர்களை கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கு!


இவண்,
தோழர் இரஞ்சித்,
கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க