
29.10.2025
பாசிச பாஜக-வின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR!
வாக்குரிமையை மக்களிடமிருந்து பறிக்கும் பாசிச நடவடிக்கையே!
கண்டன அறிக்கை
அடுத்த வருடம் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடை பெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் SIR-ஐ நடைமுறைப்படுத்த உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலமாக இலட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டன. வாக்குரிமை பறிக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையானவர்கள் சிறுபான்மை மற்றும் தலித் மக்களே. அவர்களால் மீண்டும் வாக்குரிமை பெற முடியவில்லை.
தமிழ்நாட்டில் மழைக்காலமான நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை SIR பணியைத் தொடங்க உள்ளதென்பது தமிழ் நாட்டிலும் பலரின் வாக்குரிமையை பறிப்பதற்கான சதியே. மேலும் பீகாரில் நடைபெற்றது போல ஒரேமுகவரியில் பலரை இணைத்து தேர்தல் மோசடியை அரங்கேற்றும். பாசிச பாஜக அரசின் மற்றொரு கிளையாக மாறியுள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர் திருத்தம் மேற்கொள்ள தகுதியில்லை.
SIR-க்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். அடிமை அதிமுகவோ, தனது மூதாதையர்களின் வழியில் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது SIR வரவேற்றுள்ளது.
ஆகவே வாக்குரிமையை மக்களிடமிருந்து பறிக்கும், பாஜக-வின் பாசிச உறுப்பான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை மக்கள் அதிகார கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR க்கு எதிராக தமிழ்நாடு ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





